எரிபொருள் உதவி கோரி அமீரகம் செல்கிறார் கோத்தா

0 353

(றிப்தி அலி)
நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரி­பொருள் உதவி கோரி ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

மிக விரைவில் இடம்­பெற­வுள்ள இந்த விஜ­யத்தின் ஊடாக இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்­பு­றவு கட்­டியெ­ழுப்­பப்­படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே நம்­பிக்கை வெளி­யிட்டார்.

அத்­துடன், எரி­பொருள் உற்­பத்தி செய்யும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு நேர­டி­யாக எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்­வது தொடர்­பிலும் இதன்­போது ஜனா­தி­பதி பேச்சு நடத்­த­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

கடந்த மே 9ஆம் திகதி நாட்டின் பல பாகங்­களில் நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வத்­திற்கு பின்னர் முதற் தட­வை­யாக ஊட­கங்­களில் முன்­னி­லையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (28) தோன்­றிய போதே, முன்னாள் அமைச்சர் இந்த அறி­விப்­பினை மேற்­கொண்டார்.
சுமார் இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு பின்னர் இலங்கை ஜனா­தி­ப­தி­யொ­ருவர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்கு மேற்­கொள்­ள­வுள்ள முக்­கி­யத்­து­வ­மிக்க இந்த விஜயம் தொடர்பில் ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு இது­வரை எந்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பி­னையும் மேற்­கொள்­ள­வில்லை.

ஜனா­தி­ப­தியின் இந்த விஜயம் தொடர்பில் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய அரபு அமீ­ரக தூது­வ­ரா­ல­யத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரை தொடர்­பு­கொண்டு வின­விய போது, “குறித்த விஜயம் தொடர்பில் எதுவும் தெரி­யாது எனவும், இது தொடர்பில் எந்­த­வித உத்­தி­யோ­க­பூர்வ தொடர்­பா­டலும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை” என்றார்.

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­கடிக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசாங்கத்திலனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பேசுவார்த்தைகள் எதுவும் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.