சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் கொழும்பில்; கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பலஸ்தீனுக்கு நீதி எனும் தொனிப் பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் ஒலிம்பஸ் மண்டபத்தில் நவம்பவர் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா சைத், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், சர்வதேச உறவுகள் தொடர்பான நிபுணர் குசும் விஜேதிலக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் செயலாளர் பௌசர் பாரூக் நன்றியுரை நிகழ்த்துவார். இந் நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீனு விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.–Vidivelli