பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டேன்

0 600

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்­தி­ருந்­த­போது உள ரீதி­யா­கவும் உடல் ரீதி­யா­கவும் கடு­மை­யான முறையில் துன்­பு­றுத்­தப்­பட்டேன் என கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­ட­ரின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேர­வையின் இணை அமர்­வொன்றில் இணையத்­தளம் ஊடாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அஹ்னாப் ஜெஸீம் இவ்வாறு தெரிவித்தார். அஹ்னாப் ஜெஸீம்  மேலும் இங்கு உரையாற்றுகையில், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை தனது 49 ஆவது கூட்­டத்­தொ­டரின் நிகழ்வில் எனக்கு உரை­யாற்ற சந்­தர்ப்பம் வழங்­கி­ய­மைக்கு நான் எனது நன்­றி­களை சமர்ப்­பிக்­கின்றேன்.

நான் இலங்­கையின் கொடிய பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தினால் (PTA) அதிகம் பாதிப்­புக்­குள்­ளா­னவன். வஞ்­சிக்­கப்­பட்­டவன். இச்­சட்டம் நாட்டின் மனித உரி­மை­களை பலி­யெ­டுக்­கி­றது. நான் இச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டேன். எனது சுதந்­திரம் ஜன­நா­யக உரிமை 19 மாதங்­க­ளாக பிடுங்­கி­யெ­டுக்­கப்­பட்­டது. இத்­த­னைக்கும் தமிழ் கவி­தைகள் அடங்­கிய ‘நவ­ரசம்’ என்ற பெய­ரி­லான ஒரு நூலை எழுதி வெளி­யிட்­ட­மையே இதற்கு காரணம். நான் எனது மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வா­தத்­தினைப் போதித்­தா­கவே என்­மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு (TID) என்னை முதலில் கைது செய்­தது. ஆரம்­பத்தில் என்னை ஒரு வருட காலம் தடுத்து வைத்­தி­ருந்­தார்கள். அதன் பின்பு என்னை மேலும் 7 மாதங்கள் சிறையில் வைத்­தார்கள். அங்கே நான் உடல் ரீதி­யா­கவும் உள­வியல் ரீதி­யா­கவும் கடு­மை­யான முறையில் துன்­பு­றுத்­தப்­பட்டேன்.

நான் சிறையில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டேன். தரக்­கு­றை­வாக நடத்­தப்­பட்டேன். மிரு­கத்­த­ன­மான முறையில் துன்­பு­றுத்­தப்­பட்டேன். அதி­கா­ரிகள் என்னை குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளச் செய்­வ­தற்­காக பல­வந்­தப்­ப­டுத்­தி­னார்கள். குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் வகையில் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள முயற்­சித்­தார்கள்.
நான் நிர­ப­ராதி, குற்­ற­மற்­றவன், எனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுகள் போலி­யா­னவை என திரும்­பத்­தி­ரும்ப வாதிட்டேன்.

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­திட்­டத்தில் நான் ஓர் முக்­கி­ய­மா­னவன். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்தே இந்­நி­லைமை ஏற்­பட்­டது.
இந்த தாக்­கு­தலைக் கண்­டித்து நான் கவி­தை­யொன்­றினை வெளி­யிட்டேன். தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டு அடுத்த தினமே கவி­தையை வெளி­யிட்டேன்.

இஸ்­லா­மிய இராச்­சி­யமோ அல்­லது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ உண்­மை­யான இஸ்­லாத்தின் படி இவ்­வாறு தாக்­குதல் மேற்­கொள்ள முடி­யாது என்று குறிப்­பிட்­டி­ருந்தேன்.
எனக்குத் தெரியும், நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் குறிப்­பாக இளை­ஞர்கள், மாண­வர்கள் இந்த பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ்­த­டுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் இச்­சட்­டத்தின் கீழ் பொய்­யான அல்­லது சிறிய குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் மாதக்­க­ணக்கில், வரு­டக்­க­ணக்கில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்கை அர­சாங்கம் இச்­சட்­டத்தை நாட்டின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கத்­துக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­து­கி­றது. யுத்த வெற்­றிக்குப் பின்பு இலங்கை மக்­களை இன ரீதியில் பிள­வு­ப­டுத்த முயல்­கி­றது.

இலங்கை அர­சாங்கம் 1988–1990 சிங்­கள இளை­ஞர்­களின் போராட்­டத்தின் போது இச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­தி­யது. இதே­போன்று 30 வருட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான போரின்­போது இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்­தி­யது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்­டு­மென்றே நான் கூறு­கிறேன். இச்­சட்டம் மாற்­றீடு செய்­யப்­ப­டக்­கூ­டாது.
பயங்­க­ர­வாதம் அல்­லது அடிப்­ப­டை­வாதம் ஜன­நா­யக உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வதன் மூலமும் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார உரி­மைகள் வழங்­கப்­ப­டு­வதன் மூலமே இல்­லாமற் செய்­ய­மு­டியும்.

அனைத்து அர­சியல் கைதி­களும் நிபந்­த­னை­க­ளின்றி உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என நான் கோரிக்கை விடுக்­கிறேன். அவர்­க­ளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.
எனது நாட்டின் அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் எங்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அணித்திரளுமாறு கோருகிறேன்.

அனைத்து நிறுவனங்களும் மற்றும் தனியார்களும் இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு மன்றாடிக்கேட்டுக் கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.