மே 18:தேசத்தின் பிரிவினையை கூறும் நாள்

0 534

மற்­றொரு மே 18 ஆம் திக­தியை நாம் அடைந்­துள்ளோம். 2009 முதல் மே 18 ஆம் நாள் ஒரு முக்­கி­ய­மான நாளாக இருந்து வரு­கி­றது. இலங்­கையில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளாக இடம்­பெற்று வந்த ஆயுதப் போராட்டம் மே 18ஆம் திகதி முடி­வுக்கு வந்­தது. அன்­றி­லி­ருந்து ஒவ்­வொரு ஆண்டும் மே 18 ஆம் நாள் இலங்­கை­ய­ருக்கு ஓர் கொண்­டாட்ட நாளா­கவே இருந்து வரு­கி­றது.

இரா­ணுவ வெற்­றிக்கு தலைமை தாங்­கிய அர­சியல் கட்சி ஆட்­சியில் இருந்த அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும், இவ் யுத்த வெற்­றியை கோலா­க­ல­மாக கொண்­டா­டி­யது.
மறு­புறம், இந்த மோதலில் தமது உற­வு­களை இழந்த மக்கள் பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் மே 18ஆம் திக­தியை தமது இறந்த உற­வு­களின் நினைவு தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர்.

இந்த ஆண்டு யுத்த வெற்­றியின் பதின்­மூன்­றா­வது ஆண்டு நிறைவைக் குறிக்­கி­றது. இம்­முறை அதை அரசு எப்­படி கொண்­டாடும் என்­பது இது­வரை தெளி­வாகத் தெரி­ய­வில்லை. பெரும் நெருக்­க­டியைச் சந்­தித்து அவப்­பெ­யரை சுமந்­துள்ள தற்­போ­தைய அரசு, மிகக் கோலா­க­ல­மாக இவ் விழாவை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

பெருந்­தொ­கை­யான இலங்­கை­யர்­களின் உயிர்­களை காவு­கொண்டு ஏறத்­தாழ 30 வரு­டங்­க­ளாக நடை­பெற்ற இந்த ஆயுத மோதல் குறித்த எமது பார்வை எவ்­வாறு இருக்க வேண்டும் ? இவ்­வி­ட­யத்தை உரை­யாடல் செய்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.
இலங்­கையின் இயற்­கை­யான அர­சியல் பரி­ணாம வளர்ச்சி இலங்­கையின் கால­னித்­துவ ஆட்­சியின் ஆரம்­பத்­தோடு முடி­வுக்கு வந்­தது. இலங்கை அரசுக் கட்­ட­மைப்பு மற்றும் நிர்­வாக முறைமை கால­னித்­துவ ஆட்­சியின் தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையின் கல்வித் துறையும் கால­னித்­துவ தேவை­க­ளுக்கு ஏற்ற அறி­ஞர்­களை உரு­வாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது.

கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெற வேண்­டு­மாயின் அங்கு ‘சுதந்­திரப் போராட்டம்’ ஒன்று தோற்றம் பெறு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். ஏனெனில் இந்தப் போராட்­டத்­திற்­குள்ளே கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்கு அவ­சி­ய­மான மாற்­றங்­களை கொண்டு வர தேவை­யான காலமும், சூழலும் எமக்கு கிடைக்­கின்­றன என்­ப­தா­லாகும். உதா­ர­ண­மாக, சுதந்­திர இலங்­கையின் அரச மாதிரி என்­ன­வாக இருக்க வேண்டும், இலங்கை தேசிய இனத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது எவ்­வாறு, இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எதிர்­கால இலங்கை தேசத்தை கட்­டி­யெ­ழுப்ப எவ்­வ­கை­யான கல்வி கொடுக்­கப்­பட வேண்டும் போன்ற மிகவும் முக்­கி­ய­மான திட்­டங்­களை வகுக்­கவும், மக்­க­ளுக்­கி­டையே பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும், மரி­யா­தை­யையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இவ்­வா­றான நீண்ட கால சுதந்­திரப் போராட்­டங்கள் எமக்கு உத­வு­கின்­றன.

எனினும், இவ்­வா­றான நீண்ட கால சுதந்­திரப் போராட்­ட­மொன்று இது­வரை இலங்­கையில் நடை­பெ­றா­ததால், அவ்­வா­றான போராட்­டத்­தி­னூ­டாக உரு­வா­கின்ற சமூக வளர்ச்­சிகள் எது­வுமே இலங்­கையில் முறை­யாக விருத்­தி­ய­டைய வில்லை. எனவே சுதந்­திரம் பெற்று எழு­பத்து நான்கு வரு­டங்கள் கடந்தும் கூட இலங்­கைக்கு பொருத்­த­மான ஓர் அரச மாதி­ரியோ, ஆட்சி முறையோ, தேசிய நலன்­க­ளுக்கு ஏற்ற கல்வி முறையோ தோற்றம் பெற­வில்லை.

இலங்­கையில் இடம்­பெற்ற 30 ஆண்­டு­கால மோதல் இந்த பிரச்­சி­னையின் நீட்­சி­யாகும். மோதல் முடி­வுக்கு வந்த விதம் மற்றும் மோத­லுக்குப் பிறகும் அப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக அரசு பின்­பற்­றிய கொள்­கைகள் போன்ற அனைத்தும் தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது பற்­றிய எமது வளர்ச்சி பெறாத சிந்­த­னை­யையே வெளிக்­காட்­டு­கி­றது.
இலங்கை அரசுக் கட்­ட­மைப்பு இவ்­வி­டத்தில் நேர்­மை­யான சிந்­த­னை­யோடு செயற்­பட்­டி­ருந்தால் ஆயுத மோதலின் முடிவில் எமது ஆட்­சி­யா­ளர்­களின் நடத்தை கலிங்கப் போர் முடிந்த பிறகு அசோக பேர­ர­சனின் நடத்­தையை ஒத்­த­தாக இருந்­தி­ருக்க வேண்டும்.

யுத்­தத்தால் கொல்­லப்­பட்ட மக்­களைக் கண்டு அவர்கள் மீது மிகுந்த அனு­தாபம் கொண்டு அவ்­வா­றான ஓர் நிலை மீண்டும் நிகழ்ந்து விடாமல் காக்கும் வகையில் ஆட்­சி­யா­ளர்­களின் உறு­திப்­பாட்­டையும், அர்ப்­ப­ணிப்­பையும் வெளிக்­காட்டும் வகை­யி­லேயே அவர்­களின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்க வேண்டும். அதற்­கேற்ப, இடம்­பெ­யர்ந்து வாழும் 350,000 மக்­க­ளி­டமும் சென்று அவர்­களை விரைவில் மீள்­கு­டி­யேற்­றவும், பாது­காப்புப் படை­யி­னரின் கீழ் உள்ள அவர்­களின் காணி­களை மீட்டு உட­ன­டி­யாக அவர்­க­ளிடம் கைய­ளிக்­கவும், போரினால் ஏற்­பட்ட அழி­வுகள் குறித்து சிங்­கள மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும், யுத்­தத்தால் எவ­ருக்­குமே வெற்றி கிடைப்­ப­தில்லை என்­பதை மக்கள் மனதில் பதியச் செய்­வ­தற்கும் அவர்கள் முயன்­றி­ருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக போர் வெற்­றியை பற்­றிய ஓர் கொண்­டாட்ட மனோ­நி­லையை மக்­க­ளிடம் விதைத்து அம் மக்­களை சிங்­க­ள­வர்கள் கைப்­பற்­றிய பகு­தி­களை கண்டு களிக்க சுற்­றுலா அனுப்­பி­ய­துதான் இங்கு நடந்­தது.

அர­சாங்கம் தனது ஆயுத பலத்தை வெளிப்­ப­டுத்த ஆண்­டு­தோறும் மே 18 ஆம் திகதி கவச வாகன அணி­வ­குப்பு ஊர்­வ­லங்­களை நடாத்­து­கின்­றது.

இம் மோதலின் அடுத்த தரப்­பினர் அவர்­களின் இறந்த அல்­லது காணாமல் போன உற­வி­னர்­களின் புகைப்­ப­டங்­க­ளுக்கு மாலை அணி­வித்தும், விளக்­கு­களை ஏற்றி வைத்தும், மோதலின் இறுதி நாட்­களில் அவர்கள் உண­வாகக் கொண்ட கஞ்­சியை சிரட்­டை­களில் அருந்தி அச் சோக நிகழ்வை நினைவு கூர்­கின்­றனர்.

இந்த நிகழ்ச்­சிகள் நடாத்­தப்­படும் நோக்­கங்­க­ளையும் அவற்றின் சுபா­வத்­தையும் பொறுத்து, அரசு நடத்தும் நிகழ்ச்­சி­களில் தமிழ் மக்கள் பங்­கேற்க முடி­யாத ஓர் நிலை காணப்­ப­டு­கி­றது. அந்த நிகழ்ச்­சி­களின் சுபா­வத்தைப் பொறுத்து அவை ஒன்­றாக இணைக்க முடி­யாத ஒரு மாதி­ரி­ய­மைப்­பையே கொண்­டுள்­ளன.

அதேபோல் தமி­ழர்கள் நடத்தும் நினை­வேந்தல் நிகழ்ச்­சியில் சிங்­க­ள­வர்கள் பங்­கேற்க முடியாதவாறு அது உள்ளது. சிங்கள மக்களின் புரிதலின் படி, தமிழ் மக்கள் நடாத்தும் இந் நினைவேந்தல் மாதிரி அவர்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.

இவ்வாறான நிலையில் மே 18ஆம் திகதி “தேசத்தை ஒருங்கிணைத்த நாளாக” கூறப்பட்டாலும், அது மிக மோசமான வகையில் தேசத்தின் பிரிவினையை உறுதி செய்த நாளாகவே கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் வருடாந்தம் நடாத்தப்படும் போர் வெற்றியை குறிக்கும் இந் நிகழ்வுகள் எமது தேசத்தின் பிரிவினையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி அதனை பிரகடனம் செய்யும் ஓர் சந்தர்ப்பமாகவே அமைந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.