அசரிகம பள்ளிக்கு விசேட நிர்வாக சபை

0 333

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அநு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை முன்னெடுப்பதற்கு தற்­போ­தைய நிர்­வாக சபைக்குப் பதி­லாக விஷேட நிர்­வா­கி­களை நிய­மிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. விஷேட நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்­கு­மாறு வக்பு சபை­யிடம் கோர­வுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கி­யொ­ருவர் அண்­மையில் சக நிர்­வா­கி­யொ­ரு­வரால் தாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்தே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இக்­கொலைச் சம்­பவம் தொடர்பில் பூரண அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், அப்­பி­ர­தே­சத்­துக்குப் பொறுப்­பான கள உத்­தி­யோ­கத்­தரைக் கோரி­யி­ருந்­தது. அத்­தோடு அநு­ரா­த­புரம் பர­சன்­கஸ்­வெவ பொலி­ஸி­லி­ருந்தும் இக்­கொலைச் சம்­பவம் தொடர்­பான அறிக்கை கோரப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை திணைக்­க­ளத்தின் கள உத்­தி­யோ­கத்­தரின் அறிக்கை திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள நிலையில் பொலிஸ் அறிக்கை இது­வரை கிடைக்­கப்­பெ­ற­வில்லை என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
அறிக்கை கிடைக்கப்பெற்றதும் சந்தேக நபர்களான பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.