இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெறப் போவதில்லை

உயர் நீதிமன்றுக்கு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்; ஜூலை 11 இல் மேலதிக பரிசீலனைகள்

0 555

(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரின் கைதி­னையும் தடுப்புக் காவ­லி­னையும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/21 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனுவை மீளப்பெறும் நோக்கம் இல்லை என உயர் நீதி­மன்­றுக்கு நேற்­று­முன்­தினம் அறி­விக்­கப்­பட்­டது.

அஹ்னாப் ஜஸீ­முக்­காக உயர் நீதி­மன்றில் ஆஜ­ராகும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கலா­நிதி கனக ஈஸ்­வரன் இதனை அறி­வித்தார். நேற்­று­முன்­தினம் (8) இந்த மனு பரி­சீ­ல­னைக்கு வந்­தது. உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யந்த ஜய­வர்­தன தலை­மை­யி­லான குமு­தினி விக்­ர­ம­சிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் இம்­மனு பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

இதன்­போது, மனு­தா­ர­ரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் மன்றில் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர, லக்ஷ்­மனன் ஜய­குமார் உள்­ளிட்­டோ­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கலா­நிதி கனக ஈஸ்­வரன் ஆஜ­ரானார்.

இதன்­போது மனுவின் பிர­தி­வா­திகள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி, அஹ்னாப் ஜஸீ­முக்கு புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அங்கு முன் வைக்­கப்­பட்­டுள்ள பிணை கோரிக்­கைக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்­பு­களை முன் வைக்­காத நிலையில், அவ­ருக்கு பிணை­ய­ளிக்­கப்பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது மனு­தாரர் தரப்பின் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வ­ரனை நோக்கி நீதி­யர­சர்கள் குழாமின் தலைமை நீதி­பதி பிரி­யந்த ஜய­வர்­தன, மனு­தா­ர­ருக்கு மேல் நீதி­மன்றில் பிணை கிடைத்­துள்ள நிலையில் இம்­ம­னுவை வாபஸ் பெறும் உத்­தேசம் உள்­ளதா என வின­வினார்.

இதற்கு பதி­ல­ளித்த அஹ்னாப் ஜஸீ­முக்­காக மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன், கடந்த 2021 டிசம்பர் 8 ஆம் திகதி இம்­மனு பரி­சீ­லிக்­கப்பட்ட போது தமது நிலைப்­பாட்டை மன்­றுக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும், வழக்கை மீளப் பெறும் எண்னம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இந் நிலையில் இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் மனுவை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி பரிசீலிக்க முடிவு செய்து அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.