காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்

சிங்கள ஊடகவியலாளருடனான நேர்காணலில் காதி நீதிபதிகள் தெரிவிப்பு

0 337

ஏ.ஆர்.ஏ.பரீல்

தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித அண்­மையில் நால்­வரை நேர்­கண்­ட­போது சில காதி­நீ­தி­வான்கள் தங்­க­ளிடம் நீதி கோரி வரும் பெண்­க­ளிடம் பாலியல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவ­றான தீர்ப்­புகள் வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்தக் குற்றச்சாட்­டு­க­ளுக்குப் பதில் அளிக்கும் வகை­யிலும், பொய்ப் பிர­சா­ரங்­களை மறுத்தும், தெளி­வுகள் வழங்­கு­வ­தற்கும் காதி நீதி­ப­திகள் போரம் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித சம­ர­விக்­ர­மவை நேரில் சந்­தித்­தது.
காதி­நீ­தி­வான்கள் போரத்தின் பொதுச்­செ­ய­லா­ளரும் காதி நீதி­ப­தி­யு­மான சட்­டத்­த­ரணி ஹுசைன் அஸ்ஹார் சைனுன் மற்றும் உப­த­லை­வரும், காதி­நீ­தி­ப­தி­யு­மான எம்.இப்ஹாம் யெஹ்யா ஆகியோர் சமு­தி­தவை நேரில் சந்­தித்து நேர் காணலில் பங்கு கொண்­டனர். அவர்­க­ளு­ட­னான சமு­தி­தவின் நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம். ‘

சில காதி­நீ­தி­ப­தி­களின் வழக்கு விசா­ர­ணைகள் வீட்­டினுள் நடப்­ப­தென்றால் பெண்கள் அறைக்குள் அழைக்­கப்­ப­டு­கி­றார்கள் என்றால் என்ன நடக்கும். பாலியல் இலஞ்சம் கோரு­கி­றார்­களாம். இலஞ்சம் பெற்­றுக்­கொள்­கி­றார்­களாம். உலகில் எங்கு அறை­களில் வழக்கு விசா­ரிக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?
காதி­நீ­தி­ப­திகள் நிய­ம­னத்­துக்கு நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்தும் போது வழக்கு விசா­ரணை நடத்­து­வ­தற்கு இடம் இருக்­கி­றதா என்று கேட்­கப்­ப­டு­கி­றது. வீடு­களில் வழக்கு விசா­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. வீடு­களில் காரி­யா­ல­யங்கள் இயங்­கு­கின்­றன. காதி­ நீ­தி­வான்கள் தொடர்பில் முறைப்­பா­டுகள் இருந்தால் இலஞ்ச விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறை­யி­டலாம். பொலி­ஸிலும் முறை­யி­டலாம். காதி­நீ­தி­மன்ற முறையில் குறை­பா­டுகள் இருக்­கின்­றன. அவை தீர்க்­கப்­ப­டலாம். குறை­பா­டுகள் நீக்­கப்­பட்டால் இது சிறந்­தவொரு சட்டம்.
அர­சியல் சுய­லாபம் மற்றும் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக காதி நீதி­மன்­றங்கள் பற்றி பொய்ப் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. ஊட­கங்­களும் இதில் பங்கு வகிக்­கின்­றன.

காதி­நீ­தி­மன்றம் பற்றி பேசப்­ப­டு­கி­றது. மத்­ரஸா பாட­சா­லைகள் கருத்­தடை வில்லை, கருத்­தடை கொத்து ரொட்டி, டாக்டர் சாபி சிகாப்தீன் பற்றி கடந்த காலங்­களில் பேசப்­பட்­டது. இவை­ய­னைத்தும் ஒரே நோக்­கோடு முன்­னெ­டுக்­கப்­பட்­டதா?
ஆம். இவை­ய­னைத்தும் ஒரே நோக்­கோ­டுதான் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இனமும், சம­ய­முமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இது பற்றி ஞான­சார தேரர் பேசினார். அத்­து­ர­லியே ரதன தேரர் பேசினார், தாமரை மொட்டு அர­சி­யல்­வா­திகள் பேசி­னார்கள். நீங்கள் இவர்­க­ளையா குற்றம் சுமத்­து­கி­றீர்கள்?.
ஆம். இவர்­கள்தான் எதிர்த்­தார்கள். விமர்­சித்­தார்கள் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­ணி­யொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் தலைவர் ஞான­சார தேர­ருக்கு நான் (இப்ஹாம் யெஹ்யா) கடி­த­மொன்று அனுப்­பினேன். காதி நீதி­மன்ற அமர்­வு­களை வந்து பார்­வை­யி­டு­மாறு கோரினேன். ஆனால் அவர் வர­வில்லை.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் ஆண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கியே இயற்­றப்­பட்­டுள்­ளது. பெண்­க­ளுக்கு இரண்டாம் இடமே வழங்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டித்­தானே?
அத­னா­லேயே நாம் இந்தச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்கை முன்­வைத்­துள்ளோம். சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­கள தொடர்பில் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. நாமும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­கிறோம்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் ஷரீஆ சட்­டத்­துடன் தொடர்புபட்­டதா? நீங்கள் இதனை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?
இச்­சட்டம் நூற்­றுக்கு நூறு ஷரீஆ சட்­டத்­துடன் தொடர்புபட்­ட­தல்ல. ஷரீஆ சட்­டத்­துடன் முரண்­படும் விட­யங்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளன. பெண்­க­ளுக்கு பாதிப்­பான விட­யங்கள் உள்­ளதால் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­கிறோம்.

வழங்­கப்­பட்ட தீர்ப்­பு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­வ­தென்றால் காதி­ நீ­தி­வான்­களின் அனு­ம­தி­வேண்டும். அப்­ப­டித்­தானே?.
இல்லை. நீங்கள் தவ­றாகப் புரிந்து கொண்­டுள்­ளீர்கள். வழக்கு விசா­ரணை நடை­பெ­றும்­போதும் வாதியோ பிர­தி­வா­தியோ விசா­ர­ணை­களில் திருப்­தி­யு­றா­விட்டால் வழக்­கினை வேறு ஒரு காதி­நீ­தி­மன்­றுக்கு மாற்றிக் கொள்­ளலாம்.

மிகவும் குறைந்த தொகைப் பணமே தாப­ரிப்பு வழக்­கு­களில் தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது. 3000 ரூபா கூட மாதத்­திற்கு தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது?
தாப­ரிப்பு பெற்­றுக்­கொள்­வ­தற்கு தாப­ரிப்பு வழங்­கு­ப­வரின் வரு­மானம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பே தீர்ப்பு வழங்­கப்­ப­டு­கி­றது.

நீங்கள் எம்­மோடு ஒன்­றாக வாழ விருப்­ப­மில்­லையா?ஏன் வேறாக மத்­ரஸா பாட­சா­லைகள், காதி­ நீ­தி­மன்­றங்கள்? ஏன் நாட்டின் பொது­வான சட்­டத்­திற்கு உங்­களால் செல்ல முடி­யாது?
பொது­வான சட்டம் என்றால் எந்­தவோர் இனத்­துக்கும் எந்த மதத்­திற்கும் விஷேட வரப்­பி­ர­சா­தங்கள் இருக்க முடி­யாது என்­ப­தல்­லவா? அப்­ப­டி­யென்றால் அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்கு முத­லிடம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தல்­லவா? இது இல்­லா­ம­லாக்­கப்­பட வேண்­டு­மென நாம் கூற­வில்லை. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அர­சி­ய­ல­மைப்பில் அப்­படி இருக்க முடி­யாது. அதா­வது பெளத்த மதத்­திற்கோ, கிறிஸ்­தவ மதத்­திற்கோ, இஸ்லாம் மதத்­திற்கோ முதன்­மை­ய­ளிக்­கப்­ப­ட­வேண்டும் என இருக்க முடி­யாது. அத­னாலே நாம் கூறு­கிறோம். ஏனைய மதங்கள் மற்றும் இனங்­களின் அபி­லா­ஷை­களும் உள்வாங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அர­சி­ய­ல­மைப்பை மாற்ற வேண்டும் என நாம் சவால்­வி­ட­வில்லை.

ஜனா­தி­பதி பெளத்­தர்­களின் வாக்­கு­க­ளி­னாலே பத­விக்­கு­ வந்தார். முஸ்­லிம்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை?
தவறு. முஸ்­லிம்­களில் குறிப்­பிட்ட வீதத்­தினர் அவ­ருக்கு வாக்­க­ளித்­தனர். முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்று கூற­மு­டி­யாது. நான் முழு நாட்­டுக்கும் அனைத்து மக்­க­ளுக்கும் ஜனா­தி­பதி என்றே அவர் கூறி­யி­ருக்­கிறார். சமு­தி­த­வாகிய உங்களையும் நாங்கள் குற்றம் சுமத்­து­கிறோம். நீங்கள் ஒரு தரப்பின் திட்­டத்தை அரங்­கேற்­று­கி­றீர்கள். அது அர­ச­ த­ரப்­பாகக் கூட இருக்­கலாம்.

காதி­நீ­தி­மன்றம் தொடர்­பான பிர­சா­ரங்கள் அர­சாங்­கத்­தினால் என் மூல­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­கி­றீர்­களா?
அப்­படி இருக்­கலாம். இது சமூ­கத்தின் கருத்து.

ஏன் காதி நீதி­மன்­றங்­களின் வழக்­குகள் கால­தா­ம­த­மா­கின்­றன?
இல்லை. சுமார் 6 மாதங்­க­ளுக்குள் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டாலே கால­தா­ம­த­மா­கி­றது. ஏனைய நீதி­மன்­றங்­க­ளிலும் இவ்­வாறே.

காதி­ நீ­தி­மன்­றங்கள் ஒழிக்­கப்­பட வேண்­டு­மென்று கூறப்­ப­டு­கி­றதே?
அவ்­வாறு ஒழிக்­கப்­பட்டால் அது எமது அடிப்படை உரிமை மீறலாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்றா கூறுகிறீர்கள்?
ஆம். அனைத்தும் பொய்யானவை. அரசியல் பின்னணி கொண்டவை. டாக்டர் சாபி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.அவரது நிலுவை சம்பளம் கூட வழங்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவா கூறுகிறீர்கள்?
நிச்சயமாக அப்படித்தான். காதிநீதிபதிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டால் அவர்களைக் கைது செய்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் குற்றம் சுமத்துபவர்களால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதில்லை. எவருக்கும் காதிநீதிமன்றங்களில் அநியாயம் நடந்திருந்தால் காதிநீதிவான்கள் போரத்துக்கு எழுதுங்கள். நாம் அது பற்றி ஆராய்வோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.