முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகப் பரப்புரையை புரிந்து கொள்வது எவ்வாறு?

0 624

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வரு­டாந்த மாநாடு அண்­மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடை­பெற்­ற­போது சிறப்புப் பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி எம்.சி.ரஸ்மின் ஆற்­றிய உரையின் தொகுப்பு

இந்த நிகழ்வில் உரை­யாற்­று­வ­தற்கு, ‘இலங்கை ஊட­கங்­களும் முஸ்­லிம்­களின் எதிர்­கா­லமும்’ எனும் தலைப்பு எனக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்தைத் தீர்­மா­னிப்­பதில் இலங்கை ஊட­கங்­களின் வகி­பங்கு எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பது விரி­வான தேடல் ஒன்­றுக்­கான கேள்வி. அதற்­கு­ரிய விடையைத் தேடு­வது எனது பிர­தான நோக்­க­மல்ல. மாறாக, இந்தக் கேள்­வியை சரி­யாகப் புரிந்து கொள்­வதே எனது நோக்­க­மாகும்.

அந்­த­வ­கையில், இரண்டு சம்­ப­வங்­களை நான் உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்.

முதல் சம்­ப­வ­மா­னது, 2019 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி, இலங்­கையில் மிகவும் பிர­ப­ல­மான சிங்­கள நாளிதழ் ஒன்றில் வெளி­யி­டப்­பட்ட “தலைப்புச் செய்தி” பற்­றி­யது. குறித்த சிங்­கள நாளி­தழின் ஆசி­ரியர் ஒரு சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர். அவர் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கத்தின் பிர­தான உறுப்­பி­ன­ரா­கவும் இருந்து வரு­கின்றார்.
அந்த முன்­பக்க பிர­தான செய்­தியின் தலைப்பு “வட மத்­திய மாகா­ணத்தைச் சேர்ந்த ஸஹ்­ரானின் ஐந்து ஆத­ர­வா­ளர்­களின் வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபாய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது” என அமைந்­தி­ருந்­தது. குறித்த செய்­தியில் “சஹ்­ரா­னுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளான ஐந்து முஸ்­லிம்­களின் கணக்­கு­களில் 100 கோடி பணம் இருப்­ப­தாக பொலிசார் பத்­தி­ரி­கைக்கு உறு­திப்­ப­டுத்­தினர்” எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
உண்­மையில், ஐவரும் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளது பீ அறிக்­கையில் பத்­தி­ரிகைச் செய்தி பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. சஹ்­ரா­னுடன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தா­கவே குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டது. எனினும் கிட்­டத்­தட்ட 6 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் சிலர் தமது அர­சாங்க உத்­தி­யோ­கங்­களை கூட இழக்க வேண்டி வந்­தது. இவர்கள் அனை­வரும் தங்கள் சொந்த சமூ­கங்­க­ளிலும் அதற்கு வெளி­யிலும் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் இழி­வான பார்­வை­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. இந்த பத்­தி­ரிகைச் செய்தி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த செய்தி முதலில் எனக்குப் பெரும் ஏமாற்­றத்தைத் தந்­தது. என்னைப் போலவே எனது பெரும்­பா­லான சிங்­கள நண்­பர்­களும் இந்தச் செய்­தியால் ஏமாற்­ற­ம­டைந்து தமது கருத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டி­ருந்­ததை நான் அவ­தா­னித்தேன்.
இக் காலப்­ப­கு­தியில் முஸ்லிம் இனம், முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில், முஸ்லிம் கிராமம், முஸ்லிம் சமய நிறு­வ­னங்கள், முஸ்லிம் சமய பாட­சா­லைகள்…. போன்ற பல வார்த்­தைகள் அதிகம் புழக்­கத்தில் இருந்­தன. இவை சிங்­கள மொழி மூல ஒலி, ஒளி­ப­ரப்பு ஊட­கங்­களின் செய்­தி­களில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அதே கால­கட்­டத்தில், முஸ்லிம் கிரா­மங்­களில் இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடுதல் நட­வ­டிக்­கைகள் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்டு பர­ப­ரப்­பான செய்­தி­யாக்­கப்­பட்­டது. இது முழு முஸ்லிம் சமூ­கத்­தை­யுமே நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு கடு­மை­யான அச்­சு­றுத்­தல்மிக்கவர்களாக சித்­தி­ரித்­தது.

தலைப்புச் செய்தி தொடர்­பான தேடல்
இக் காலப்­ப­கு­தியில், தைரி­ய­மிக்க இரண்டு இளம் சுயா­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான நிராஷா பிய­வ­தனி மற்றும் ஷபீர் முகம்மட் ஆகியோர் குறித்த தலைப்புச் செய்­தியைப் பற்­றிய ஒரு புல­னாய்வுக் கட்­டு­ரையை வெளி­யிட்­டனர். அவர்கள் கண்­ட­றிந்த சில விட­யங்­களை இங்கு பகிர்ந்து கொள்­கிறேன்.

பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்ட ஐவரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மாக வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை. மற்­றொ­ருவர் வீடு கட்­டு­வ­தற்­காக வங்­கியில் கடன் எடுத்து, அதனை தனது மாதச் சம்­ப­ளத்­தி­லி­ருந்து செலுத்தி வரு­பவர். இது வரை அவரால் வீட்­டின் நிர்மாண வேலை­களை முழு­மை­யாக பூர்த்தி செய்ய முடி­ய­வில்லை. பாட­சாலை ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் மற்­றொரு நபர், விபத்தில் சிக்­கி­யதில் இருந்து, மலம் கழிப்­ப­தற்­காக உடைந்த கதிரை ஒன்­றையே பயன்­ப­டுத்தி வரு­பவர். கொமட் ஒன்­றைக்­கூட வாங்­கு­வ­தற்கு வச­தி­யற்­ற­வ­ராக அவர் இருந்­துள்ளார்.

சந்­தே­க­ ந­பர்கள் மே 24 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டனர். மே 25 ஆம் திகதி செய்தி வெளி­வந்­தது. மே 27ஆம் திகதி மஜிஸ்­திரேட் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, அடிப்­படை பொலிஸ் விசா­ர­ணைகள் கூட முடி­வ­டை­வ­தற்கு முன்­னரே இந்தச் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது.

இந்த தலைப்புச் செய்தி குறித்த புல­னாய்வு அறிக்­கை­யி­டலைச் செய்த நிராஷா பிய­வ­தனி, சம்­பந்­தப்­பட்ட பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் பேசி­யி­ருக்­கிறார். அதற்கு, தாம் அவ்­வா­றான தக­வல்கள் எத­னையும் ஊட­கங்­க­ளுக்கு வழங்­க­வில்லை எனவும், பொலி­ஸாரை மேற்­கோள்­காட்டி குறித்த பத்­தி­ரிகை எவ்­வாறு செய்தி வெளி­யிட்­டுள்­ளது என்­பது தனக்குத் தெரி­யாது எனவும் பதி­ல­ளித்­துள்ளார். எனினும், பொலிஸார் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே தான் இந்த செய்­தியை எழு­தி­ய­தாக சம்­பந்­தப்­பட்ட பிராந்­திய செய்­தி­யாளர் தெரி­வித்­துள்ளார். செய்­தியை வெளி­யிட்ட பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரி­ய­ரிடம் வின­வி­ய­போது, இந்தச் செய்­தியை உண்மைச் சரி­பார்ப்பு செய்ய முடி­யாது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார். ஏன் துல்­லி­யத்தை உறு­திப்­ப­டுத்­தாமல் தலைப்புச் செய்­தியை வெளி­யிட்­டீர்கள் என்ற கேள்­விக்கு, பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் அளித்த பதிலை இங்கு நான் கூற விரும்­ப­வில்லை.

சந்­தேக நபர்­களின் புகைப்­ப­டங்கள்
பத்­தி­ரி­கையில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர்­களின் புகைப்­ப­டங்­களை நான் உற்­று­நோக்­கினேன். எல்­லோ­ரி­னதும் புகைப்­ப­டங்­க­ளிலும் ஒரே நிற பின்­ன­ணியே இருந்­தது. பின்­னர்தான், இந்தப் புகைப்­ப­டங்கள் பொலிஸ் நிலை­யத்தில் வைத்து, பொலி­சா­ரி­னா­லேயே எடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பது தெரி­ய­வந்­தது.

விசா­ரணை ஆரம்­பிக்கும் முன்பே, சந்­தேக நபர்­களின் படங்­களை பிர­தேச செய்­தி­யா­ள­ரிடம் வழங்க பொலிஸ் ஓ.ஐ.சி.க்கு எந்தச் சட்­டத்தின் கீழ் அனு­மதி அளிக்­கப்­பட்­டது என பொலி­சா­ரிடம் கேட்­ப­தற்கு அந்த சந்­தேக நபர்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தைரியம் இருக்­க­வில்லை என்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­னது.

இரண்­டா­வது கதை
இது நடந்­தது கொழும்பு தாபரே மாவத்­தையில். அது ஒரு வெள்ளிக்­ கி­ழமை நண்­பகல். நான் ஒரு முச்­சக்­கர வண்­டியில் ஏறி ஜாவத்தை பள்­ளி­வா­ச­லுக்கு ஜும்ஆ தொழு­கைக்­காக சென்று கொண்­டி­ருக்­கிறேன். அப்­போது சில முஸ்லிம் ஆண்­களும் சிறார்­களும் பள்­ளி­வா­சலை நோக்கி அப் பாதையால் நடந்து சென்று கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளையும் இந்த வண்­டியில் ஏற்றிக் கொண்டு பள்­ளி­வா­ச­லுக்குச் செல்வோம் என முச்­சக்­கர வண்டி சார­தி­யிடம் கூற நினைத்தேன். அதற்கு முன்­னரே அவர் வண்­டியின் வேகத்தை குறைத்து, “இவர்­க­ளால்தான் நாட்டில் நாம் மோச­மான நிலை­மை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வந்­துள்­ளது” என கடு­மை­யான தொனியில் சப்­த­மிட்டார். அப்­போ­துதான் அவர் என்னை ஒரு முஸ்லிம் என அடை­யாளம் கண்­டு­கொள்­ள­வில்லை என்­பதை உணர்ந்தேன். “நாம் இந்த தம்­பி­லாக்­களை (முஸ்­லிம்­களை) எந்த சந்­தர்ப்­பத்­திலும் நம்பக் கூடாது” என்றும் அவர் கூறினார். “ இவர்­களை நாம் கொல்ல வேண்டும். இவர்­க­ளுக்கு அதிக சுதந்­தி­ரத்தைக் கொடுத்­தது நம்­ம­வர்­க­ளது பிழை” என்றும் அவர் தொடர்ந்து கூறிக் கொண்­டி­ருந்தார். நான் அவ­ரது கருத்­து­க­ளுக்கு எந்த பிர­தி­ப­லிப்­பு­க­ளையும் வழங்­க­வில்லை. முச்­சக்­கர வண்டி மல­ல­சே­கர மாவத்­தையை (பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மித்த பகுதி) தாண்­டும்­போது மேலும் சில முஸ்­லிம்கள் தமது கார்­களில் பள்­ளி­வா­சலை நோக்கிச் செல்­வதை கண்டோம். அப்­போதும் அந்த சாரதி தனது கோபத்தை வெளிப்­ப­டுத்­தினார். “பாருங்கள். அவர்கள் எவ்­வாறு போகி­றார்கள் என. இன்னும் சில நாட்­களில் அவர்கள் நமது நாட்டை நிச்­சயம் கைப்­பற்றி விடு­வார்கள். இதைத்தான் அவர்கள் பள்­ளி­வா­சல்­களில் போதிக்­கி­றார்கள்”

இன்னும் சிறிது நேரத்தில் சிறு பிள்­ளை­க­ளுடன் நடந்து செல்லும் மேலும் சில முஸ்­லிம்­களைக் கண்டோம். “இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.காரர்கள்” என்றார் அவர்.

அந்த இடத்தில் நான் மிகவும் சங்­க­ட­மாக இருப்­பதை உணர்ந்தேன். அதற்குக் காரணம் அவர் என்­னிடம் கூறிய விட­யங்கள் அல்ல. மாறாக நானும் ஒரு முஸ்லிம் என்­பதை அவர் தெரிந்து கொண்டால் என்ன நடக்கும் என்ற அச்­சமே. எனவே பள்­ளி­வாசல் பகு­தியை அடையும் முன்னர் முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து இறங்கி விடத் தீர்­மா­னித்து அவ்­வாறே செய்தேன். பள்­ளியில் தொழு­து­விட்டு வெளியில் வந்தேன். வெள்ளிக்­கி­ழ­மை­களில் காணப்­படும் வழக்­க­மான கூட்டம் அங்­கி­ருந்­தது. அவர்கள் மத்­தியில் இருந்து ‘சேர்’ என அழைத்­த­வாறே யாரோ எனது கையைப் பற்றிப் பிடிப்­பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரு­மல்ல. அதே முச்­சக்­கர வண்டி சார­திதான்.
அவர் என்ன சொல்­லி­யி­ருப்பார் என நினைக்­கி­றீர்கள்?
“ நீங்கள் முச்­சக்­கர வண்­டியில் இருந்து திடீ­ரென இறங்­கி­யதும் நான் ஏதோ தவறு நடந்­து­விட்­ட­தாக உணர்ந்தேன். எனது மனம் சங்­க­டப்­பட்­டது. சேர், நீங்­களும் முஸ்­லி­மாக இருக்­கலாம் என நான் உணர்ந்தேன். உட­ன­டி­யாக உங்­களை பின்­தொ­டரத் தொடங்­கினேன். நான் நினைத்­தது சரிதான். நீங்கள் பள்­ளி­வா­சலை நோக்கிச் செல்­வதைக் கண்டேன். நான் நடந்து கொண்ட விதம் பற்றி கடு­மை­யாக கவ­லைப்­ப­டு­கிறேன். அதற்­காக உங்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­கிறேன்” என்றார்.
நான் அவ­ரது முகத்தைப் பார்த்தேன். மீண்டும் அவர் “மன்­னித்­து­வி­டுங்கள் சேர்” என்றார்.

இப்­போது நான் ஐந்து கேள்­வி­களை இங்கு முன்­வைக்­கிறேன்.
1. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் முச்­சக்­கர வண்டி சார­தியின் நடத்­தை­களின் அடிப்­ப­டையில் இது ஒரு சில தனி நபர்­களின் பிரச்­சினை என்று கருத முடி­யுமா?
2. சிங்­கள பத்­தி­ரிகை ஆசி­ரியர், பிர­தேச செய்­தி­யாளர், மற்றும் பொலிஸ் ஓ.ஐ.சி. ஆகி­யோரின் நடத்­தையை அவர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெரும்­பான்மை சமூ­கத்­திற்கு பொது­மைப்­ப­டுத்த முடி­யுமா?
3. மக்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர், குறிப்­பி­டத்­தக்க வழியில், அவர்­களின் மதத்தின் கார­ண­மாக எதிர்­வி­னை­யாற்­று­கி­றார்கள் என்று கரு­து­வது நியா­யமா?
4. வெறுப்புப் பேச்சை ஊக்­கு­விக்கும் முஸ்­லிம்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் இன­வா­திகள் என்று கரு­து­வது நியா­யமா?
5. அப்­ப­டி­யானால், இந்த எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் மூல காரணம் என்ன?
எனது பார்­வையில், பொறிமுறை­மைதான் (System) கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­தாகும்.

முஸ்­லிம்­களும் சிங்­கள சமூ­கமும் கண்­ணுக்குத் தெரி­யாத அர­சியல் வேலைத்­திட்டம் ஒன்­றுக்கு பலி­யா­கி­விட்­டனர். இது தமது சொந்தப் பிழைப்­புக்­காக வெவ்­வேறு சமூ­கங்கள் மத்­தியில் பாகு­பாடு, வெறுப்பு, சந்­தேகம், தவ­றான புரிதல் மற்றும் சகிப்­புத்­தன்மை என்­ப­வற்றை தோற்­று­விக்கும் ஒரு திட்­ட­மாகும். இந்த அர­சியல் திட்­டத்­திற்குள் ஊட­கங்­க­ளுக்கு அதிக சுதந்­திரம் இல்லை. உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுக்குப் பிறகு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கதையின் புதிய வடிவம் தேவைப்­பட்­டதும் அதே அர­சியல் திட்­டத்­திற்­கே­யாகும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­களை ஆத­ரிக்கும் பெரும்­பா­லான சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் இளை­ஞர்கள் அதே அடக்­கு­முறை மற்றும் பார­பட்­ச­மான அர­சியல் திட்­டத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன­வாதம் மற்றும் வெறுப்பு பேச்சு அவர்களின் சொந்த தெரிவு அல்ல.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கதைகள்
பெரும்­பா­லான ஊட­கங்கள், “முஸ்­லிம்கள் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்த முயல்­கி­றார்கள், முஸ்­லிம்­களின் சனத்­தொகைப் பெருக்கம் சிங்­க­ள­வர்­களை அச்­சு­றுத்­து­கி­றது” என்று ஒரு கதையை பிர­சா­ரப்­ப­டுத்­தின. முஸ்லிம் உண­வ­கங்கள் சிங்­கள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உண­வு­களில் விஷம் கலந்­த­தாக, குறிப்­பாக கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வணிக வளா­கங்கள் சிங்­களப் பெண்­களின் கரு­வு­று­தலைப் பாதிக்கும் பொருட்­களைக் கொண்ட ஆடை­களை விற்­பனை செய்­வ­தாகக் கூறப்­பட்­டது.

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு அதி­க­மான சுதந்­திரம் வழங்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இஸ்லாம் பெண்­களை ஒடுக்­கு­கி­றது என்­பதை நிறுவ பல தொலைக்­காட்சி நிகழ்ச்­சிகள் ஒளி­ப­ரப்­பப்­பட்­டன. இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை, வன்­மு­றையை ஊக்­கு­விக்­கி­றது என்றும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு எதி­ராக வெறுப்பை தூண்­டு­கி­றது என்றும் பிர­சாரம் செய்­யப்­பட்­டது. முஸ்­லிம்கள் எப்­போதும் குற்­ற­வியல் வன்­மு­றைகள் மற்றும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள். வேறு எந்த சமூ­கத்­திலும் இதே போன்ற நிகழ்­வுகள் நடந்தால், அது இயல்­பான விட­ய­மாக மட்­டு­மல்ல, சாதா­ரண நிகழ்­வா­கவும் பார்க்­கப்­ப­டு­கி­றது.

என்ன விளை­வுகள்?
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்கள், போலிச் செய்­திகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பேச்­சுகள் இயல்­பாக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் தங்கள் குரல் கேட்­கப்­ப­ட­வில்லை, பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை அல்­லது ஊட­கங்­களில் போது­மான அளவு உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்று சிந்­திக்கும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கி­றார்கள். இரு சமூ­கங்­க­ளி­லி­ருந்தும் ஆயி­ரக்­க­ணக்­கான இளம் சந்­த­தி­யினர் தம்­மி­டையே அவ­நம்­பிக்கை, தவ­றான புரி­தலை வளர்த்து, நம்­பிக்­கையிழந்­துள்­ளனர். பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் இளை­ஞர்கள் காயங்கள் மற்றும் அழி­வு­களின் நினைவை சுமந்து வரு­கின்­றனர். சமூக வாழ்வின் அனைத்து அம்­சங்­க­ளிலும் ‘இனத்­துவ அகங்­காரம்’ முக்­கிய கார­ணி­யாக மாறி­யுள்­ளது. மித­மான குரல்கள் அடக்­கப்­பட்­டன. நீங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு தேநீர் கடையை தொடங்­கினால் அங்கு அதிகம் வியா­பாரம் நடக்கும் எனக் கூறு­ம­ள­வுக்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான உணர்வு இளை­ஞர்­களின் மனதில் ஆழ­மாக வேரூன்­றி­யுள்­ளது. ஆனால் இவை எதுவும் இயற்­கை­யா­கவோ அல்­லது தனி­ந­பர்­களின் விருப்­பத்­திலோ நடக்­க­வில்லை என்­ப­தையே இங்கு நான் சுட்­டிக்­காட்ட விரும்­பினேன்.
இவை அனைத்தும் ஏதோ ஒரு பொறி­மு­றையின் கீழ் திட்­ட­மி­டப்­பட்டு நடக்­கின்­றன என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூ­கத்தில் நிலவும் போதாமை
இவ்­வாறு கூறும்­போது, ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் தீவி­ர­வாத சிந்­த­னை­களை எதிர்க்கும் திறன் கொண்ட, தர்க்­க­ரீ­தி­யான மனோ­நி­லையை உரு­வாக்கத் தவ­றி­விட்­ட­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். இஸ்லாம் எவ்­வாறு அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தைப் போதிக்­கி­றது என்­பதில் எந்த மாற்­றுக்­க­ருத்தும் இல்லை, ஆனால் இஸ்­லாத்தின் போத­னைகள் பல்­வேறு மட்­டங்­களில் எவ்­வாறு கற்­பிக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தில்தான் கடு­மை­யான சிக்கல் உள்­ளது. முஸ்­லிம்­களின் சமய மற்றும் சிவில் நிறு­வ­னங்கள் இளம் தலை­மு­றையை அவர்கள் வாழும் அர­சியல் முறை­மையின் வட்­டத்­துக்கு அப்பால் (beyond bubble) சிந்­திக்­கவும் செயல்­ப­டவும் வலுவூட்டத் தவ­றி­விட்­டன.

முஸ்­லிம்­க­ளுக்­கான பிரத்­தி­யேக ஊடகம்
மீடியா போரம் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான ஊடகம் ஒன்­றுக்­காக பரப்­புரை செய்து வரு­வதை நான் அறிவேன். ஆனால், இவ்­வா­றான ஒரு ஊட­கத்­திற்­கான எந்த எழுத்து வடி­வி­லான மூலோ­பாயத் திட்­டத்­தையும் நான் இது­வரை கண்­ட­தில்லை. இலங்­கையில் வளர்ந்து வரும் ஊடக வெளி மற்றும் சுற்­றுச்சூழலின் தன்­மையை ஆழ­மாக ஆய்வு செய்­தவன் என்ற வகையில், மத அடை­யா­ளத்­துடன் கூடிய இத்­த­கைய ஊட­கங்­களால் தற்­போ­துள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் சரி செய்ய முடி­யாது என்­பது எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.

சிறு­பான்­மை­யி­னரின் குரலை வலுப்­ப­டுத்­தவும், நேர்­ம­றை­யான கதை­யா­டலை உரு­வாக்­கவும் (positive narrative)அனைத்து வகை­யான தீவிர வெளிப்­பா­டு­க­ளையும் எதிர்க்­கவும் மற்றும் அவர்­களின் ஜன­நா­யக நலன்­களைப் பாது­காக்­கவும் ஊட­கங்கள் ஒரு சக்­தி­வாய்ந்த கரு­வி­யாக இருந்­தாலும், தனி­யான ஊட­கத்­திற்­கான முஸ்லிம் மீடியா போரத்தின் முன்­னெ­டுப்­பு­களில் எனக்கு நம்­பிக்கை இல்லை.
தனி­யான இன-­ மத அடை­யா­ளத்­துடன் கூடிய பிரத்­தி­யேக ஊட­கத்­தினால் கருத்து வேறு­பா­டுகள் கொண்ட மக்­களை இணைக்க முடி­யாது என நான் அஞ்­சு­வதே இதற்குக் கார­ண­மாகும்.

எவ்­வா­றா­யினும், மீடியா போரம் தமது கோரிக்­கையில் இன்னும் உறு­தி­யாக இருந்தால், சிங்­கள ஊட­கங்­களில் முஸ்­லிம்­களை மோச­மாக சித்­த­ரிப்­பதில் உள்ள சிக்கல் தன்மை, சமூக யதார்த்தம் மற்றும் அர­சியல் என்பவற்றை புரிந்து கொள்­வது முக்­கி­ய­மாகும்.
நான் முன்னர் விப­ரித்­த­படி முஸ்லிம் மக்­களும் முஸ்லிம் அர­சி­யலும் கண்­ணுக்குப் புரி­யாக ஒரு பொறியின் கீழ் இருப்­ப­தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் பற்­றிய சிங்­கள ஊட­கங்­களின் பதிவு இயல்­பாக இடம்­பெறும் ஒன்­றல்ல. அத்­தோடு, குறிப்­பிட்ட சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தனிப்­பட்ட விருப்­பு­ வெ­றுப்­­பு­களால் மாத்­திரம் இடம்­பெ­று­வதும் அல்ல. இவை ­யாவும் அந்த சமூகப் பொறியின் பல்­வேறு பிர­தி­ப­லிப்­பு­களில் ஒன்­றாகும்.

துரு­வப்­ப­டுத்தல்
நாம் ஏற்­க­னவே ஒரு துரு­வப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்தில் வாழ்­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள மறந்­து­விடக் கூடாது.

இலங்­கையில் பெரும்­பா­லான தனி­ந­பர்கள் ஒரு வட்­டத்­திற்குள் (bubble) நின்றே வளர்க்­கப்­ப­டு­கி­றார்கள். நாம் ஒரு­வ­ரை­யொ­ருவர் அறிந்­தி­ருக்­கிறோம். ஆனால் நாம் ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்து கொள்­ள­வில்லை. கிரா­மப்­பு­றங்­களில் வளரும் ஒவ்­வொரு முஸ்லிம் பிள்­ளையும், நக­ரங்­களில் உள்ள பல பிள்­ளை­களும் தாழ்வு மனப்­பான்­மை­யு­டனும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்ற மனோ­ நி­லை­யு­ட­னுமே பிர­தான நீரோட்­டத்­துடன் தொடர்பற்றவர்களாகவுமே வளர்க்கப்படுகின்றனர்.

நமது கல்வி முறை நல்ல பௌத்­தர்கள், நல்ல முஸ்­லிம்கள், நல்ல இந்­துக்கள் மற்றும் நல்ல கிறிஸ்­த­வர்­களை உரு­வாக்கி வரு­கி­றது, ஆனால் நல்ல இலங்­கை­யர்­களை உரு­வாக்க தவ­றி­விட்­டது. நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரே பல்­க­லைக்­க­ழ­கத்தில் படிக்கும், ஒரே விடு­தி­களில் தங்­கி­யி­ருக்கும் பட்­ட­தா­ரி­களும் கூட, ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்து கொள்­ளாமல் – பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் தங்கள் வட்­டத்­திற்குள் (bubble) சௌக­ரி­ய­மாக இருக்­கி­றார்கள்.

45 சிங்­கள மற்றும் இந்து மாண­வர்­க­ளிடம் நான் அண்­மையில் மூன்று கேள்­வி­களை கேட்டேன். முஹம்­மது நபி (ஸல்) அவர்­களின் தந்­தையின் பெயர் என்ன? என்ற கேள்­விக்கு அவர்கள் தெரி­யாது என பதி­ல­ளித்தனர். ஆனால் அவர்கள் அனை­வரும் தாம் தமது முஸ்லிம் நண்­பர்கள் மூல­மாக `வட்­டி­லப்பம்` சாப்­பிட்­டுள்­ள­தாக கூறி­னார்கள்.
அல்­குர்­ஆ­னி­லி­ருந்து ஒரு போத­னையை மேற்கோள் காட்ட முடி­யுமா என்று கேட்டேன். எல்­லாரும் தங்­க­ளுக்குத் தெரி­யாது என்­றார்கள். ஆனால் அவர்­களில் பெரும்­பாலோர் நோன்புக் கஞ்சி குடித்­துள்­ள­தாகக் கூறினர். ஹஜ் பண்­டிகை பற்றி ஒரு விடயம் சொல்ல முடி­யுமா என்று கேட்டேன்.
அவர்­களில் பெரும்­பாலோர் ரம­ழா­னுக்குப் பிறகு கொண்­டா­டப்­ப­டு­வது என்று கூறினர். தங்­க­ளுக்கு பல இஸ்­லா­மிய நண்­பர்கள் இருப்­ப­தாக அவர்­களில் பெரும்­பா­லானோர் கூறினர். இதே கேள்­வி­களை நீங்கள் முஸ்லிம் மாண­வர்­க­ளி­டமும் கேட்டால் அதே பதி­லையே கூறுவார்கள் என நான் உறு­தி­படக் கூறுவேன்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­களை ஆத­ரிக்கும் பெரும்­பா­லான சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் இளை­ஞர்கள் அதே அடக்­கு­முறை மற்றும் பார­பட்­ச­மான அர­சியல் திட்­டத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன­வாதம் மற்றும் வெறுப்பு பேச்சு அவர்களின் சொந்த தெரிவு அல்ல. தனிப்பட்டவர்களுக்கு அப்பால் சென்று, இந்த பொறிமுறைமையையே நாம் எதிர்க்க வேண்டும்.

ஊடகப் பரப்பு
இலங்­கையில் வளர்ந்து வரும் செய்தி ஊடக மற்றும் தகவல் சூழலைப் புரிந்­து­கொள்­வது மீடியா போரத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஜேர்­ம­னியைச் சேர்ந்த ரிப்­போட்டர்ஸ் விதௌட் போடர்ஸ் எனும் அமைப்­புடன் இணைந்து ‘வெரிடே ரிசர்ச்’­நி­று­வனம் நடாத்­திய ஆய்வில், இலங்­கையில் ஊட­கங்­களின் உரிமை என்­பது மிகச் சிலரின் கைக­ளி­லேயே உள்­ளது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அச்சு மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களின் பங்­கு­களில் 75 வீதத்­திற்கும் அதி­க­மா­னவை ஐந்­துக்கும் குறை­வான நபர்­க­ளா­லேயே கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதே ஆய்வு, இலங்­கையில் ஊட­கங்கள் அதி­கா­ரத்­திலும் வர்த்­தகத் துறை­யிலும் உள்­ள­வர்­களின் ஆதிக்­கத்­தி­லேயே உள்­ளன என்ற உண்­மையை வெளிச்சம் போட்டுக் காட்­டு­கி­றது. இந்த யதார்த்தம் இலங்­கைக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல.

அதே­போன்று அரச ஒலி, ஒளி­ப­ரப்பு ஊட­கங்கள் அதி­கா­ரத்­தி­லுள்ள அர­சாங்­கங்­களின் அதிக செல்­வாக்­குக்கு உட்­ப­டு­கின்­றன. இங்கு நான் ஆட்­சிக்கு வரும் எல்லா அர­சாங்­கங்­க­ளை­யுமே குறிப்­பி­டு­கிறேன்.

இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேலும் இரு ஆய்­வுகள் பற்­றியும் குறிப்­பிட விரும்­பு­கிறேன். ஒன்று, நாலக குண­வர்­த­னவால் எழு­தப்­பட்ட பொது மக்­களின் நம்­பிக்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல் எனும் தலைப்­பி­லா­னது. அடுத்­தது ஐரெக்ஸ் நிறு­வ­னத்­தினால் வெளி­யி­டப்­பட்ட ஊடக நிலை­பேறு சுட்டி. இந்த இரு ஆய்­வு­களும் இலங்­கை­யி­லுள்ள ஊட­கங்கள் சுய­மாக தமது இருப்பை உறுதி செய்­ய­வும்­ சுயா­தீ­ன­மான நிறு­வ­னங்­க­ளாக தம்மைக் கட்­டி­யெ­ழுப்­பவும் முடி­யா­துள்­ளதை கண்­ட­றிந்­துள்­ளன. இப் பின்­ன­ணியில், தனி­யான ஊடகம் தேவை என குரல் கொடுக்கும் மீடியா போரமோ அல்­லது ஏனைய ஊடக நிறு­வ­னங்­களோ இந்த சிக்­க­லான சந்­தையில் நிலைத்­து­நிற்­ப­தற்­கான சாத்­தி­ய­மான திட்­டங்­களைக் கொண்­டி­ருக்­கின்­ற­னரா என்­பது எனக்கு உறு­தி­யாகத் தெரி­ய­வில்லை.

ஊடக சுதந்­திரம் காலா­வ­தி­யா­கி­விட்­டது
ஊடகம் என்றால் என்ன என்­பதே கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள இன்­றைய சூழலில் நாம் ஊடக சுதந்­திரம் பற்றிப் பேச வேண்­டி­யுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் ஊடக நிபுணர் கலா­நிதி காலிங்க சென­வி­ரத்ன எழு­திய “ உண்­மைக்குப் பின்­ன­ரான கால கட்­டத்தில் ஊடக சுதந்­திரம் மற்றும் தவ­றான தக­வல்­களின் கற்­பிதம்” எனும் தலைப்­பி­லான ஆங்­கில நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒரு விட­யத்தை இங்கு மேற்­கோள்­காட்ட விரும்­பு­கிறேன். அர­சாங்­கத்தின் கைக­ளுக்குள் சிக்­கி­யுள்ள ஊடகம் மக்­க­ளுக்கு சேவை செய்­கின்ற அல்­லது மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்ற சக்­தியை இழந்­து­விட்­டது என அவர் குறிப்­பி­டு­கிறார். இது நீண்ட உரை­யா­டலை வேண்டி நிற்கும் ஒரு விடயம் என்­கின்ற போதிலும், தேர்­தல்கள், இன முரண்­பா­டுகள் போன்ற சந்­தர்ப்­பங்­களில் ஊட­கங்கள் எவ்­வாறு நடந்து கொண்­டன என்­பதை நாம் நன்கு அறிவோம்.

அதே­போன்று எமது ஊட­கங்­களில் கட்­ட­மைக்­கப்­ப­டும்“­உண்மை” என்­பதும் பிரச்­சி­னைக்­கு­ரிய யதார்த்­த­மாக மாறி­யுள்­ளது. டாக்டர் ஷாபி விட­யத்தில் எவ்­வாறு ஊட­கங்கள் நீதி­ப­தி­க­ளா­கவும் நடு­வர்­க­ளா­கவும் செயற்­பட்டு சோடிக்­கப்­பட்ட கதை­களை உரு­வாக்­கின என்­பதை நாம் அறிவோம்.

ஒரு கட்­டத்தில் சஹ்­ரா­னுக்கு அர­சாங்கம் சம்­பளம் வழங்­கி­ய­தாக அரச தரப்பு எம்.பி.க்களை மேற்­கோள்­காட்டி ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. இந்த விவ­காரம் பாரா­ளு­மன்­றத்­திலும் விரி­வாக பேசப்­பட்­டது. சமூக ஊட­கங்­க­ளிலும் இது பற்றி அதிகம் விவா­திக்­கப்­பட்­டது. பின்னர் அதே ஊட­கங்கள் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யில்லை என இல­கு­வாகக் கூறின. இவ்­வாறு ஊடக பரப்­புரை மற்றும் பிழை­யான தக­வல்கள் என்­பன இன்று ‘சுதந்­திர ஊட­கத்­துக்கு’ பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளன.
தனி­யான ஊடகம் தேவை என குரல் கொடுக்கும் மீடியா போரமோ அல்­லது ஏனை­ய­வர்­களோ இவ்­வா­றான ஒரு சிக்கல் மிகுந்த சந்­தையில் சுயா­தீ­ன­மாக, சுதந்­தி­ர­மாக மற்றும் நியா­ய­மாக இருப்­ப­தற்­கான மூலோ­பாயத் திட்டம் மற்றும் நிதிக் கொள்­தி­றனைக் கொண்­டி­ருக்­கி­றார்­க­ளா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

ஏன் டிஜிட்டல் ஊடங்கள் தெரி­வாக வர­மு­டி­யாது?
டிஜிட்டல் மீடியா தொழில்­நுட்பம், ஊடக ஒருங்­கி­ணைப்பு, சமூக ஊட­கங்கள் மற்றும் ஸ்மார்ட்­போனின் அதி­கப்­ப­டி­யான பயன்­பாடு ஆகி­யவை ஊட­கங்கள் பாரம்­ப­ரி­ய­மாக இயங்கும் விதத்தை மாற்­றி­யுள்­ளது என்ற உண்­மை­யையும் முஸ்லிம் மீடியா போரம் கருத்திற் கொள்ள வேண்டும்.தற்­போது, ஸ்மார்ட்போன் வைத்­தி­ருக்கும் ஒவ்­வொரு குடி­ம­கனும் ஊடக நிறு­வ­ன­மாக மாறி­விட்­டனர். ஊடக நெறி­மு­றைகள் பாரி­ய­ளவில் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இருப்­பினும், முஸ்லிம் மீடியா போரத்தின் பரப்­பு­ரைகள் டிஜிட்டல் தளங்­களை நோக்கி முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை விவ­காரம்
இன்­றைய நாட்­களில் அதிகம் பேசப்­ப­டு­வது, இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை பற்­றி­யாகும். அது ஒரு பல்­லின சமூ­கத்தில் தமது உரி­மை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் தக்­க­வைத்துக் கொண்டு, தர்க்க ரீதி­யாக சிந்­தனை செய்து வாழக்­கூ­டிய முஸ்லிம் ஆளு­மை­களை உரு­வாக்கத் தவ­றி­யுள்­ளது. ஒரு கட்­டத்தில் முஸ்லிம் சேவை, மற்­று­மொரு சமய கல்விக் கூட­மா­கவும் மாறி­யுள்­ளது.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் 5 வேளையும் அதானை ஒலி­ப­ரப்ப வேண்டும் என எந்­த­வொரு முஸ்­லிமும் கோரிக்­கை­வி­டுக்­க­வில்லை. இது ஒரு அர­சியல் செயற்­திட்­ட­மாகும். ஆயிரக் கணக்­கான முஸ்­லிம்கள் இதனால் மகிழ்ச்­சி­ய­டை­யலாம். அர­சாங்க வானொ­லியில் அதானை ஒலி­ப­ரப்பும் ஒரே நாடு இலங்­கைதான் என்று அவர்கள் இதன் மூலம் பெரு­மைப்­பட்டுக் கொள்­ளலாம். இன்று இது முஸ்­லிம்­களின் உரி­மை­யாக கூட காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

ஆனால், அதான் ஒலி­ப­ரப்­பாகும் நேரம் வந்­த­வுடன், ஏனைய சம­யங்­க­ளது நிகழ்ச்­சிகள் இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்கள் பற்றி என்னால் அறிய முடி­கி­றது. இந்த நாட்­டி­லுள்ள எல்லா பிர­ஜை­க­ளுக்­கு­மான செய்தி ஒலி­ப­ரப்­பா­கும்­போது கூட, அதான் ஒலிக்கும் நேரம் வந்தால் செய்தி இடை­நி­றுத்­தப்­ப­டு­கி­றது. வெறும் பணத்­துக்­காக சினிமா பாடல்­க­ளுக்கு முன்னும் பின்னும் தொழு­கைக்­காக அழைக்கும் அதான் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இருப்­பினும் ஏனைய சம­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காத வகையில், இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் அதான் ஒலி­ப­ரப்­பப்­ப­டு­வ­தா­னது நியா­ய­மா­ன­தல்ல. ஒரு பல்­லின, பல கலா­சா­ரங்­களைக் கொண்ட சமூ­கத்தில் ஒவ்­வொரு சம­யமும் கலா­சா­ரமும் அவற்றின் அர­சியல் அதி­கா­ர­ரங்­க­ளுக்கு அப்பால் சம­மாக நடாத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

நான் சில மாதங்­க­ளுக்கு முன்னர் முஸ்லிம் சேவை நிகழ்ச்­சி­களை பகுப்­பாய்வு செய்தேன். அதில் காலை வேளையில் ஒலி­ப­ரப்­பப்­படும் 95 வீத­மான நிகழ்ச்­சிகள் அனு­ச­ரணை செய்­யப்­பட்­டவை. 80 வீத­மா­னவை குறைந்த தயா­ரிப்பு தரம் கொண்ட, முழுக்க முழுக்க சமய நிகழ்ச்­சி­களே. உயர்ந்த தரம் கொண்ட இஸ்­லா­மிய இசை, நாடகம், இலக்­கியம், வர­லாறு, கலா­சாரம் மற்றும் பன்­மைத்­துவம் என்­பன பணத்­துக்­காக இங்கு குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

கடந்த வருடம் ரம­ழானின் போது 47 நிமி­டங்­க­ளுக்கு விளம்­ப­ரங்கள் ஒலி­ப­ரப்­பப்­பட்­டதை நான் கவ­னித்தேன். – இது ஒலி­ப­ரப்பு நேரத்தைச் சுரண்­டு­வது இல்­லையா? இரண்­டரை மணி நேரங்கள் கொண்ட காலை நிகழ்ச்­சியில் 30 நிமி­டங்கள் நேரச் சரி­பார்ப்பு விளம்­ப­ரங்­களே ஒலி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் சேவை ரமழான் மற்றும் பிற காலங்­களில் மில்­லியன் கணக்­கான ரூபாய்­களை சம்­பா­திக்­கி­றது. ஆனால் நாடக கலை­ஞர்­க­ளுக்கும் எழுத்­தா­ளர்­க­ளுக்கும் ஒரு நாட­கத்­திற்கு தலா 1000 ரூபா வீதம் கொடுப்­ப­னவு வழங்­கு­வ­தற்குக் கூட நிர்­வாகம் தயக்கம் காட்­டு­வ­து­ து­ர­திஷ்­ட­வ­ச­மா­னது. ஆனால் எந்­த­வித வரு­மா­னத்­தையும் ஈட்­டித்­த­ராத பிரி­வுகள் அவற்றின் நாட­கங்­க­ளுக்­காக போது­மான கொடுப்­ப­னவைப் பெற்றுக் கொள்­கின்­றன.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம், அதன் நிலை­பே­றுக்­காக பணம் சம்­பா­திக்க வேண்டும் என்­பதை நான் ஏற்றுக் கொள்­கிறேன், ஆனால் அது ஏன் நிகழ்ச்­சி­களின் தரத்தை மேம்­ப­டுத்தி விளம்­பரக் கட்­ட­ணங்­களை அதி­க­ரிக்கக் கூடாது? இத­னூ­டாக ஏன் தேவை­யான பணத்தை பெற முயற்­சிக்கக் கூடாது?

முஸ்லிம் சேவை குறித்து ஆராய்­வ­தற்­காக இரண்டு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. இந்தக் குழுக்­களில் நிய­மிக்­கப்­பட்ட தனி நபர்­களைப் பற்றி விமர்­சிக்க நான் விரும்­ப­வில்லை. அது எனது நோக்­கமும் அல்ல. ஆனால், இக் குழுக்கள் அரச ஒலி­ப­ரப்பில் முஸ்லிம் சேவையின் தரத்தை அதி­க­ரிக்­கவும் அதன் தனித்­து­வத்தைப் பேணிக்­கொள்­ளவும் உதவக் கூடி­யவை என நான் நம்­ப­வில்லை.

முடி­வுரை
ஒலி­ப­ரப்பு ஊட­கங்­களின் அதிக புகழ் மற்றும் செல்­வாக்கைக் கருத்தில் கொண்டு, ஊட­கங்­களை இனி­மேலும் நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் விளை­விக்க பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது முக்­கியம்.

இன-­மத அடிப்­ப­டை­யி­லான ஊட­கங்­களைக் கோரு­வது தொடர்பில் முஸ்லிம் மீடியா போரம் தனது மூலோ­பாயத் திட்­டங்­களை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும். தனி­மைப்­ப­டு­வ­திலும் அந்­நி­ய­மா­த­லிலும் ஒரு­போதும் தீர்வு கிடைக்கப் போவ­தில்லை.

தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் வகையில் சக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற வேண்­டி­யது முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கடப்­பா­டாகும். இதன் மூலமே இன ஒற்­று­மைக்கு பாதிப்­பாக அமை­யக்­கூ­டிய விட­யங்­களை தைரி­யத்­து­டனும் சட்ட ரீதி­யா­கவும் தொழில்­முறை ரீதி­யா­கவும் எதிர்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். அத்­துடன் இலங்­கையின் பன்­மைத்­துவ சமூ­கத்­தினுள் முஸ்­லிம்­க­ளையும் சரி­ச­ம­மாக நடாத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்தை சக ஊட­க­வி­ய­லா­ளர்கள் விளங்கிக் கொள்­வ­தற்கு உதவ வேண்­டி­யதும் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது கடப்­பா­டாகும். அத்­துடன் தமது சுய அடை­யா­ளத்தைப் பாது­காத்துக் கொண்டு தேசிய நல­னுக்­காக பணி­யாற்­று­வ­தற்­காக தம்மை மீளக் கட்­ட­மைத்துக் கொள்­வதும் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பொறுத்­த­வரை காலத்தின் தேவை­யாகும்.

இந்த டிஜிட்டல் யுகத்தில், செலவு குறைந்த, வினைத்­தி­றன்­மிக்க, இல­கு­வாக கையாளக் கூடிய டிஜிட்டல் ஊட­கத்தை சாத்தியமாக்குவது பற்றி முஸ்லிம் மீடியா போரம் சிந்திக்க முடியும். இருப்பினும், அது தனியானதொரு ஊடகத்தை உருவாக்குவது என்பதை விடுத்து, தேசத்தினதும் அனைத்து மக்களதும் நலன்களுக்காக பணியாற்றுகின்ற, உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுகின்ற தொழில்சார் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும். எனது பார்வையில், இன்னுமொரு பாரம்பரிய இன-, மத பின்னணி கொண்ட ஊடகம் ஒன்றில் முதலிடுவதை விட இதுவே மிகவும் அவசியமானதாகும்.

வழக்­க­மான நிகழ்­வுகள், பாராட்டு வைப­வங்கள், ரமழான் பெரு­நாட்கள், பள்­ளி­வாசல் திறப்பு நிகழ்­வுகள் என்­பன சில வேளை­களில் பெரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தக் கூடிய சிறிய நகர்­வு­க­ளாக இருக்­கலாம். எனினும் கலா­சா­ரங்­களை அறிந்து கொள்­கின்ற, பரி­மாறிக் கொள்­கின்ற, ஒரு­வ­ரோ­டொ­ருவர் ஈடு­பாட்­டுடன் செயற்­படக் கூடிய நிலை­பே­றான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தக் கூடிய பாரிய நகர்வுகளே இங்கு அவசியமாகும்.
இறுதியாக, இலங்கை முஸ்லிம்களின் இதயமாக விளங்குகின்ற இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை, முஸ்லிம் புத்திஜீவிகளின் பங்களிப்புடன் மறுசீரமைப்பது காலத்தின் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.