பதில் ஜனாதிபதியாக ரணில்

0 388

ஜனா­தி­பதி கோட்­டாபய ராஜ­பக்ஷ நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ள நிலையில் ஜனா­தி­ப­தியின் கட­மை­களை நிறை­வேற்றும் வகையில் ஜனா­தி­ப­தியால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதில் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் என சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

பதில் ஜனா­தி­ப­தி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நேற்­றைய தினம் சபா­நா­யகர் குறிப்­பிட்­ட­தா­வது, ஜனா­தி­பதி கோட்­ட­பய ராஜ­பக்ஷ நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ள நிலையில் அர­சி­ய­ல­மைப்பின் 37(1) அத்­தி­யா­யத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் கட­மை­களை நிறை­வேற்றும் வண்ணம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதில் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதை தனக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது என்றார்.

பதில் ஜனா­தி­ப­தி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இலங்கை அர­சியல் வர­லாற்றில் 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஷ கொலை செய்­யப்­பட்­டதை தொடர்ந்து வெற்­றி­ட­மான ஜனா­தி­பதி பத­விக்கு அப்­போ­தைய பிர­தமர் டி.பி.விஜே­துங்க ஒரு சில மணித்­தி­யா­லங்­களில் பதில் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார். ஆதனை தொடர்ந்து 1993.05.07ஆம் திகதி அரசியலமைப்பின் 40ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் டி.பி.விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.