திணைக்களத்துக்கு வராமலேயே ஹஜ் பதிவுக் கட்டணத்தை மீள பெறலாம்

அரச ஹஜ்­ கு­ழுவின் தலைவர் தெரி­விப்பு

0 257

கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­லகள் திணைக்­க­ளத்­துக்கு நேரில் விஜயம் செய்­யா­மலே பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென அரச ஹஜ்­கு­ழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்டும் இது­வரை ஹஜ் வாய்ப்பு கிடைக்­காத விண்­ணப்­ப­தா­ரிகள் தங்கள் பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப் பெற்­றுக்­கொள்­ளலாம் என திணைக்­களம் அறி­வித்­த­தை­ய­டுத்து அதி­க­மானோர் இதில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

4800 விண்­ணப்­ப­தா­ரி­களில் சுமார் 500 பேர் இது­வரை பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் நவம்பர் மாதத்தில் சுமார் 250 பேர் பதிவுக் கட்­ட­ணத்தை மீளப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

திணைக்­க­ளத்­துக்கு நேரில் வருகை தராது பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்ள விரும்பும் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது கட­வுச்­சீட்டின் பிரதி, பதி­வுக்­கட்­டணம் செலுத்­திய ரசீது, விலாசம் மற்றும் வங்கி கணக்­கி­லக்கம் என்­ப­ன­வற்றை பதிவுத் தபால் மூலம் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும். அத­னுடன் திணைக்­க­ளத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்­ணப்ப படி­வத்தை பூர்த்தி செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

திணைக்­களம் ஆவ­ணங்­களைப் பரி­சீ­லித்த பின்பு விண்­ணப்­ப­தா­ரியின் வங்கிக் கணக்­கிற்கு பதி­வுக்­கட்­ட­ணத்தை அனுப்பி வைக்கும்.

விண்­ணப்­ப­தா­ரியின் பெயரில் வங்கி கணக்­கி­லக்கம் இல்­லையேல், வேறு நபரின் பெயருக்கு குறிப்பிட்ட பதிவுக்கட்டணம் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனின் அது தொடர்பில் விண்ணப்பதாரி சத்தியக்கடதாசியொன்றும் அனுப்பப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.