தெற்கு எத்தியோப்பியாவில் இனக் கலவரம் 20 இற்கும் மேற்பட்டோர் பலி

0 830

இரண்டு நாட்­க­ளாக தெற்கு எத்­தி­யோப்­பி­யாவில் இரு இனக் குழுக்­க­ளுக்­க­ளி­டையே ஏற்­பட்ட தீவி­ர­மான கல­வரம் கார­ண­மாக 21 பேர் பலி­யா­கி­யுள்ள அதே­வேளை நூற்­றுக்­க­ணக்­கானோர் அண்டை நாடான கென்­யா­வுக்கு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

எத்­தி­யோப்­பி­யாவின் பெரும்­பான்மை ஓரமோ இனத்­தி­ன­ராலும், சோமாலி இனக் குழு­வி­ன­ராலும் தமக்கே சொந்­த­மான பிராந்­தி­ய­மாக உரிமை கோரப்­படும் கென்­யாவின் எல்­லையில் அமைந்­துள்ள மொயாலே நக­ருக்கு அருகில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­க­ளி­லேயே இக்­க­ல­வ­ரங்கள் இடம்­பெற்­றன.

இந்தக் கல­வ­ரங்கள் கார­ண­மாக 61 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அர­சுடன் தொடர்­பு­டைய ஊட­க­மான பானா ரேடியோ ஒரோ­மியா, பிராந்­திய மாநில தொடர்­பாடல் அலு­வ­ல­கத்தை மேற்­கோள்­காட்டி தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

எத்­தி­யோப்­பி­யாவின் நவீன வர­லாற்றில் முத­லா­வது ஒரோமே தலை­வ­ரான அபீ அஹமட் கடந்த ஏப்ரல் மாதம் பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து நாட்டின் தென்­ப­கு­தியில் ஒரோமோ இனத்­த­வர்­க­ளுக்கும் ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கும் இடை­யே­யான கல­வ­ரங்கள் ஆரம்­ப­மா­கின.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட ஐக்­கிய நாடுகள் சபையின் உள்­ளக அறிக்கை மற்றும் ரொய்ட்டர் செய்தித் தாப­னத்தின் மீளாய்வு என்­ப­ன­வற்றின் பிர­காரம் பாரிய ஆயு­தங்கள் இதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த முரண்­பாடு கென்­யா­விலும் பரவும் ஆபத்து காணப்­ப­டு­கின்­றது.

பல டசின்­க­ணக்­கான மக்கள் இந்த சண்டை கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த ஆண்டில் இதற்கு முன்னர் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளை­விட  தீவி­ர­மாகக் காணப்­ப­டு­வ­தாக எத்­தி­யோப்­பிய தலை­ந­க­ரி­லுள்ள மொயாலே மக்­க­ளுடன் தொடர்­பு­களைக் கொண்­டுள்ள வட்­டா­ரங்­களின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

நூற்­றுக்­க­ணக்­கான எத்­தி­யோப்­பிய மக்கள் எல்லை கடந்து கென்­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்­ளதை மொயாலே உப­மா­நில பிரதி ஆணை­யாளர் பற்றிக் முமாலி உறு­திப்­ப­டுத்­தினார்.

இவ்­வாண்டின் ஆரம்­பத்தில் நாட்டின் தென் பகு­தியில் கிளர்ச்­சிக்­கா­ரர்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் என எத்­தி­யோப்­பிய இரா­ணு­வத்தால் தெரி­விக்­கப்­படும் நட­வ­டிக்­கையில் பல பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து 5000 எத்­தி­யோப்­பி­யர்கள் கென்­யாவில் தஞ்சம் கோரும் நிலைமை ஏற்­பட்­டது.

ஒரோமோ இனத்­த­வர்­க­ளுக்கும் சோமாலி கர்ரே போரா­ளி­க­ளுக்கும் இடை­யே­யான மோதலின் போது மக்கள் கொல்­லப்­பட்­டனர், வர்த்­தக வளா­கங்கள் மீது குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன, வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன என கென்யா பகுதி மொயா­லே­யி­லுள்ள மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ரான வாரியோ சோறா தெரிவித்தார்.

நாட்டின் மிகப் பெரும் பகுதியான ஒரோமியா பிராந்தியத்தில் எல்லைப் பிரச்சினைக்கு மேலதிகமாக குறைந்தது நான்கு வகையான இனப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதன் மூலம் மேலும் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.