காதி நீதிமன்றங்களை செயற்திறன் மிக்கதாக்குக

பிர­தம நீதி­ய­ரசரிடம் கோரிக்கை

0 358

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்பில் நீண்ட கால­மாக நில­வி­வரும் குறை­பா­டு­களைத் தீர்த்து காதி­நீ­தி­மன்­றங்கள் செயற்­திறன் மிக்­க­தாக இயங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு காதி நீதி­ப­திகள் போரத்தின் உப தலைவர் எம்.இப்ஹாம் யெஹ்யா பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்தி சி ஜய­சூ­ரி­ய­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.
காதி மேன்­மு­றை­யீட்டு சபைக்கு கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டா­ம­லி­ருப்­ப­தையும் அவர் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். காதி மேன்­மு­றை­யீட்டு சபை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக செய­லாளர் ஒருவர் இன்றி இயங்கி வரு­வதால் மேன்­மு­றை­யீட்டு வழக்­குகள் பெரிதும் கால­தா­ம­தத்­துக்கு உள்­ளா­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். எனவே உட­ன­டி­யாக காதி மேன்­மு­றை­யீட்டுச் சபைக்கு செய­லாளர் ஒரு­வரை நிய­மிக்­கும்­ப­டியும் கோரி­யுள்ளார்.

காதிகள் போரத்தின் உப­த­லைவர் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பில் பல பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. நாடு தழு­விய ரீதியில் 65 காதி­நீ­தி­ப­திகள் கட­மை­யாற்­று­கி­றார்கள். இவர்­களில் 18 பேர் இரா­ஜி­னாமா, பதவி நீக்கம் மற்றும் பத­விக்­காலம் முடிவு கார­ண­மாக பத­வியில் இல்லை. இந்த 18காதி­நீ­தி­மன்ற பிரி­வு­க­ளுக்கும் அருகில் கட­மை­யி­லுள்ள ஏனைய காதி­நீ­தி­ப­தி­களே பதில்­நீ­த­வான்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இதே­வேளை 48 காதி நீதி­ப­தி­களின் பத­விக்­காலம் கால­ாவ­தி­யா­கி­யுள்ள நிலையில் அவர்­க­ளது பத­விக்­காலம் 2021 ஜூன் மாதம் வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த 48 காதி நீதி­மன்ற நீதிப்­பி­ரி­வு­களில் 25 பிரி­வு­க­ளுக்கு நிய­மனம் வழங்­கு­வ­தற்கு வர்த்­த­மா­னியில் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டாலும் இது­வரை நேர்முகப்பரீட்சை நடத்தப்படவில்லை.
இவ்விவகாரம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் நீதியமைச்சருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியும் இதுவரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.