கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்தமயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி- 3

0 402

லத்தீப் பாரூக்

பொது பல சேனாவின் ஆதிக்கம் தான் அந்தக் கூட்­டத்தில் காணப்­பட்­டது. சட்­டப்­படி தான் இந்த அச்­சு­றுத்தல் நிலை­மைகள் கையா­ளப்­பட வேண்டும் என தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் விளக்­க­ம­ளித்தார். சட்­டமோ வர­லாறோ ஏனைய எது­வுமே நமக்கு ஒரு பொருட்­டல்ல, குறிப்­பிட்ட தினத்­துக்குள் கூர­கல பிர­தேசம் சுத்தம் செய்­யப்­ப­டா­விட்டால் (குறிப்­பிட்ட ஆண்டின் பெப்­ர­வரி 14ஆம் திகதி) நாங்கள் 25000 பேர் பல­வந்­த­மாக அங்கு புகுந்து அந்த இடத்தைக் கைப்­பற்­றுவோம் என அவர்கள் அங்கு கூச்­ச­லிட்­டனர்.

இந்தக் கூட்­டத்தில் கலந்து கொண்ட பிர­தி­நி­தி­களின் கருத்­துப்­படி பெப்­ர­வரி 14ஆம் திகதி முற்­று­கைக்­கான அச்­சு­றுத்தல் நிலை தோன்­றி­யது. இது புனித பிர­தேசம் கல­வர பூமி­யாக மாறலாம் என்ற அச்­சத்­தையும் தோற்­று­வித்­தது. காரணம் குறிப்­பிட்ட அன்­றைய தினம் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் வரு­டாந்த நினைவு தின­மா­கவும் நூற்றுக் கணக்­கான முஸ்லிம் பக்­தர்கள் அங்கு கூடும் தின­மா­கவும் அமைந்­தி­ருந்­தது. இருப்­பினும் விரி­வான கலந்­து­ரை­யா­டலின் பின் ஏப்­ரல் 30ஆம் திகதி வரைக்கும் அந்தக் கால­வ­ரை­யறை ஒத்தி வைக்­கப்­பட்­டது. அதற்குள் ஒரு முடிவு காணப்­பட வேண்டும் என்றும் முடிவு செய்­யப்­பட்­டது.

பாது­காப்பு அமைச்சில் கூட்டம்:
சர்ச்­சைக்­கு­ரிய மேற்­படி கூட்டம் சரி­யான ஒரு முடிவை எடுக்கத் தவ­றி­யதால் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுடன் நேர­டி­யான ஒரு சந்­திப்­புக்கு வாய்ப்பை கேட்­டி­ருந்­தனர். குறிப்­பிட்ட தினத்தில் பாது­காப்பு அமைச்­சுக்கு முஸ்லிம் பிர­தி­நி­திகள் வந்­த­போது ஏற்­க­னவே அங்கு பொது பல சேனா உறுப்­பி­னர்கள் காணப்­பட்­டனர். இந்தக் கடினப் போக்கு குழு­வுடன் இது சம்­பந்­த­மாகப் பேச தாங்கள் தயா­ரில்லை என்று முஸ்லிம் பிர­தி­நி­திகள் திட்­ட­வட்­ட­மாக மறுத்­தனர். அதனைத் தொடர்ந்து பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் வேறு ஒரு பௌத்த தேரர்கள் குழுவை அங்கு வர­வ­ழைத்தார்.

இந்தக் குழுவில் மித­வாத போக்­குள்ள மற்றும் கல்வித் தகைமை உள்ள பௌத்த தேரர்கள் காணப்­பட்­டனர். இதில் பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் குறிப்­பிடத்தக்­கவர். ஹலால் விட­யத்தில் தலை­யிட்டு ஒரு சம­ரசத் தீர்வை ஏற்­ப­டுத்­தி­யவர் இவர்தான். இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்­பட்டு இந்த விட­யத்­துக்கு முற்றுப் புள்ளி வைக்­கப்­பட வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தினார். எந்த வித­மான தீர்­வு­க­ளுக்கும் வர முன்னர் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் சர்ச்­சைக்­கு­ரிய இடத்­துக்கு விஜயம் செய்ய வேண்டும் என முஸ்லிம் பிர­தி­நி­திகள் இங்கு தான் வலி­யு­றுத்­தினர்.

புனித வழி­பாட்டு இடத்தை சுற்றி எழுந்­துள்ள பதற்ற நிலையைத் தணிப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு செய­லா­ளரின் விஜயம் வழி­ய­மைக்கும் என ரொஷானா அபு­சாலி நம்­பினார். இந்த இடம் முற்­று­கை­யி­டப்­படும் வெசாக் தினத்தில் அந்த இடத்தை ஆக்­கி­ர­மித்து அங்­குள்ள முஸ்­லிம்கள் சம்­பந்­தப்­பட்ட அனைத்து நினைவுப் பொருள்­களும் அழித்­தொ­ழிக்­கப்­படும் என்ற கடும் போக்­கா­ளர்­களின் அச்­சு­றுத்­தலின் மத்­தி­யி­லேயே பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரின் விஜயம் அதை தணிக்க உதவும் என்று அவர் நம்­பினார். தொல்­பொருள் திணக்­கள பணிப்­பா­ளரின் கூட்­டத்தின் மூலம் சில சாத­க­மான முடி­வு­க­ளுக்கு வரலாம் என்றும் அவர் நம்­பினார். பள்­ளி­வா­ச­லுக்கு எதுவும் நடக்­காது.

குகையைச் சுற்றி உள்ள சில பகு­தி­களை தனது நிர்­வாகம் இழந்­தாலும் பள்­ளி­வாசல் தமக்குக் கிடைக்கும். அங்கு வழ­மைபோல் சமயக் கிரி­யை­களை முன்­னெ­டுக்­கலாம். முஸ்­லிம்கள் தொடர்ந்தும் அங்கு வருகை தரலாம் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது என்று அவர் உறு­தி­யாக நம்­பினார். அந்த நம்­பிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து செயற்­ப­டு­வதே தனது பிர­தான கட­மை­யாக இருக்கும் என்றும் அவர் தெரி­வித்தார்.

சர்ச்­சையை உரு­வாக்­குதல்
இந்த நாட்டில் சட்­டத்தை துச்­ச­மென மதித்து சர்ச்­சை­களை உரு­வாக்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்ட பௌத்த பேரி­ன­வாத கடும் போக்­கா­ளர்­களால் உரு­வாக்­கப்­பட்ட பல்­வேறு பிரச்­சி­னை­களில் முக்­கி­ய­மா­னதே கூர­கலை விவ­காரம். ஹலால் பிரச்­சினை, ஹபாயா பிரச்­சினை என தேவை­யற்ற சர்ச்­சை­களை உரு­வாக்­கி­ய­வர்­களும் இவர்­களே. சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் ஒரு வகை சித்­தப்­பி­ர­மையை உரு­வாக்­கு­வதே அவர்­களின் நோக்கம். இவற்றின் தொடர் விளை­வா­கத்தான் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை புறக்­க­ணித்தல் அவர்­க­ளு­ட­னான சிநே­க­பூர்­வ­மான உற­வுகள் கொடுக்கல் வாங்­கல்­களை புறக்­க­ணித்தல் என்­ப­னவும் அமைந்­தி­ருந்­தன. இதன் உச்­ச­கட்­டாக அவர்கள் கையாண்ட வழி­மு­றைகள் தான் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான நேரடி வன்­மு­றைகள் மற்றும் வழி­பாட்டு இடங்கள் மீதான தாக்­கு­தல்கள் என்­பன அமைந்­தன.

முஸ்லிம் விரோதப் பிர­சாரம் உச்ச கட்ட இழு­பறி நிலைக்கு வந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கமும் அவர்­க­ளது முதி­ய­வர்­களும் இன்னும் எவ்­வ­ளவு காலத்­துக்கு தமது சமூ­கத்தின் இளை­ஞர்­களை பொறு­மை­யா­கவும் அமை­தி­யாவும் வைத்­தி­ருக்க முடியும் என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. பதில் தாக்­கு­த­லுக்கோ அல்­லது பழி­வாங்­க­லுக்கோ அவர்கள் சென்றால் அது இந்த நாட்டில் இனங்­க­ளுக்கு இடையில் கொழுந்து விட்­ட­டெ­ரியும் தீயை மூட்­டி­விடும். ஒரு சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ரான தொடர் பிர­சா­ரங்­களும் வெறுப்­பூட்­டல்­களும் ஒரு நாட்டை சமய மற்றும் இன ரீதி­யான முறுகல் நிலையின் முனைக்கு கொண்டு வந்து விடும். இவை எல்­லா­வற்றையும் உலகின் இன்­னொரு புறத்தில் இருந்து முஸ்லிம் நாடுகள் பல அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றன என்­ப­தையும் மறந்து விடக் கூடாது.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராகக் கிளப்­பப்­பட்டு வரும் பதற்ற நிலை சம்­பந்­த­மாக இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு (OIC) பகி­ரங்­க­மான அறிக்கை ஒன்றை ஏற்­க­னவே விடுத்­துள்­ளது. அன்­றைய ஜனா­தி­ப­திக்கு தனிப்­பட்ட முறை­யிலும் இது சம்­பந்­த­மான ஒரு கடி­தத்தை அந்த அமைப்பு அனுப்பி இருந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடினப் போக்கு அமைப்­புக்­களின் அச்­சு­றுத்­தல்­களை முடி­வுக்கு கொண்டு வந்து அமை­தியை நிலை­நாட்­டு­மாறு அந்தக் கடி­தத்தில் கோரிக்கை விடப்­பட்­டி­ருந்­தது.

அதி­காரப் பகிர்வு, தேசிய நல்­லி­ணக்கம், யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் என்­பன போன்ற விட­யங்கள் கார­ண­மாக மேற்­கு­லகின் ஆத­ரவை இந்த நாடு பெரும்­பாலும் இழந்­துள்ள நிலையில், இலங்­கைக்கு ஆத­ர­வாக இருக்கும் இந்­தியா கூட தனது சர்­வ­தேச செயற்­பா­டு­க­ளுக்­காக பெரும்­பாலும் ஆபி­ரிக்க மற்றும் முஸ்லிம் நாடு­களின் தயவை நாடி­யுள்ள பின்­ன­ணியில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போக்கு நாட்­டுக்கு நன்­மை­ய­ளிப்­ப­தாக அமை­யாது.

ஜெனீ­வாவில் (2012) இடம்­பெற்ற மனித உரிமை பேரவைக் கூட்­டத்தில் இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தின் பாதகத் தன்­மையை தணிப்­பதில் பாகிஸ்தான் தான் முன்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டது என்­பதும் இங்கு நினை­வூட்­டத்­தக்­கது. விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான உள்­நாட்டு யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் இலங்கை இரா­ணு­வத்­துக்கு தேவை­யான சீரான ஆயுத விநி­யோ­கங்­களை மேற்­கொண்ட ஒரு சில நாடு­களில் பாகிஸ்­தானும் உள்­ள­டங்கும். அந்­த­ள­வுக்கு நெருக்­க­மான உற­வு­களை இரு நாடு­களும் கொண்­டி­ருந்­தன.

இவற்றை எல்லாம் மீறி இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப் போக்கு மேலோங்­கியே காணப்­பட்­டது. அதன் தாக்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளா­கவும் பிரதிபலித்­துள்­ளன. முஸ்லிம் சமூகத்தின் மீதும் அதன் வர்த்தக மற்றும் வழிபாட்டு இடங்கள் மீதுமான தாக்குதல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தேவையான ஆதரவைத் திரட்ட தேவையான பிரசாரத்தில் ஈடுபடுவதில் பாகிஸ்தான் கூட இப்போது தடுமாற்ற நிலையில் உள்ளது. (முற்றும்)
குறிப்பு: அசல் பிரதி 2013 ஏப்ரல் 11 இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.