அ.இ.ம.கா. எம்.பி.க்கள் மூவருக்கு கட்சியினால் குற்றப்பத்திரம் கையளிப்பு

0 315

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சி­யினால் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அக்­கட்­சியின் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை கட்­சியின் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்­குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­னார்கள். ஒழுக்­காற்று விசா­ரணை கொழும்­பி­லுள்ள காரி­யா­ல­யத்தில் இடம் பெற்­றது.

கட்­சியின் நிபந்­த­னை­களை மீறி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மூவரும் 2022 ஆம் ஆண்டின் தேசிய வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்­தமை தொடர்பில் அவர்­க­ளுக்கு எதி­ராக கட்­சி­யினால் ஒழுக்­காற்று விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டது.
குறிப்­பிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ்.எம்.எம்.முஸாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மூவரும் தங்கள் சட்­டத்­த­ர­ணிகள் மூவ­ருடன் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். என்­றாலும் தாங்கள் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆஜ­ரா­வ­தாக ஏற்­க­னவே அவர்கள் கட்­சியின் அர­சியல் உயர் பீடத்­துக்கோ, கட்­சியின் செய­லா­ள­ருக்கோ அறி­வித்­தி­ருக்­க­வில்லை.

கட்சி குறிப்­பிட்ட மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கடந்த 6 மாத­கா­ல­மாக பல தட­வைகள் அழைத்தும் அவர்கள் விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. கால­தா­மதம் ஏற்­ப­டுத்­தியே வந்­தனர். இ-று­தியில் கடந்த 23 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்­தார்கள்.
அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றப்­பத்­தி­ரிகை கட்­சியின் செய­லாளர் நாய­கத்­தினால் வாசித்­துக்­காட்­டப்­பட்­டது. குற்­றப்­பத்­தி­ரி­கையும் அவர்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. மூவரும் தங்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பதி­ல­ளிப்­ப­தற்கு கால அவ­காசம் கோரி­னார்கள். அதன்­படி எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை கட்­சி­யினால் அவர்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

எதிர்­வரும் 31 ஆம் திகதி ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­கு­மாறு அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. கடந்த 23 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனும் பிரசன்னமாகியிருந்தார் என கட்சியின் செயலாளார் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.