பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்ட 6 அமைப்புகளின் தடையை நீக்க அரசாங்கம் இணக்கம்

0 386

பாது­காப்பு அமைச்­சினால் தடை செய்­யப்­பட்­டுள்ள 11 முஸ்லிம் அமைப்­பு­க­ளி­லி­ருந்து 6 அமைப்­பு­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட பாது­காப்பு ஆலோ­ச­கரும், ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தா­னி­யு­மான சாக­ல­ ரத்­நா­யக்­கவின் தலை­மையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் 6 அமைப்­பு­களை தடை­ப்பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்­றதன் பின்பு, தடை­செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­பு­களின் தடையை நீக்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரிஸ், இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருந்­தனர். அதற்­கி­ணங்க குறிப்­பிட்ட கலந்­து­ரை­யாடல் இடம் பெற்­றது.

கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எச்.எம்.எம். ஹரிஸ், இஷாக் ரஹ்மான் மற்றும் பாது­காப்பு அமைச்சின் உய­ர­தி­கா­ரிகள் பங்கு கொண்­டி­ருந்­தனர்.
குறிப்­பிட்ட 6 அமைப்­பு­களின் சொத்­துகள் முடக்­கப்­பட்டு அதற்­கான வழக்­குகள் இருந்த நிலை­யிலே தடை­நீக்கம் தாம­திக்­கப்­பட்­ட­தாக பாது­காப்பு அமைச்சின் உய­ர­தி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

தடை நீக்­கத்­துக்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளதாகவும் விரைவில் தடை­நீக்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படுமெனவும் கலந்துரையாடலின்போது உளவுப்பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.