தகுதியானவர்களை களமிறக்குங்கள்

0 460

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் எதிர்­வரும் 18 ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் 21ஆம் திகதி சனிக்­கி­ழமை வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தேசிய தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதம் 10 ஆம் திக­திக்கு முன்னர் நடத்த ஆணைக்­குழு உத்­தே­சித்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேட்­பு­மனு கோரப்­பட்­டுள்ள போதிலும் நாட்டின் பொரு­ளா­தார நிலைமை, ஆட்­சி­யி­லுள்ள தரப்­பி­னரின் விருப்பு வெறுப்­பு­களைத் தாண்டி இத் தேர்தல் நடக்­குமா என்ற சந்­தே­கமும் நில­வு­கி­றது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதவிக் காலம் கடந்த வருடம் முடி­வுக்கு வந்த நிலையில் ஒரு வருடம் நீடிப்பு வழங்­கப்­பட்­டது. அதுவும் நிறை­வுக்கு வரு­கின்ற நிலை­யி­லேயே தேர்­தலை நடாத்த வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது. எனினும் நாட்டு நிலை­மை­களை காரணம் காட்டி தேர்­தலை ஒத்­தி­வைத்தால் அது தொடர்பில் நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தாக தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­புகள் எச்­ச­ரித்­துள்­ளன. இத­னி­டையே தேர்­தலை நடத்தக் கூடாது என்றும் நீதி­மன்றில் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றாக சிக்­கல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே வேட்­பு­மனுத் தாக்கல் செய்­வ­தற்­கான திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேட்­பு­மனுத் தாக்கல் செய்­வ­தற்கு இன்னும் இரண்டு வார காலங்­களே மீத­மி­ருக்­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­படத் தொடங்­கி­யுள்­ளன. கட்­சி­க­ளுக்கு உள்­ளேயும் கட்­சி­க­ளுக்கு இடை­யேயும் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வியூ­கங்கள் வகுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந் நிலை­யில்தால் முஸ்லிம் கட்­சி­களும் இது குறித்த பேச்­சுக்­க­ளிலும் வேட்­பாளர் தெரி­வு­க­ளிலும் தமது கவ­னத்தைச் செலுத்­தி­யுள்­ளன. கடந்த முறை சுமார் 9000 பேர் உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­டனர். இதனால் இவர்­க­ளுக்­காக மாதாந்தம் பெருந்­தொகைப் பணத்தை சம்­ப­ள­மாக வழங்க வேண்­டிய நிர்ப்­பந்தம் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டது. இதனைக் கருத்­திற்­கொண்டு நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் 4000 பேரே உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதற்கமைய எல்லை நிர்ணயமும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மீளமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் இறு­தி­யாக பதவி வகித்­த­வர்­களில் அரை­வாசித் தொகை­யி­னரே தெரிவு செய்­யப்­ப­டுவர். எண்­ணிக்­கையில் குறைவு ஏற்­ப­டு­வது ஒரு பிரச்­சி­னை­யல்ல. ஆனால் தகு­தி­யா­ன­வர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பதே நமது கரி­ச­னை­யாகும்.

குறிப்­பாக உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் பிர­தே­சத்தில் சமூகப் பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள், ஆசி­ரி­யர்கள், அர­சியல் கட்­சி­களின் தீவிர ஆத­ர­வா­ளர்கள், வியா­பா­ரிகள், உல­மாக்கள் என பல­த­ரப்­பட்­டோரும் போட்­டி­யி­டு­வது வழக்கம். இவர்­களில் மக்­க­ளுக்­காக தம்மை அர்ப்­ப­ணித்து சேவை­யாற்றக் கூடிய, ஊழ­லற்ற, நேர்­மை­யா­ன­வர்­களை வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்க வேண்­டி­யது அர­சியல் கட்­சி­க­ளி­னதும் சுயேட்சைக் குழுக்­க­ளி­னதும் பொறுப்­பாகும்.

கடந்த காலங்­களில் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளாக பதவி வகித்­த­வர்கள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. ஊழல் மோச­டிகள், போதைப் பொருள் வர்த்தகம், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய பலர் ஒவ்வொரு பிரதேசத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படக் கூடாது. அவர்களுக்குப் பதிலாக பிரதேசத்தில் மக்களின் நன்மதிப்பை வென்ற, நேர்மையான மனிதர்கள் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும்.

பிர­தே­சத்தில் மக்கள் எதிர்­நோக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். அப் பொறுப்பை சரி­வர நிறை­வேற்றக் கூடிய, அதே பகு­தியில் மக்­க­ளோடு மக்­க­ளாக வசிக்­கின்ற, சபை அமர்­வு­களில் தொடர்ச்­சி­யாக பங்­கேற்று மக்­க­ளது பிரச்­சி­னை­களைப் பேசு­கின்­ற­வர்­க­ளுக்கே உரிய இடம் வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று இளை­ஞர்கள் மற்றும் பெண்­க­ளுக்கும் கணி­ச­மான வாய்ப்பு வழங்­கப்­பட வேண்டும்.

இதனை மேலும் வலி­யு­றுத்தும் வகையில் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பங்­கு­பற்­று­த­லுடன் வேட்­பா­ளர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய தகு­திகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பான பிர­க­டனம் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அவை இன்­றைய விடி­வெள்­ளியில் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன. குறித்த பிர­க­ட­னத்தில் உள்ள வழி­காட்­டல்­க­ளையும் அர­சியல் கட்­சிகள் கருத்திற் கொண்டு செயற்­பட வேண்­டி­யது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.
என­வேதான் முஸ்லிம் பிர­தே­சங்­களில் சிறந்த வேட்பாளர்களை களமிறக்குவதற்கான அழுத்தங்களை அவ்வப்பகுதி சிவில் சமூகம் வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.