“மரண தண்டனை நிறைவேற்றிவிட்டோம். மார்க்க கடமைகளை செய்து கொள்ளுங்கள்” என தகவல் அனுப்பினர்

கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்

0 346

எம்.எஸ்.எம்.நூர்தீன்

“வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டிக்க வேண்டும். அவர்­களை எங்கு கொண்டு சென்று கொலை செய்­தார்கள், அவர்­க­ளது உட­லங்­களை எங்கு வைத்­துள்­ளார்கள் என்­பதை இந்த ஆணைக்­குழு கண்­ட­றிய வேண்டும்” என காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.எல். அம்ஜத் கோரிக்கை விடுத்தார்.

காத்­தான்­கு­டியில் இடம் பெற்ற வலிந்து காணா­ம­லக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர் இக் கோரிக்­கையை முன்­வைத்தார்.
உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலை­மை­யி­லான இந்த ஜனா­திபதி ஆணைக்­குழு முன்­னி­லையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­குடி,ஏறாவூர் மற்றும் ஓட்­ட­மா­வடி போன்ற பிர­தே­சங்­களைச் சேர்ந்த வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள் சாட்­சி­ம­ளித்­தனர்.

கடந்த சனி (22) மற்றும் ஞாயிறு (23) ஆகிய இரு தினங்­க­ளிலும் விசா­ர­ணைகள் காத்­தான்­குடி ஹோட்டல் பீச்வே மண்­ட­பத்தில் இடம் பெற்­றன. இந்த விசா­ர­ணை­க­ளின்­போது பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இவ் விசா­ர­ணை­களின் போது காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.எல்.அம்ஜத் என்­பவர் ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்டார்.

“எனது தந்தை உமர்தீன் அப்துல் லத்தீப் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி மண்­மு­னை­யி­லி­ருந்து கொக்­கட்­டிச்­சோ­லை­யி­லுள்ள நூல­கத்­துக்கு சிறிய தோணி மூலம் சென்­ற­போது விடு­தலைப் புலி­களால் கடத்திச் செல்­லப்­பட்டார்.
கடத்­தப்­பட்ட முதல் மூன்று வாரங்கள் எனது தாயார் மண்­மு­னை­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிரு­வா­கிகள், குடும்ப உற­வி­னர்­க­ளுடன் இணைந்து பல திசை­க­ளிலும் தேடியும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

மூன்று வாரங்­களின் பின்னர் எமது மண்­முனை பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தந்த ஒரு ஆயுதக் குழு­வினர் உமர்­லெவ்வை அப்துல் லத்தீப் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றி­விட்டோம். உங்­க­ளது மார்க்க கட­மை­களை செய்து கொள்­ளுங்கள் எனக் கூறி­விட்டு அங்­கி­ருந்து சென்­றுள்­ளார்கள்.

எனது தந்தை அக் கால கட்­டத்தில் காத்­தான்­கு­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் மண்­முனைப் பிர­தே­சத்தில் வசிப்­பி­ட­மா­கவும் கொண்­டி­ருந்தார்.
எனது தந்தை மும்­மொ­ழி­யையும் சர­ள­மாக பேசக் கூடி­யவர். அவரை என்ன கார­ணத்­துக்­காக கடத்திக் கொண்டு போய் கொலை செய்­தார்கள் என இது­வ­ரைக்கும் தெரி­ய­வில்லை.

அவர் கடத்­தப்­பட்ட போது எனக்கு 3 வயது. எனது சகோ­த­ரிக்கு 4 வயது. எனது இளைய சகோ­தரி தாயின் வயிற்றில். தாய் 7 மாதக் கர்ப்­பி­ணி­யாக இருந்தார்.
அன்­றி­லி­ருந்து 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக எங்­க­ளது தாய் மிகவும் கஷ்­டப்­பட்டே எங்­களை வளர்த்து வந்தார்.

தந்தை கடத்­தப்­பட்ட பின்னர் நாங்கள் சந்­தித்த துய­ரங்கள் வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யா­தவை. இது எங்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, இலங்­கையில் கடத்­தப்­பட்டு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட அத்­தனை பேரு­டைய நிலை­மையும் இது தான்.

வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களை இந்த ஆணைக்­குழு கண்­டு­பி­டிக்க வேண்டும். அவர்­களை எங்கு கொண்டு போய் கொலை செய்­தார்கள், அவர்­க­ளது உட­லங்­களை எங்கு வைத்­துள்­ளார்கள் என்­பதை இந்த ஆணைக்­குழு கண்­ட­றிய வேண்டும் என்­பதே எனது கோரிக்­கை­யாகும்.

பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு சிறிது பணத்­தினை நஷ்­ட­யீ­டாக கொடுத்தால் அவர்­க­ளது வாயை அடைத்து விடலாம் என சிலர் நினைக்­கின்­றார்கள். அதற்கு நாம் இணங்­க­மாட்டோம்.

இந்த கடத்­தல்­களை யார் செய்­தார்­களோ அக்­கு­ழு­வி­னரை இனம் கண்டு அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும். இழப்­புக்­கான நீதி­யையும் நியா­யத்­தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­பதே எனது வேண்­டு­கோ­ளாகும் என்றும் அம்ஜத் மேலும் குறிப்­பிட்டார்.

இதன் போது ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த தாயொ­ருவர் கருத்து தெரி­விக்­கையில், களு­வாஞ்­சி­குடி பிர­தே­சத்­துக்கு 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வியா­பா­ரத்­துக்கு சென்ற எனது கணவர் இது­வரை வீடு வர­வில்லை.

கடத்­தப்­படும் போது எனது கண­வ­ருக்கு வயது 28 ஆகும்.அப்­போது எனக்கு 26 வயது. எனக்கு மூன்று பெண் பிள்­ளைகள். மிகவும் கஷ்­டத்­துக்கு மத்­தியில் எனது பிள்­ளை­களை வளர்த்தேன்.

இது வரை எந்த நீதியும் நியா­யமும் கிடைக்­க­வில்லை. பல இடங்­க­ளிலும் தேடியும் எனது கணவர் கிடைக்­க­வில்லை. இப்­போதும் நாம் கஷ்­டத்­து­ட­னேயே வாழ்­கின்றோம் எனக் கூறினார்.

இன்­னு­மொரு சகோ­தரி கருத்து தெரி­விக்­கையில், எனது சகோ­தரன் 1990 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 12 ஆம் திகதி கல்­மு­னைக்கு சென்­றவர் குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டார். இது­வரை அவர் வீடு வந்து சேர­வில்லை. கடத்­தப்­படும் போது அவ­ருக்கு வயது 20. அவரின் இழப்பு எங்கள் குடும்­பத்­துக்கு பாரி­ய­ இ­ழப்­பாகும் என்றார். இது­வரை எந்த ஒரு நீதியும் நியாயமும் கிடைக்க வில்லை என தெரிவித்தார்.

இந்த இரு தினங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,மண்முனைப் பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர், ஓட்டமாவடி,வாழைச்சேனை, மீராவோடை பிரதேசங்களைச் சேர்ந்த 179 பேர் சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் கடத்­தப்­பட்ட வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் மரண அத்­தாட்­சிப்­பத்­திரம், பொலிஸ் முறைப்­பாட்டு பிரதி உட்­பட ஆவ­ணங்­களும் உற­வி­னர்­களால் ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்பிக்கப்பட்டன.- Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.