சமூக, சமய பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த நவாஸ் கபூர்

0 444

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை வர­லாற்றில் பாரிய சமூக, சமயப் பணி­களை முன்­னெ­டுத்த குடும்­பத்தின் மற்­று­மொரு தலை­முறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. கொழும்பு மத்­திய தேர்தல் தொகு­தியின் முத­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மர்ஹூம் பழீல் ஏ கபூரின் மக­னான இவர் இலங்­கையில் பெரும் நன்­கொ­டை­களை வழங்­கிய வர்த்­த­க­ரான மர்ஹூம் என்.டி.எச்.அப்துல் கபூரின் பேர­னு­மாவார்.புகழ் பெற்ற கபூர் கட்­டிடம், கபூர் & சன்ஸ் வர்த்­தக நிறு­வ­னங்கள் இக்­கு­டும்­பத்­த­வர்­க­ளையே சாரும். நேர்­மை­யாக, சமூக மார்க்கப் பற்­று­டனும், சமூக விருப்­பார்­வத்­து­டனும் வாழ்ந்த இவர் தனது 96 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திக­தி வபாத்­தா­னார்.

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியை தமது சொந்த நிதிப் பங்­க­ளிப்பில் ஸ்தாபித்த இக்­கு­டும்­பத்தின் நான்காம் தலை­மு­றை­யினர் அதன் இருப்பை கேள்­விக்­குட்­ப­டுத்தும் சம­கா­லத்தில், இவரின் மறைவு ஆழ்ந்த சிந்­த­னைக்­கு­ரி­யது. சமூகம் பற்­றி­ய கவ­லை­யு­டனும் மார்க்கம் பற்­றிய பிரக்­ஞை­யு­டனும் வாழ்ந்த ஒருவர். அவர் மறைந்­தாலும் அவ­ருக்­காகச் செய்­கின்ற கைமாறு, அவ­ரது பணி­களை ஞாப­கப்­ப­டுத்­து­வதும். அவ­ரு­டைய சேவை­களை எடுத்துச் சொல்­வதும், எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு அதனைச் சரி­யாகச் சொல்­வதும் தான் மிகப் பொருத்­த­மா­னது என நினைக்­கின்றேன்.

சமூக நல­னுக்­காக மிகவும் தூர நோக்­கோடு 1967 இல் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவு தோற்றம் பெற்­றது. பின்னர் அது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி என்ற பெயரில் இயங்­கி­யது.1978 ஆம் ஆண்டு எனது தந்­தை­யான மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்­காரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தில் இணைந்த அவர்,1980 இல் நாட­ளா­விய ரீதியில் பங்­கு­பற்­றிய பிர­தி­நி­தி­களைக் கொண்டு கொழும்பு ரன்­முத்து ஹோட்­டலில் நடை­பெற்ற பிர­மாண்­ட­மான கூட்­டத்­தின்­போது பாக்கீர் மாக்கார் அவர்கள் புதிய அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் தேசிய தலை­வ­ரா­கவும் அல்ஹாஜ் ஏ.எம். நசீர் பொதுச் செய­லா­ள­ரா­கவும், அல்ஹாஜ் நவாஸ் ஏ.கபூர் பொரு­ளா­ள­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்­டர்கள். தலை­வ­ரோடு அவர் நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் பயணம் மேற்­கொண்டு அதன் வளர்ச்­சிக்கும் சமு­தாய மேம்­பாட்­டிற்கும் அய­ராது உழைத்­தார். நவாஸ் ஏ.கபூர் ஸ்தாபக பொரு­ளா­ராக கட­மை­யாற்­றி­னாலும் அவ­ரது பங்­க­ளிப்பு பரந்த ஒன்­றாக அமைந்­தி­ருந்­தது.

மேலும் குருந்­த­லாவ சென் தோமஸ் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்தின் ஆரம்ப தொகு­தியின் தலை­வ­ராக செயற்­பட்­டுள்ளார். கொழும்பு ஸாஹிறாக் கல்­லூரி ஆளுநர் சபை தலை­வ­ராக இருந்­துள்ளார், மரு­தானை பள்ளி பரி­பா­லன சபையின் தலை­வ­ராக மர­ணிக்கும் வரை செயற்­பட்டார்.

இவர்­க­ளு­டைய நிர்­வாக காலத்தில் மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூரி நிர்­வாகம், ஆசி­ரியர் குழாம் மற்றும் மாண­வர்கள் இடையே சுமு­க­மான தொடர்­பு­களை பேணி­ய­வ­ராவார்.வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆ தின தொழு­கை­க­ளுக்­காக கபூ­ரியா சென்று மாண­வர்­களின் குத்பா உரை­களை செவி­ம­டுத்து திருப்­திப்­ப­டுவார்.

அல­விய்யா ஸக்­கியா குழுவின் முகா­மை­யா­ள­ரா­கவும், வை எம் எம் ஏ அமைப்பின் தலை­வ­ரா­கவும், அகில இலங்கை ஹஜ் குழுவின் தலை­வ­ரா­கவும், டீ.பி.ஜாயா ஞாப­கார்த்த நிதி­யத்தின் தலை­வ­ரா­கவும், அகில இலங்கை மாணிக்கக்கல் மற்றும் ஆப­ரண சங்­கத்தின் தேசியத் தலை­வ­ரா­கவும்,Ceylon Chamber of Commerce இன் தலை­வ­ரா­கவும், இலங்கை மேசைப்பந்­தாட்ட சங்­கத்தின் தலை­வ­ரா­கவும், மூர் விளை­யாட்டுக் கழ­கத்தின் தலை­வ­ரா­கவும் என பல்­வேறு மட்­டங்­களில் பல்­பக்க சமூக சேவை பரப்பில் தன்­னலம் பாராமல் செயற்­பட்­டுள்ளார். கோட்டைப் பகு­தியில் வர்த்­தக நடவ­டிக்­கைகள் மற்றும் அரச தொழி­லா­ளர்­களின் நலன் கருதி செத்தம் வீதி பள்­ளி­வா­சலை இன்­றுள்ள அளவில் விசா­ல­மாக்­கி­யதில் பெரும் பங்கு இவ­ருக்­குண்டு. கடும் சுக­யீ­ன­முற்று நடப்­ப­தற்கு முடி­யாத கட்டம் வரும் வரை ஐநே­ரத்­தொ­ழு­கைக்­காக கொழும்பு செத்தம் வீதி பள்­ளி­வா­ச­லுக்கே சென்றார்.

மஹ­ர­கம கபூ­ரியா வளா­கத்தை அண்­டிய பொது விளை­யாட்­ட­ரங்கம், இரத்­ம­லானை கட்­புல செவிட்­பு­ல­னற்றோர் நிலையம் என்­பன இவ­ரது நன்­கொ­டை­களே.
எனது தந்­தையார் பழைய பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தி­யிலும், சபா­நா­ய­கரின் வாசஸ்­த­ல­மான மும்தாஜ் மஹா­லிலும் ஏற்­பாடு செய்­த முஸ்லிம் விவ­காரம் சம்­பந்­தப்­பட்ட சகல கூட்­டங்­க­ளிலும் அவரின் பங்­கேற்பை நான் சட்­டக்­கல்­லூரி மாண­வ­னாக இருக்கும் போது அவ­தா­னித்­தமை இன்றும் நினைவில் நிழ­லா­டு­கி­றது.

மர்­ஹூம்­க­ளான என்.டி.எச்.அப்துல் கபூர், பழீல் ஏ கபூர் ஆகி­யோரின் உன்­னத சமூக நல மேம்­பாட்டு கரி­சனை நவாஸ் ஏ கபூ­ரி­டமும் குடிகொண்­டி­ருந்­தமை அவரின் பரோ­ப­கார தன்­மை­யி­லி­ருந்து புலப்­ப­டு­கி­றது. இக்­கு­டும்­பத்­தினர் இந்­நாட்டு முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆற்­றிய மகத்­தான பணி­களை மனதில் கொண்டு அவர்கள் மீதான இரக்­கத்தின் வெளிப்­பா­டாக எனது தந்­தையார் அவர்­களை அடிக்­கடி நினை­வூட்­டு­வதும் எனது நினைவில் நிழ­லா­டு­கி­றது.

மர்ஹூம் பழீல் ஏ கபூரின் மறை­வை­யொட்டி பாரா­ளு­மன்­றத்தில் அவர் மீதான அநு­தாப பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட போது முன்னாள் ஜனா­தி­பதி மறைந்த ரண­சிங்க பிரே­ம­தாஸ ஒரு வர­லாற்று இர­க­சி­யத்தை முதன் முத­லாக வெளிப்­ப­டுத்­தி­யமை எனது நினை­வுக்கு வரு­கி­றது.“ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்தா காணியை கொள்­வ­னவு செய்­வ­தற்கு பழீல் ஏ கபூர் கூடிய நிதிப்­பங்­க­ளிப்பை வழங்­கிய ஒருவர்” என அவர் குறிப்­பிட்டார். இந்த விட­யத்தை வெளிப்­ப­டுப்­ப­டுத்­து­வ­தற்கு “பழீல் ஏ கபூர் ஒரு­போதும் விரும்­பாத, அதை வெளிப்­ப­டுத்­தாத உன்­னத நிலைப்­பாட்டை கொண்­டி­ருந்தார்” என்­பதை தொடர்ந்தும் தனது அநு­தாபப் பிரே­ரணை உரையில் பிரே­ம­தாஸ அவர்கள் குறிப்­பிட்­டார்கள். இந்த அநு­தாப பிரே­ர­ணையைத் தொடர்ந்து அப்­போ­தைய சப­ாநா­ய­க­ராக பணி­யாற்­றிய எனது தந்­தை­யாரின் குறிப்­பு­க­ளு­ட­னையே ஹன்சார்ட் பதி­வு­க­ளுக்­காக அனுப்­பப்­பட்­டது.

அவர் வலது கையால் கொடுப்­பது இடது கைக்கு தெரி­யாமல் இருக்­கட்டும் என்ற கோட்­பாட்டை நிதர்­ச­ன­மாக்­கிய உதாரண புருஷர் என்றால் அது மிகையாகாது.
டி.ஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே.ஆர் ஜயவர்தன போன்ற தலைவர்களின் நன்மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமாக வாழ்ந்த ஒரு மனிதராவார்.
எனது இந்த நினைவு முற்குறிப்பை இவ்வாறு நிறைவு செய்கிறேன்.ஒருவரின் மரணத்தின் பிற்பாடு அவர் தொடர்பான நலவுகளை பேசுமாறு இஸ்லாம் எமக்கு கற்பித்த கற்பிதங்களின் பிரகாரம் அவர் சார்ந்த நலவுகளையே இங்கு பதிவிட்டேன்.நலவுகளை ஏற்று குறைகளை மன்னித்து மேலான சுவனபதியை வழங்க தூய மனங்கொண்டு பிரார்த்திக்கிறேன். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.