முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம்: புதிய குழுவுக்கு அறிக்கை சமர்பித்தது ஜம்இய்யதுல் உலமா

0 337

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம் தீன் தலை­மை­யி­லான குழு­விற்கு அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பித்­துள்­ளது.

மாற்­றுக்­கொள்­கை­களைக் கொண்­டுள்ள உல­மாக்­களும் இவ்­வ­றிக்­கைக்கு உடன்­பட்­டுள்­ளனர். எனவே காலம் தாழ்த்­தப்­ப­டாது சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

மேலும் இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் சட்ட ஆக்கம் தொடர்பாக விசேட அறிவு மற்றும் அனு­ப­வ­முள்­ள­வர்­களே கருத்­து­களை வெளி­யி­ட­வேண்டும் அன்றி சமூக வலைத்­த­ளங்­களில் எவ்­வித அனு­பவம், அறிவு இல்­லா­த­வர்கள் விரும்­பி­ய­படி கருத்து தெரி­விப்­பது தவிர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென அவர் கூறினார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான உலமா சபையின் நிலைப்­பாடு பற்றி வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் விப­ரிக்­கையில்,
முஸ்லிம் பெண்­களின் திரு­மண வயது 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். 16 –18க்கும் இடைப்­பட்ட பெண்­களின் திரு­மணம் காதி­நீ­த­வானின் அனு­மதி பெற்றே பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும். பெண்கள் நியா­ய­ச­கா­யர்­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும். மத்­ஹ­புகள் பாது­காக்­கப்­பட வேண்டும்.

திரு­ம­ணப்­ப­திவு கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும். நிக்காஹ் மாத்­திரம் செய்து கொண்டு தாம­தித்து விவாக பதிவு மேற்­கொள்­ளு­ம்போது அப­ரா­தமும் அற­வி­டப்­ப­ட­வேண்டும். மணப்­பெண்ணின் கையொப்பம் திரு­ம­ணப்­ப­திவில் கட்­டா­ய­மாக்கப்பட­வேண்டும். வொலியின் அனு­மதி அவ­சியம் என்­றாலும் மணப்பெண் விரும்­பினால் வொலியின் அனு­மதி தேவை­யற்றதாக்­கப்­ப­டலாம்.

பல­தார திரு­மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு-­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். அனு­ம­தி­யின்­போது காதி­நீ­தவான் மண­ம­கனின் பொரு­ளா­தார வச­தி­யினைக் கருத்­திக்­கொள்ள வேண்டும். மத்தாஹ் கொடுப்பனவு உள்ளடக்கப்பட வேண்டும் எனும் திருத்தங்களுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும்,மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட உலமாக்களும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றார்.- மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

மேலும் இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் சட்ட ஆக்கம் தொடர்பாக விசேட அறிவு மற்றும் அனு­ப­வ­முள்­ள­வர்­களே கருத்­து­களை வெளி­யி­ட­வேண்டும் அன்றி சமூக வலைத்­த­ளங்­களில் எவ்­வித அனு­பவம், அறிவு இல்­லா­த­வர்கள் விரும்­பி­ய­படி கருத்து தெரி­விப்­பது தவிர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென அவர் கூறினார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான உலமா சபையின் நிலைப்­பாடு பற்றி வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் விப­ரிக்­கையில்,
முஸ்லிம் பெண்­களின் திரு­மண வயது 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். 16 –18க்கும் இடைப்­பட்ட பெண்­களின் திரு­மணம் காதி­நீ­த­வானின் அனு­மதி பெற்றே பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும். பெண்கள் நியா­ய­ச­கா­யர்­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும். மத்­ஹ­புகள் பாது­காக்­கப்­பட வேண்டும்.

திரு­ம­ணப்­ப­திவு கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும். நிக்காஹ் மாத்­திரம் செய்து கொண்டு தாம­தித்து விவாக பதிவு மேற்­கொள்­ளு­ம்போது அப­ரா­தமும் அற­வி­டப்­ப­ட­வேண்டும். மணப்­பெண்ணின் கையொப்பம் திரு­ம­ணப்­ப­திவில் கட்­டா­ய­மாக்கப்பட­வேண்டும். வொலியின் அனு­மதி அவ­சியம் என்­றாலும் மணப்பெண் விரும்­பினால் வொலியின் அனு­மதி தேவை­யற்றதாக்­கப்­ப­டலாம்.

பல­தார திரு­மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு-­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். அனு­ம­தி­யின்­போது காதி­நீ­தவான் மண­ம­கனின் பொரு­ளா­தார வச­தி­யினைக் கருத்­திக்­கொள்ள வேண்டும். மத்தாஹ் கொடுப்பனவு உள்ளடக்கப்பட வேண்டும் எனும் திருத்தங்களுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும்,மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட உலமாக்களும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.