தமிழ் – முஸ்லிம் சகவாழ்வு பாதிக்கப்படலாகாது

0 1,222

அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி),
M.Phil.(UPDN)
சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்,
ஜாமிஆ நளீ­மிய்யா, பேரு­வளை
பிரதித் தலைவர்,தேசிய ஷூரா சபை
sheikhfaleel@gmail.com

வடக்கு கிழக்கில் தேங்காய் பூவும் பிட்டும்போல் வாழும் தமிழ்-­  முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் பிரி­வி­னையும் மோதலும் ஏற்­ப­டு­வது இரண்டு சமூ­கங்­க­ளையும் பாதிப்­ப­துடன் இந்த நாட்டின் ஒட்டு மொத்த பின்­ன­டை­வுக்கும் கார­ண­மாக அமையும். சிங்­கள – முஸ்லிம் ஒற்­று­மையை விட தமிழ் -­முஸ்லிம் ஒற்­றுமை எந்த வகை­யிலும் முக்­கி­யத்­துவம் குறைந்­த­தல்ல. முப்­பது வருட யுத்த காலத்தில் இவ்­வு­றவு பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் ஓர­ளவு அவ்­வு­றவு பல­ம­டைந்­தாலும் கடந்த காலங்­களை விட மிக கிட்­டிய காலத்தில் இவ்­விரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இடைவெளி அதி­க­ரித்து வரு­வதை தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதன் பின்­ன­ணியில் வெளிநாடு­களைச் சேர்ந்த புவி அர­சியல் நோக்கம் (Geopolitics) கொண்ட சில சக்­தி­களும், மத­ச­கிப்­புத்­தன்­மை­யற்ற (Religious Intolerance) சிலரும், உள்­நாட்டு அர­சியல் இலக்­கு­களை அடந்து கொள்ளும் (Political mileage) பிரித்­தாளும் கொள்­கையை (Divide and Rule) கொண்ட சில சக்­தி­களும் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது.காலா கால­மாக ஒரே பிர­தே­சத்தில், ஒரே மொழியை தாய் மொழி­யாகக் கொண்டு வாழும் அதுவும் பேரி­ன­வாத சக்­தி­களால் ஒடுக்­கப்­பட்ட இரு சிறு­பான்மைச் சமூ­கங்கள் இப்­ப­டி­யி­ருப்­பது இருள் ­ம­ய­மான எதிர்­கா­லத்­தையே தோற்­று­விக்கும் என்­பதை இரு சமூ­கங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் சிந்­தித்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

பின்னிப்பிணைந்த சமூக வாழ்வு

இலங்கை முஸ்­லிம்கள், தென்­ப­குதி சிங்­க­ள­வர்­க­ளுக்கு மத்­தியில் சிறு­பான்­மை­யி­ன­ராக, இன ஐக்­கி­யத்தைப் பேணி வாழ்ந்து வந்­தது போலவே, தொன்­று­தொட்டே வடக்கு, கிழக்கில் தமி­ழர்­க­ளுடன் வாழ்ந்து வரு­கி­றார்கள். ஆனால், சிங்­கள சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் பற்­றிய ஆய்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும் அள­வுக்கு தமி­ழர்­க­ளுடன் வாழ்ந்து வரும் முஸ்­லிம்கள் பற்­றிய ஆய்­வுக்குப் போதி­ய­ளவு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­ப­டா­தி­ருப்­பது ஒரு குறை­யாகும். ஆங்­காங்கே எழு­தப்­பட்ட சில தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

பிணைக்கும் தாய்­மொழி

இந்­நாட்டு முஸ்­லிம்கள் பெரும்­பாலும் அர­பி­க­ளது வழித்­தோன்­றல்­க­ளாக இருந்தும் அரபை தாய்­மொ­ழி­யாகக் கொள்­ள­வில்லை. சுமார் 70% முஸ்­லிம்கள், சமூக தொடர்­பு­க­ளுக்­கான பிர­தா­ன­மான மொழி­யாக சிங்­க­ளத்தைக் கொள்ளும் – வடக்கு கிழக்கு தவிர்ந்த- வெ­ளி ­மா­வட்­டங்­களில் வாழ்ந்த போதிலும், சிங்­களம் அவர்­களில் பெரும்­ பா­லா­ன­வர்­க­ளது தாய் மொழி­யாக இல்லை. அவர்­களும் பெரும்­பாலும் தமி­ழையே தாய் மொழி­யாகக் கொள்­கி­றார்கள். இதி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்கும் தமிழைத் தாய் மொழி­யாகக் கொண்டு வாழும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டை­யே­யுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்­களப் பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் சிங்­க­ளத்தை தமது மொழி­யாகக் கொள்­ளா­தி­ருப்­பதால் பல சிர­மங்­க­ளையும் நெருக்­கு­தல்­க­ளையும் எதிர்­கொள்­கி­றார்கள். பொரு­ளா­தாரம், கல்வி, வேலை­வாய்ப்பு, தொடர்­பா­டல்­துறை, அர­சியல் போன்ற பல துறை­களில் அவர்கள் பின்­தங்­கி­யி­ருப்­ப­தற்­கான கார­ணங்­களில் ஒன்­றாகக் கூட அதனைக் குறிப்­பி­டு­வது பொருத்­த­மாகும். தமிழை தமது தாய்­மொ­ழி­யாகக் கொண்டு அதன் வளர்ச்­சிக்கு முஸ்­லிம்கள் பங்­க­ளிப்புச் செய்­து ­வ­ரு­கி­றார்கள். இன்பத் தமிழ் என அதனைப் போற்­றி­னார்கள். தமிழை அரபு மொழி எழுத்­துக்­களில் ‘அர­புத்­தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போத­னை­களை அத­னூ­டாகச் செய்­தார்கள். ‘அரபுத் தமிழ் எங்கள் அன்­புத்­தமிழ்’ என அதனைப் போற்­றி­னார்கள்.

மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் சக­வாழ்வைப் பேணி­ வந்­த­மையை இது குறித்­து­ நிற்­கி­றது. இரு இனங்­க­ளையும் இணைக்கும் பிர­தான பால­மாக தமிழ் மொழி அமைந்­தது. இலங்கை முஸ்­லிம்கள் ‘இனத்தால் தமி­ழர்கள், மதத்தால் முஸ்­லிம்கள்’ என்று சேர். பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் கூறு­ம­ள­வுக்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் பல்­வே­று­பட்ட ஒற்­று­மை­க­ளோடு வாழ்ந்­து­ வந்­தி­ருக்­கி­றார்கள்.

வடக்கு கிழக்­கா­யினும் ஏனைய பிர­தே­சங்­க­ளா­யினும் பொது­வாக முஸ்லிம் – தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக் ‘தமிழ் மொழியை இரு­சா­ராரும் பேசு­வதால், ஒன்­று­பட முடியும். தமிழை, முஸ்­லிம்கள் தாய் மொழி­யாகக் கொண்­டி­ருப்­பது இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இறுக்­க­மான வர­லாற்­று­றவு இருந்­தி­ருப்­பதைக் காட்டும். தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்­டு­ மல்­லாது, கலா­சாரம், பண்­பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்­டுப்­பாடு, பாரம்­ப­ரியம், திரு­மணச் சடங்­குகள் போன்ற சில­வற்றில் சில அம்­சங்­க­ளிலும், சில­வற்றில் முழு­வ­து­மாக ஒரு­மைப்­பட்டுக் காணப்­ப­டு­கின்­றனர். இவ்­வம்­சங்­க­ளி­லான ஒரு­மைப்­பா­டுகள் பல தனிச்­சிங்­களப் பிர­தே­சங்­களில் வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளி­டை­யேயும் காணப்­ப­டு­வ­தா­னது, முஸ்­லிம்கள் ஆரம்­ப ­கா­லங்­களில் சிங்­கள மக்­க­ளுடன் அல்­லாது தமிழ் மக்­க­ளு­ட­னேயே கூடு­த­லான உற­வு­களை வைத்­துள்­ளனர் என்று நம்பச் செய்­கி­றது.” என்­கிறார். “முஸ்­லிம்­க­ளது சில பெயர்கள் தமி­ழர்­களின் சில பெயர்­க­ளது திரி­பு­க­ளா­கவும் ஒத்­த­வை­யா­கவும் உள்­ளன. உது­மா­நாச்சி, மௌலா­மக்காம் நாச்­சியா, சின்­ன­ராசா சந்­திரா போன்ற பெயர்­களைப் பார்க்கும் போது, முன்­னைய காலங்­களில் முஸ்­லிம்கள் தமிழ் மக்­களை அந்­நி­யர்­க­ளாகக் கரு­திக்­கொள்­ள­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.” என்றும் அவர் கூறு­கிறார்.

சிங்­களப் பகுதி முஸ்­லிம்கள் கூட தமிழைத் தாய் மொழி­யாகக் கொண்­டி­ருப்­ப­தற்கும் தமிழ் மக்­களின் சில பழக்க வழக்­கங்­களை அவர்கள் கொண்­டி­ருப்­ப­தற்கும் காரணம் கூறும் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள், அரா­பி­யர்கள் இலங்­கைக்கு வந்து முதன் முதலில் குடி­யே­றியபோது, அவர்­களைத் தமி­ழர்­களே வர­வேற்­றனர் என்றும் அடைக்­கலம் கொடுத்து ஆத­ரித்­தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்­க­ளி­டையே தமது குடும்ப உற­வு­க­ளையும், வர்த்­தக உற­வு­க­ளையும், திரு­மண உற­வு­க­ளையும் பெரு­ம­ளவில் வைத்துக் கொண்­டார்கள் என்றும் குறிப்­பி­டு­கிறார். இக்­க­ருத்தை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யா­விட்­டாலும் இதில் பெரி­யதோர் உண்மை மறைந்­தி­ருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.
வட­ப­கு­தியில் மட்­டு­மன்றி, தென்­ப­குதி முஸ்­லிம்­களும் கூட தமிழைத் தாய்­மொ­ழி­யாகக் கொள்­வ­தற்கு பின்­வரும் கார­ணமும் கூறப்­ப­டு­கி­றது. 15ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில், இந்து சமுத்­திர வணி­கத்தில் விஜய ஆட்­சி­யா­ளர்­களின் எழுச்சி ஏற்­பட்­டது. இக்­கா­லப்­பி­ரிவில் சோள மண்­டலக் கரையை (Coromandel Cost) ஒட்டி நடை­பெற்ற வணி­கத்தில் தமிழ்­மொழி முக்­கிய இடம் பெற்­றது. அதே­வேளை, தென்­னி­லங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் சோள மண்­டலக் கரை­யி­லுள்ள ‘மஃபர்’ பிர­தேச முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் காணப்­பட்ட வணிக, பண்­பாட்டுத் தொடர்­புகள் ஆகி­ய­னவே மாத்­தறை மாவட்ட முஸ்­லிம்கள், பொது­வாகக் கூறின் சிங்­களப் பிர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழி­யா­கவும் கலா­சாரப் பண்­பாட்டு மொழி­யா­கவும் கொள்ளும் வர­லாற்றுச் சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யது என கலா­நிதி சுக்ரீ அபிப்­பி­ரா­யப்­ப­டு­கிறார்.

எனவே, ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் கூறும் கார­ணத்­தி­லி­ருந்து கலா­நிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்­தி­யா­சப்­பட்ட போதிலும், தமி­ழுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வுக்கு மேற்­படி இரு கார­ணங்­களைத் தவிர வேறு கார­ணங்­களும் இருந்­தி­ருக்­கலாம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

மொத்­த­மாக நோக்கின், முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழ் மொழிக்­கு­மி­டை­யி­லான உறவு மிகவும் பழ­மை ­வாய்ந்­தது. தமி­ழர்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து வரும் பகு­தி­களில் முஸ்­லிம்கள் சக­வாழ்வைப் பேணி காலா­ கா­ல­மாக வாழ்ந்து வரு­கி­றார்கள். அவர்கள் தமிழைத் தமது தாய் மொழி­யாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். பழக்­க ­வ­ழக்­கங்கள், சமூக உற­வுகள், மர­புகள், வாழ்வு முறை என்­ப­வற்­றிலும் பல ஒற்­று­மைகள் இருந்து வரு­கின்­றன

வடக்கில் சக­வாழ்வு

தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் தென்­ப­கு­தியைப் போலவே மிக நீண்ட கால­மாக வாழ்ந்து வரு­கி­றார்கள். அங்கு சிறுபான்­மை­யாக வாழும் அவர்­க­ளது கிரா­மங்கள், தமிழ் கிரா­மங்­க­ளுக்கு அரு­க­ருகே அமைந்­துள்­ளன. வியா­பார, கலா­சார, அர­சியல், சமூக உற­வுகள் இரு­சா­ரா­ரையும் ஒருங்­கி­ணைத்து வந்­துள்­ளன. அண்­மைக்­கால இன­வாத சூழல் உரு­வாகும் வரை அந்த சௌஜன்ய உறவு நீடித்­த­தாகக் கொள்ள முடியும். வடக்கு கிழக்­கி­லுள்ள சகல மாவட்­டங்­க­ளிலும் பல்­வே­று­பட்ட விகி­தா­சா­ரங்­களில் முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­தார்கள்.

உதா­ர­ணத்­துக்­காக சில பிர­தே­சங்­க­ளது தக­வல்­களை மாத்­திரம் இங்கு நோக்­கலாம்:-
மன்னார் மாவட்­டத்தைப் பொருத்த வரை மாந்­தோட்டத் துறை­மு­கத்­து­ட­னான அர­பி­க­ளது தொடர்பு மிகவும் நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­தாகும். ’12ம்-15ம் நூற்­றாண்டு காலத்தில் இப்­பி­ர­தே­சங்­க­ளு­ட­னான (அவர்­க­ளது) தொடர்பு பன்­ம­டங்­கா­கி­யது. சேர் அலெக்­ஸாண்டர் ஜோன்ஸ்­டனின் கருத்­துப்­படி இக்­கா­ல­கட்ட மன்னார் பிர­தேசம் முஸ்­லிம்­களின் வர்த்­தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்­பட்­டது. மாந்­தோட்டைத் துறை­முகம் இவர்­க­ளது கப்பல் இறங்கு துறை­யா­கவும் வர்த்­தக பண்­ட­க­சா­லை­யா­கவும் விளங்­கி­யது. முஸ்­லிம்­களால் இலங்­கையின் உள்­நாட்டு, வெளி­நாட்டு வர்த்­த­கமும் ஓங்கி வளர்ந்­தது.

மன்னார் பகுதி முஸ்­லிம்கள் ஏற்­றி­றக்­கு­ம­தியில் மட்­டு­மன்றி, முத்­துக்­கு­ளிப்­பது, சங்கு எடுப்­பது, பட­கோட்­டு­வது போன்ற தொழில்­க­ளிலும் ஈடு­பட்டு வந்­தனர். கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் இவர்­க­ளுக்­கெ­தி­ராக கடும் நட­வ­டிக்­கை­களை எடுத்­தார்கள். இருப்­பினும், முத்­துக்­கு­ளிப்­பிலும், சங்கு குளித்­த­ளிலும் அவர்கள் தொடர்ந்து ஈடு­பட அனு­ம­திக்­கப்­பட்­ட­மைக்கு அத்­தொ­ழிற்­து­றை­சார்ந்த அம்­மக்­க­ளது தேர்ச்­சிதான் கார­ண­மாகும்.
1902ஆம் ஆண்டு எடுக்­கப்­பட்ட கணிப்­பீட்டின் படி, மன்னார் மாவட்­டத்தில் இருந்த குறிப்­பி­டத்­தக்க முஸ்லிம் செறிவை கொண்ட 29 குடி­யி­ருப்­புக்­களில், மாந்தை- நானாட்டான் பிர­தே­சத்தில் மட்டும் 11 குடி­யி­ருப்­புக்கள் இருந்­தன. ஆனால், இப்­பி­ர­தேச முஸ்லிம் கிரா­மங்கள் கத்­தோ­லிக்க அல்­லது இந்து சமய மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சூழலில் அமை­யப்­பெற்­றுள்­ளன. இன்­னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிரா­மங்கள் ஒன்­றோ­டொன்று புவி­யியல் ரீதி­யாக தொடர்­பட்டிருந்­தன.

கட்­டுக்­கரைக் குளத்­திற்­குட்­பட்ட பிர­தேச முஸ்­லிம்கள் எண்­ணிக்­கையில் குறை­வா­ன­வர்­க­ளாக இருந்­தாலும் நாளாந்த வாழ்க்­கையில் அவர்கள் தமி­ழர்­க­ளுடன் அதிக தொடர்­பு­களை வைத்­தி­ருந்­தார்கள். வயல் வேலை­களில் இவ்­விரு இனத்­த­வரும் பரஸ்­பரம் உதவி செய்­தார்கள். கொடுக்கல் வாங்­கல்­களில் மிக­வுமே கௌர­வ­மாக நடந்­து­கொண்­ட­தோடு பிணக்­கு­களின் போது பிரச்­சினை முற்­றி­வி­டாது அப்­பி­ரச்­சி­னையை சமூ­க­மட்­டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடை­முறை வழி­களைக் கொண்­டி­ருந்­தனர். ஒரு­வ­ரது சுக­துக்­கங்­களில் மற்­றவர் மிகச்­ச­ர­ள­மாக பங்கு பற்­றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உற­வுப்­ப­தங்­களைக் கொண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் அழைத்துக் கொண்­டார்கள். ஒரு சம­யத்­த­வரின் விருந்­தோம்­பல்­களில் மற்­றவர் எவ்­வித சங்­க­ட­மு­மின்றி பங்­கேற்கும் வழமை இப்­பி­ர­தே­சத்தில் காணப்­பட்­டது.

வட­மா­கா­ணத்தின் மற்­றொரு மாவட்­ட­மான முல்­லைத்­தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்­தொ­கையில் 5% ஐக் கொண்ட முஸ்­லிம்கள், பெரும்­பான்மைத் தமி­ழர்­க­ளோடும், சிறு­பான்மைச் சிங்­க­ள­வர்­க­ளோடும் கலந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1921ஆம் ஆண்டின் கணிப்­பீட்டின்படி மரி­டைம்­பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்­லிம்கள் 6.5% ஆகவும், முல்­லைத்­தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்­தார்கள்.

முல்­லைத்­தீவுப் பகு­தியில் முஸ்­லிம்கள் 1800ஆம் ஆண்டு முதல் வாழ்­கி­றார்கள் என்­ப­தற்­கான வர­லாற்­றா­தா­ரங்கள் உள்­ளன என பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் கூறு­கிறார். அதற்கு முன்­னரும் முஸ்­லிம்கள் வாழ்ந்­த­மைக்­கான வாய்­மொழி ஆதா­ரங்­களே உள்­ளன. அந்­த­வ­கையில், யாழ்ப்­பாண முஸ்­லிம்கள் போர்த்­துக்­கே­யரால் வெளி­யேற்­றப்­பட்ட போது, இங்கு வந்து குடி­யே­றி­யி­ருக்­கலாம் என்றும் அவர் கூறு­கிறார்.

முல்­லைத்­தீவு முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் மூன்று கிரா­மங்­க­ளான தண்­ணீ­ரூற்று, நீரா­விப்­பிட்டி, ஹிஜ்­ரா­புரம் என்­ப­வற்றின் வரை­ப­டத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்­ளி­வாசல், இந்துக் கோயில், கிறிஸ்­தவ தேவா­லயம் ஆகிய வணக்­கஸ்­த­லங்கள் இப்­பி­ர­தே­சத்தில் அரு­க­ருகே அமைந்­தி­ருப்­பது இப்­பி­ர­தே­சத்தின் நீண்ட கால இன ஐக்­கி­யத்­திற்குச் சான்­றாகும்.

கிழக்கில் சக­வாழ்வு

கிழக்கு மாகா­ணத்­திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்­த­வர்­க­ளது சக­வாழ்வு மிக நிண்­ட­கால வர­லாற்றைக் கொண்­ட­தாகும். உதா­ர­ண­மாக, மட்­டக்­க­ளப்புப் பகு­தியில் கி.பி.5ஆம் நூற்­றாண்­டுக்குப் பிற்­பட்ட காலப்­ப­கு­தியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அர­பி­களில் ஒரு சாரார் பூநொச்­சி­மு­னையில் குடி­யேறி வாழ்ந்­த­தா­கவும், பின்னர் அவர்கள் காத்­தான்­குடிப் பகு­திக்கும் வந்­த­தா­கவும் இவர்­க­ளி­ட­மி­ருந்தே மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்கள் அனை­வரும் தோற்றம் பெற்­ற­தா­கவும் திரு. P.R. சிற்­றம்­பலம் கூறு­கிறார்.

அதே­வேளை, யாழ்ப்­பாணப் பகு­தி­யி­லி­ருந்து துரத்­தப்­பட்ட ‘முக்­குவர்’ எனும் ஒரு சாரார் அங்­கி­ருந்து மட்­டக்­க­ளப்புப் பகு­திக்கு வந்த போது, அங்கு ஏற்­க­னவே வாழ்ந்து வந்த திமி­லர்கள் அவர்­க­ளது வரு­கையை விரும்­பா­ததால் அவர்­களைத் துரத்­தி­ய­டிப்­ப­தற்கு நாடினர். அப்­போது, முக்­கு­வர்கள் அரே­பி­ய­ரது உத­வியை வேண்டி நின்­றனர். அவ்­வாறு அந்த அர­பிகள் அந்த திமி­லர்­களை துரத்­தி­ய­டித்­த­தனால் அந்த அர­பிகள் மீது அவர்கள் கொண்­டி­ருந்த அன்பு, நெருக்கம் அதி­க­ரித்து அவர்­க­ளுக்கு மிகுந்த கௌரவம் கொடுத்­தனர். தற்­கா­லத்தில் குறு­மண்­வெளி இந்­துக்­கோவில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்­ப­டு­கி­றது. மேலும் ‘மட்­டக்­க­ளப்பு மான்­மியம்’ எனும் நூலில் உள்ள குல­வி­ருது பற்­றிய பாடலில், முஸ்­லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்­ப­டு­கி­றது. முக்­கு­வர்கள் சவக்­குலி ஏலம் விடும் போது ‘முக்­கு­வர்­களைக் காத்த பட்­டா­ணியர் போற்றி’ என்று அதனை முடிக்­கி­றார்கள். இவற்றை அவ­தா­னிக்­கையில் முக்­குவர் – முஸ்­லிம்கள் உறவு பற்றி தீர்­மா­னிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் தெரி­விக்­கிறார்.

மட்­டக்­க­ளப்­பிற்கு துலுக்­கர்­களும் பட்­டா­ணி­களும் (முஸ்­லிம்­களும்) வந்து போன விப­ரங்­களை தமி­ழர்­களின் பூர்­வீக சரித்­தி­ரத்தைக் கூறும் ‘மட்­டக்­க­ளப்பு மான்­மியம்’ எனும் நூல் தெளி­வாக்­கு­கி­றது. ‘காட்டான், பட்­டாணி, சுல்தான், சிக்­கந்தர், வேட­ரோடு வர்த்­தகம் செய்­வ­தற்­காகச் சில துலுக்கக் குடும்­பங்­க­ளுடன் மண்­முனைக் கடுக்­கப்­பா­ளையம் போட்டு வர்த்­தகம் செய்­தனர்.’ என அந்­நூலில் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

முக்­கு­வர்கள் தமக்கு உதவி செய்த முஸ்­லிம்­க­ளிடம் கைமா­றாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்­கு­மாறு கேட்­ட­போது, முஸ்­லிம்கள் முக்­கு­வர்­களின் பெண்­களை அடைந்து, இரத்த உறவைப் பலப்­ப­டுத்­தினர். முஸ்­லிம்கள் முக்­கு­வர்­க­ளுடன் இணைந்து போரிட்­ட­தனால் அவர்கள் முன்னர் குடி­யேறத் தடுக்­கப்­பட்­டி­ருந்த ஏறா­வூரில் குடி­யேறி வாழ அனு­ம­திக்­கப்­பட்­டனர். வாழைச்­சே­னையில் குடி­யே­றிய முஸ்­லிம்­களும் பெரும்­பாலும் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்தே வந்­தனர்.

 

கடந்த காலங்­களில் இடம்­பெற்ற தவ­றுகள் எதிர்­கா­லத்தில் இடம் பெறாது இருக்க திட­சங்­கற்பம் பூணு­வ­தோடு சக­வாழ்­வுக்­கான நீண்­ட­கால திட்­ட­மொன்று பற்றி இரு சமூ­கத்தைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்­களும் சிந்­தித்து செயற்­ப­டு­வது மிகப் பெரிய தேவை­யாகும்.

தற்­போ­தைய அம்­பாறை மாவட்­டத்தின் ஊர்­களைப் பொறுத்­த­வ­ரையில், அங்கும் அர­பி­களும் இந்­திய வியா­பா­ரி­களும் தமது வியா­பார நோக்­கங்­க­ளுக்­காக வந்து சென்­றுள்­ளனர். குறிப்­பாக இந்­திய முஸ்­லிம்கள் இந்­நாட்டின் உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்­வ­திலும் உள்­நாட்­டுக்கு அவ­சி­ய­மான பொருட்­களை இங்கு கொண்­டு­வந்து சேர்ப்­ப­திலும் அதி­க­மாகப் பங்­கெ­டுத்­தனர். வேடு­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே வர்த்­தக ரீதி­யான உற­வுகள் இருந்­து­வந்­தன. வியா­பா­ரத்­துக்­காக இலங்கை வந்த பல முஸ்­லிம்கள் இங்கு நிரந்­த­ர­மா­கவே தங்­கி­னார்கள்.

மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய இரு மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களை ‘மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்கள்’ என்றே அண்­மைக்­காலம் வரை ஏனைய பிர­தே­சத்­த­வர்கள் அழைத்து வந்­தி­ருப்­பதால் இவ்­விரு பிர­தே­சங்­களும் வர­லாற்று ரீதி­யாக ‘மட்­டக்­க­ளப்பு’ என்றே நோக்­கப்­ப­டு­கி­றது. கண்டிப் பகு­தி­யுடன் வர்த்­தகத் தொடர்பைப் பேணி வந்த முஸ்­லிம்கள், கண்டி மலைப் பிர­தே­சத்­தையும் கிழக்­கி­லி­ருந்த துறை­முகப் பிர­தே­சத்­தையும் இணைத்துக் கொடுத்­தார்கள்.

அங்கு நல்­லி­ணக்­கத்­தோடு வாழ்ந்த குடி­மக்கள் பற்­றிய தக­வல்­களைத் தரும் முக்­கிய ஆவ­ண­மாக கி.பி. 1397ற்குரிய ‘நாடு­கா­டுப்­பற்று பர­வணிக் கல்­வெட்டு’ அமை­கி­றது. அதில் உள்ள பின்­வரும் வாசகம் இதற்கு சான்­றாகும். ‘இவ்­வாறு தமிழ் போடி­களும் முத­லி­களும் காடு­வெட்டி, கள­னி­யாக்கி வாழ்ந்து வரும் நாட்­களில் சோன­கர்­க­ளான குடிகள் இங்கு வந்து அவர்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை செய்­து­வ­ர­லா­யினர்’ என்று கூறும் அக்­கல்­வெட்டுத் தகவல் பின்னர் அவ்­வாறு வந்த ஏழு (முஸ்லிம்) குடி­களை ஒன்றன் பின் ஒன்­றாக பட்­டி­யல்­ப­டுத்­தி­விட்டு, ‘இந்த ஏழு குடியும் வந்து, அவர்கள் சொற்கீழ் படிந்து நடந்து வரு­கின்ற காலத்தில் கண்­டிய மகா­ராசா மட்டு(மட்­டக்­க­ளப்பு) பார்க்­கவும் விகா­ரைகள் பார்க்­கவும் எழுந்­த­ருளி வரு­கின்ற காலத்தில் முத­லி­மாரும் கூட வந்­தார்கள். சோன­கரும் போய் விண்­ணப்பம் செய்­தார்கள்’ என்று தொடர்ந்து கூறு­கி­றது. இதி­லி­ருந்து முஸ்­லிம்கள் 14ஆம் நூற்­றாண்டு காலத்­திலே பிற இனங்­க­ளோடு கலந்து அவர்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்து வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது தெளி­வா­கி­றது.

2012 ஆம் ஆண்டின் மதிப்­பீட்டின் படி கிழக்கு மாகா­ணத்தில் பெளத்­தர்கள் 23%, தமி­ழர்கள் 34.7%, முஸ்­லிம்கள் 37% ஆக வாழு­கின்­றனர். அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கு அரு­க­ருகே தமிழ், சிங்­கள, முஸ்லிம் கிரா­மங்கள் தொன்­று­தொட்டு இருந்து வரு­கின்­றன. 1971ஆம் ஆண்டின் சனத்­தொகைக் கணிப்­பீட்டின் படி பெரும்­பான்­மை­யி­ன­ராக முஸ்­லிம்கள் (48.3%) இருக்க, சிங்­க­ளவர் (28.2%) தமிழர் (23.2%) ஆகியோர் அதற்­க­டுத்த நிலை­யிலும் வாழ்ந்து வரு­கி­றார்கள். 1981ஆம் ஆண்டின் கணிப்­பீட்டின் படி அக்­க­ரைப்­பற்றில் 12,439 தமி­ழர்­களும், 22,941 முஸ்­லிம்­களும், கல்­முனை பட்­டிண சபை எல்­லைக்குள் இந்­துக்கள் 4779 பேரும், முஸ்­லிம்கள் 15,940 பேரும் வாழ்ந்­தார்கள். இவ்­விரு இனங்­களும் ஒன்­றி­லி­ருந்து மற்­றை­யதைப் பிரிக்க முடி­யாத அள­வுக்கு வியா­பா­ரத்­திலும் உற­வு­க­ளிலும் ஒன்றில் மற்­றை­யது தங்­கி­யி­ருக்­கின்­றன.

எனவே, பேரா­சி­ரியர் ரமீஸ் அப்­துல்லாஹ், ‘(முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான) இவ்­வு­றவு வர­லாற்று ரீதி­யாக ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்­தது. கிழக்கு மாகாண வர­லாற்­றி­லி­ருந்து தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் பிரித்­துப்­பார்க்க முடி­யாது. கிழக்கு மாகா­ணத்தின் வடக்குப் பிர­தே­சங்­களில் தமி­ழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிர­த­சேங்­களில் முஸ்­லிம்கள் செறிந்து வாழு­கி­றார்கள். பொது­வாக ஒரு கிரா­மத்தில் முஸ்­லிம்கள், அதற்­க­டுத்த கிரா­மத்தில் தமி­ழர்கள் என கிழக்கு மாகாணம் முழு­வ­திலும் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கலந்தே வாழ்ந்­து­வ­ரு­கி­றார்கள். முஸ்லிம் ஆண்கள் ‘முக்­குவா’ சாதிப் பெண்­களை மணந்­ததால், தமிழர் முஸ்­லிம்­க­ளி­டையே இரத்த உற­வு­களும் உள்­ளன. இதனால், தமி­ழர்­களின் சாதி முறை மர­பு­க­ளுக்கு முஸ்­லிம்­களும் உரித்­தா­ளி­க­ளா­கின்­றனர்.

இங்­குள்ள முஸ்லிம் சமூ­கத்தில் சாதி முறை முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ள­தோடு அது மிகக் கடு­மை­யாகக் கடை­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. இது முஸ்­லிம்­ச­மய ரீதி­யா­ன­தல்ல. மேலும், இங்கு தாய்­வழி ஆட்சி முறை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. இதற்­கெல்லாம் தமிழ் பாரம்­ப­ரி­யமே கார­ண­மாகும். மண­ம­கனின் காலைக்­க­ழுவி, அவரை ஊர்­வ­ல­மாக அழைத்துச் சென்று, தாலி­கட்டி, ஆராத்தி எடுத்து, பால்­பழம் கொடுக்கும் சடங்­குகள் முஸ்லிம் திரு­ம­ணங்­க­ளிலும் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன.

கிழக்கில் ஒரு சமூகம் மற்­றைய சமூ­கத்தின் சமயம், சடங்­குகள் என்­ப­வற்றை மதித்து கௌர­வப்­ப­டுத்­து­கின்­றது. கல்­முனை ஷாஹுல் ஹமீது வலி­யுள்­ளாஹ்வின் பள்ளி விழா, பாண்­டி­ருப்பு திரௌ­பதை அம்மான் கோயில் தீமி­திப்பு விழா போன்­ற­வற்றில் எவ்­வித வேறு­பா­டு­மின்றி இரு சமூ­கத்­த­வர்­களும் கலந்து கொள்­கின்­றனர். காரைத்­தீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்­டப்­பள்­ள­யத்தில் அவு­லியா தர்ஹா போன்ற முஸ்லிம் சம­யத்­த­லங்கள் உள்­ளன. இப்­ப­கு­தியில் வாழும் தமி­ழர்கள் இப்­பு­னிதத் தலங்­க­ளுக்கு மதிப்பும் மரி­யா­தை­யு­ம­ளித்து நேர்ச்சை முத­லான கிரி­யை­க­ளுக்­காக இத்­த­லங்­களைத் தரி­சிக்­கின்­றனர். இவ்­விரு சமூ­கங்­களும் தமது நாளாந்த வாழ்க்­கைக்கு ஒன்­றை­யொன்று நம்­பியே இருக்­கின்­றன. விவ­சாயம், மீன்­பிடி, தச்­சுத்­தொழில் கொத்­தனார்த் தொழில் போன்­ற­வற்றில் இவ்­விரு சமூ­கத்­தி­னரும் சேர்ந்தே தொழில் புரி­கின்­றனர்.’ என அவர் தெரி­விக்­கிறார்.

திரு­வாளர் பால­சுந்­தரம் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார்:- ‘இங்கு (மட்­டக்­களப்பில்) வாழும் தமிழ் இனத்­த­வ­ருடன் சகோ­த­ரத்­துவ மனப்­பான்மை பூண்டு, நட்பு­ற­வுடன் வாழ்ந்து வரும் முஸ்­லிம்­களின் வாழ்க்கை முறை­களும் பழக்­க­வ­ழக்­கங்­களும் சம்­பி­ர­தா­யங்­களும் தமிழ் மக்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­ன­வாகக் காணப்­ப­டு­கின்­றன. கிழக்கு மாகா­ணத்தில் பெரும்­பான்­மை­யோ­ரான இந்­துக்­களும் இஸ்­லா­மி­யரும் மத அடிப்­ப­டையில் வேறு­பட்­டி­ருப்­பினும் வாழ்க்கை முறைகள், பண்­பாட்டு அம்­சங்­களில் ஒற்­று­மைகள் உள்­ளன.’ முஸ்­லிம்கள் நான்கு திரு­மணம் செய்ய அனு­மதி இருந்தும் செய்­யா­தி­ருப்­ப­தற்கு தமிழ் மக்­க­ளுடன் அவர்கள் முன்­னைய காலங்­களில் ஏதோ வழி­களில் ஒன்­று­பட்­டி­ருந்­தி­ருக்­கி­றார்கள் என்று கூறு­வதில் தவ­றில்லை என ஆய்­வாளர் சித்தீக் கூறு­கிறார்.

முஸ்லிம் – இந்து சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்து வாழு­வ­தனால் சாத­க­மான தாக்­கங்­களைப் போலவே பாத­க­மான பாதிப்­புக்­களும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை யாழ்ப்­பாணப் பல்­கலைக் கழக விரி­வு­ரை­யா­ள­ராக இருந்த மௌலவி அப்துர் ரஸ்ஸாக் குறிப்­பி­டு­கிறார். முஸ்லிம் சமூ­கத்தில் இஸ்­லாத்தின் தூய நம்­பிக்கைக் கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணான, இஸ்­லா­மிய கிரி­யை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கூடு எடுப்­பது, திரு­மண சம்­பி­ர­தா­யங்­களில் முத­லிடம் பெறும் ‘சீதனம்’ வாங்­கு­வது போன்­றன முஸ்லிம் சமு­தா­யத்தில் நுழைய இந்து மத, கலா­சார செல்­வாக்கு காரணம் என்­பது அவ­ரது கருத்­தாகும்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும், இது போன்ற ஆய்­வுகள் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும், குறிப்­பாக இந்­துக்­களும் எவ்­வ­ளவு நெருக்­க­மாக வாழ்ந்­துள்­ளனர் என்­பதை பிர­தி­ப­லிக்­கின்­றன.

அறி­வியல் துறை சக­வாழ்வு

கல்­வித்­து­றையைப் பொறுத்­த­வ­ரையில் பரஸ்­பரம் ஒரு சமூகம் மற்­றொரு சமூ­கத்தில் தங்­கி­யி­ருந்தை வர­லாறு சான்று பகர்­கி­றது.இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் உள்ள முஸ்லிம் பாட­சா­லை­களில் ஆரம்ப கால அதி­பர்­க­ளா­கவும் போத­னா­சி­ரி­யர்­க­ளா­கவும் தமிழ் வாத்­தி­யார்கள் இருந்து மகத்­தான சேவை செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை முஸ்லிம் சமூகம் நன்­றி­யு­ணர்­வோடு நினைவு கூரு­கி­றது.கல்­விமான் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜமீல் தனது தந்தை ஷாஹுல் ஹமீதின் ஆரம்ப கல்­வியைப் பற்றிக் கூறும் போது,சாய்ந்­த­ம­ருதில் ஆண்­க­ளுக்கு வேறா­கவும் பெண்­க­ளுக்கு வேறா­கவும் இரு அர­சினர் பாட­சா­லைகள் அக்­கா­லத்தில் இருந்­தா­கவும் அதில் ஒன்றில் தனது தந்தை கற்­ற­தா­கவும் அவ்­விரு பாட­சா­லை­களில் கடமை புரிந்த ‘ஆசி­யர்கள் அனை­வரும் தமி­ழர்கள்’ என்றும் குறிப்­பிடும் அவர், தான் 1945ஆம் ஆண்டு காரை­தீவு இரா­ம­கி­ருஷ்ன மிஷன் ஆண்கள் வித்­தி­யா­லத்தில் இருந்து தனது பாலர் கல்­வியை ஆரம்­பித்­ததாக் கூறு­கிறார்.கிழக்கு மாகாண இரா­ம­கி­ருஷ்ண மிஷன் பாட­சா­லை­க­ளது முகா­மை­யா­ள­ராக இருந்த சுவாமி விபு­லா­னந்தர் தனது மூத்த வாப்பா முத்­த­லிபு வைத்­தி­யரின் நெருங்­கிய நண்­ப­ரென்றும் தனது சகோ­த­ரி­களும் சாச்­சி­மார்­களும் இராம கிருஷ்ண மிஷனின் பெண்கள் பாட­சா­லை­யான சாரதா வித்­தி­யா­ல­யத்தில் கல்­வி­கற்­ற­தா­கவும் சாய்ந்­த­ம­ருது 6ஆம் குறிச்­சியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவ மாண­வியர் அங்கு கற்றுக் கொண்­டி­ருந்­த­தா­கவும் கூறு­கிறார்.

பிற்­கா­லத்தில் சமூகத் தளத்தில் ஜொலித்த கா.சிவத்­தம்பி, ஆர்.சிவ­கு­ரு­நாதன், எஸ்.ராஜ­கோபால், கே.அரு­ணாச்­சலம், ராஜ புவ­னேஸ்­வரன் போன்ற பல தமி­ழர்கள் முன்­னணி முஸ்லிம் பாட­சா­லை­யான கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியில் முஸ்லிம் மாண­வர்­க­ளுடன் கற்­ற­வர்கள் என்­பது குறிப்­பித்­தக்க விட­ய­மாகும். அங்கு மாண­வர்கள், ஆசி­ரி­யர்கள், அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் என்ற பல நிலை­களில் தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் இருந்­தி­ருக்­கி­றார்கள். ரீ.பீ.ஜாயா,ஏ.எம்.ஏ.அஸீஸ் போன்ற கல்­வி­மான்கள் அதி­பர்­க­ளாக இருந்த அந்த பொற்­கா­லங்­களில் முஸ்லிம், சிங்­கள, தமிழ் சக­வாழ்வு ஸாஹி­ராவில் உச்ச நிலையில் இருந்­தது.

பல்­கலைக் கழக மட்­டத்­திலும் பேரா­சி­யர்­க­ளான கைலா­ச­பதி, சிவத்­தம்பி போன்­ற­வர்கள் கலா­நிதி சுக்ரி, பேரா­சி­ரியர் நுஃமான், எஸ்,எச்.எம்.ஜெமீல் போன்ற முஸ்லிம் சமூ­கத்தின் பல முக்­கிய புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு விரி­வு­ரை­யா­ளர்­க­ளா­கவும் ஊக்­கு­விப்­பா­ளர்­க­ளா­கவும் இருந்து அவர்­க­ளது ஆளுமை விருத்­தியில் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றார்கள் என்­பது குறிப்­பிடத்­தக்க அம்­ச­மாகும். இது போன்ற பல உதா­ர­ணங்கள் உள்­ளன.

குறிப்­பாக தற்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தை நாம் எடுத்து நோக்­கினால் அங்கு வர்த்­தகம், கல்வி, சமூக உற­வுகள், சுகா­தாரம் போன்ற இன்­னோ­ரன்ன துறை­களில் முஸ்­லிம்கள் தமி­ழர்­க­ளிலும் தமி­ழர்கள் முஸ்­லிம்­க­ளிலும் தங்கி வாழு­வது யதார்த்­த­மான உண்­மை­யாகும். முஸ்­லிம்­க­ளது கடை­களில் சாமான்­களை வாங்­க­வும்­முஸ்லிம் பிர­தே­சங்­களில் கூலி வேலை செய்­யவும் தமி­ழர்கள் வரு­கி­றார்கள்.மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீல் அது பற்றி கூறும் போது, “முஸ்­லிம்­க­ளது பணம் தமி­ழர்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளது சேவை முஸ்­லிம்­க­ளுக்கும் தேவைப்­பட்­டது. தொழில் ரீதி­யாக பார்க்­கையில் இரு சமூ­கங்­களும் பிரிந்து வாழ முடி­யாது” என்­கிறார்.

தமிழ் அதி­கா­ரி­க­ளுக்குக் கீழ் முஸ்­லிம்கள் பணி­பு­ரியும் சந்­தர்ப்­பங்கள் அதி­க­மாக உள்­ளன. உதா­ர­ண­மாக, ஒரே வைத்­தி­ய­சா­லையில் டாக்­டர்­க­ளாக, தாதி­யர்­க­ளாக, ஊழி­யர்­க­ளாக முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் சரி­ச­மாக இருந்து வேலை செய்கிறார்கள். பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அது தான் நிலை. இரு சமூகங்களுக்கு இடையில் பகைமை நிலவினால் இரு சாராரும் எப்படி வாழமுடியும்?

சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது. அண்மைக்காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த சௌஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.

எனவே, முஸ்லிம்- தமிழ் சமூகங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் பொதுவாக இலங்கையின் ஏனைய பாகங்களிலும் ஒற்றுமையாகவும், நலன்களைப் பகிர்ந்து கொண்டும், ஒருவர் மற்றொருவரில் தங்கியும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அந்த நிலை ஓரளவு நீடிக்கிறது. ஆனால் சில சக்திகளால் இத்தகைய மகத்தான சகவாழ்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவது மிகுந்த கவலை தருகிறது.

குறிப்பாக, அண்மையில் திருமலை சண்முகா வித்தியாலத்தில் இடம் பெற்ற ஹிஜாப் விவகாரத்தை குறிப்பிட முடியும். நீதித்துறையும் சமூகங்களும் விரும்பிய போதும் வேண்டாத சக்திகள் நமது சமூக உறவினை குழப்ப முனைந்து நின்றன. அது போன்று ஏட்டிக்கு போட்டியாக வெளி­வரும் அர­சி­யல்­வா­தி­களின் அறிக்­கை­களும் விவா­தங்­களும் சாதா­ரண மக்கள் மத்­தி­யிலே குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றன. அதே­நேரம், அது தொடர்­பாக முக­நூலில் வெளி­வ­ரு­கின்ற குறிப்­புக்­களும் வீணான அச்­சத்­தையும் நம்­பிக்­கை­யின்­மை­யையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன. மேலும், இதற்கு முன்னர் கல்­மு­னையில் இடம் பெற்ற பிர­தேச செய­லக விவ­கா­ரத்­திலும் தேவை­யற்ற விதத்தில் மூன்றாம் சக்­திகள் மூக்கை நுழைக்கச் செய்­வ­தற்கு இட­ம­ளித்­தி­ருக்­கி­றது. இவை சீர்­கு­லைந்து போன இன­நல்­லு­றவு சீராக்கம் பெற்று வரு­கின்ற இச்­சூ­ழலில் வேதனை தரு­கின்ற விட­யங்­க­ளா­கவே அமை­கின்­றன. என­வேதான், இந்தக் கால­கட்­டத்தில் நாம் வலிந்து சில முடி­வு­க­ளுக்கு வந்­தா­கவே வேண்டும் அப்­போது தான் நீடித்த நிலை­யான நமது உறவு பாரம்­ப­ரி­யத்தை தொடர்­வ­தற்­கான வழி வகை­யினை பெற முடியும்.

எனவே, கடந்த காலங்­களில் இடம்­பெற்ற தவ­றுகள் எதிர்­கா­லத்தில் இடம் பெறாது இருக்க திட­சங்­கற்பம் பூணு­வ­தோடு சக­வாழ்­வுக்­கான நீண்­ட­கால திட்­ட­மொன்று பற்றி இரு சமூ­கத்தைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்­களும் சிந்­தித்து செயற்­ப­டு­வது மிகப் பெரிய தேவை­யாகும். பரஸ்­பரம் விட்டுக் கொடுப்­பது, புரிந்­து­ணர்வை வளர்ப்­பது, ஒரு சமூ­கத்தின் நலன்­களை வளர்க்க மற்ற சமூகம் ஒத்­து­ழைப்­பது போன்­ற­வற்­றுக்­காக பாரிய முயற்­சிகள் செய்­யப்­பட வேண்டும். சாத­க­மான சிந்­த­னைகள் (Positive Thinking), தியா­கத்­துடன் கூடிய, இதய சுத்தியுடனான முன்னெடுப்புக்கள் அவசியப்படுகின்றன. இல்லாதபோது பயங்கரமான இருள் சூழ்ந்த யுகத்தை இரு சமூகங்களும் சந்திக்க நேரிடும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.