பேரியல் தலைமையிலான பெண்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

0 348

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேற்­சைக்­ கு­ழுக்­களின் தேர்தல் வேட்­பு­ம­னு­ப் பட்­டி­யலில் 50 வீத­மான பெண்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்­ரபின் தலை­மை­யி­லான பெண் அர­சியல் செயற்­பாட்­டாளர் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற பெண் உறுப்­பி­னர்கள் பிர­தமர் தினேஷ் குண­வர்­த­னவை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

அத்­தோடு பெண்­க­ளுக்கு சம­மான பிர­தி­நி­தித்­துவம் வழங்­காத கட்­சி­க­ளுக்கு தடை­வி­திக்­கு­மாறும் கோரி­யுள்­ளனர்.

நாட்டின் பல பகு­தி­களைச் சேர்ந்த முஸ்லிம் பெண் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள், அர­சியல் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் சிவில் சமூக பெண் செயற்­பாட்­டா­ளர்கள் அண்­மையில் பிர­தமர் தினேஷ் குண­வர்­த­னவை கொழும்பில் சந்­தித்து அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

இச்­சந்­திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளிக்­கையில் ‘முஸ்லிம் பெண்கள் அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­பு­வ­தில்லை என்று ஒரு தவ­றான கருத்து நில­வு­கி­றது. இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முஸ்லிம் பெண்கள் அனைத்து துறை­க­ளிலும் இன்று ஆர்வம் செலுத்­தி­யுள்­ளார்கள். பத­விகள் வகிக்­கி­றார்கள். அர­சி­ய­லிலும் ஆர்வம் உள்­ள­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். முஸ்லிம் பெண்கள் தீர்­மானம் மேற்­கொள்ளும் இடங்­க­ளிலும் இருக்க வேண்டும். பெண்­க­ளுக்கு அர­சி­யலில் சம­வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும்.

எங்­க­ளது கோரிக்­கைக்கு பிர­தமர் வர­வேற்பு தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெண்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள 10 வீத பிர­தி­நி­தித்­து­வத்தை 20 வீத­மாக அதி­க­ரிப்­ப­தற்கு பிர­தமர் தீர்­மா­னித்­தி­ருக்­கிறார். இதற்­கான அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்தை விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்.

உள்­ளூ­ராட்சி சபை­களில் மாத்­தி­ர­மல்ல மாகாண சபைகள் மற்றும் பாரா­ளு­மன்­றத்­திலும் பெண்­களின் விகி­தா­சாரம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். பிர­தமர் தேர்தல் சீர்­தி­ருத்த தெரிவுக்குழுவின் தலைவராக இருக்கிறார். அவரால் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும்.
முஸ்லிம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.