ஹஜ் பதிவுக் கட்டணத்தை 326 பேர் மீளப் பெற்றனர்

0 383

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரைக்­காக கடந்த வரு­டங்­களில் விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­டணம் செலுத்தி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்ள 4885 விண்­ணப்­பதா­ரிகளில் பலர் தாம் செலுத்­திய பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்­வதில் ஆர்வம் செலுத்தி வரு­வ­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

ஹஜ் யாத்­தி­ரைக்­காக பதிவு செய்து கொண்­டுள்ள இது­வரை ஹஜ் வாய்ப்பு கிடைக்­கா­துள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் 326 பேர் கடந்த திங்­கட்­கி­ழமை வரை பதிவுக் கட்­ட­ணங்­களை மீளப்­பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் பதி­வுக்­கட்­ட­ண­மாக 25,000 ரூபாவை செலுத்தி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்­து­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த காலங்­களில் இலங்­கைக்கு குறை­வான ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டமை கார­ண­மாக பெரும் எண்­ணிக்­கை­யா­னோ­ருக்கு ஹஜ் வாய்ப்பு கிடைக்­காமல் போனமை கார­ண­மாக அவர்கள் இது­வரை காத்­தி­ருந்­தனர்.

தற்­போது ஹஜ் யாத்­தி­ரைக்கு வய­தெல்லை விதிக்­கப்­பட்­டி­ருப்­பதால் 60 வய­துக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப் பெற்று வரு­கின்­றனர்.
கொழும்பு மாவட்­டத்­தி­லி­ருந்தே அதி­க­மானோர் கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­தி­ரைக்கு விண்­ணப்­பத்­தி­ருந்­தனர். இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து 1131 பேர் விண்­ணப்­பித்­துள்­ளனர் எனவும் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார். தினமும் சுமார் 10 விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்ப பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.