கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்த மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி – 1

0 814

லத்தீப் பாரூக்

இந்தக் கட்­டுரை 2013ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப் போக்கு உச்­சத்தில் இருந்த கால­கட்­டதில் ஆங்­கி­லத்தில் எழு­தப்­பட்­டது. இன்­றைய தேவை கருதி அதன் தமிழ் மொழி­பெ­யர்ப்பு மீள் பிர­சுரம் செய்­யப்­ப­டு­கின்­றது.

குதுப் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜெய்­லானி அல்­லது காயிதே ஆஸம் என அழைக்­கப்­ப­டு­பவர் இஸ்­லா­மிய வர­லாற்றில் அறி­யப்­பட்ட மிகப் பெரிய மகானும், கல்­வி­மானும், ஞானியும் ஆவார். மத்­திய கிழக்கு, பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ், மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடுகள் உட்­பட உலகின் பல நாடு­களில் வாழும் முஸ்­லிம்­களால் மிகவும் மதிக்­கப்­படும் போற்­றப்­படும் ஒரு­வ­ராவார்.

அவ­ரது மிகத் தீவி­ர­மான பக்தி, ஆழ­மான அறிவு, ஏழ்­மை­யான வாழ்வு முறை, அவர் நிகழ்த்­திய அற்­பு­தங்கள் மற்றும் அவ­ரிடம் காணப்­பட்ட உன்­ன­த­மான உயர் பண்­புகள் கார­ண­மாக மக்கள் அவரை ஒரு மகா­னா­கவும் புனி­த­ரா­கவும் போற்­றினர். இன்னும் பலர் அவரை நிறைந்த பக்தி மிக்கப் புனிதர் என்றும் போற்­றினர்.

1976இல் நான் முதற்­த­ட­வை­யாக பக்­தா­துக்கு விஜயம் செய்யும் போது அவரைப் பற்றி பல விட­யங்­களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்­டி­யது. நான் பக்­தாத்தில் முத­லா­வ­தாக விஜயம் செய்த இடம் அவ­ரது நினை­வா­லயம் அமைந்­துள்ள பள்­ளி­வா­ச­லாகும்.
ஈரானின் தென் பகு­தியில் கஸ்­பியன் கட­லோரப் பகு­தியில் அமைந்­துள்ள நைப் என்ற கிரா­மத்தில் 1077 மார்ச் 18இல் பெரும் பக்­தி­ம­ய­மான ஒரு குடும்­பத்தில் பிறந்­தவர் தான் குதுப் முஹி­யத்தீன். அவ­ரது சிறு வய­தி­லேயே தந்தை இறந்து விட்டார். இள வயதில் தனது தாயாரின் அனு­ம­தி­யோடு அறிவைத் தேடி அவர் பக்தாத் நோக்கிப் பய­ண­மானார். அந்தக் காலப்­ப­கு­தியில் உலகில் அறிவின் கேந்­திர ஸ்தான­மாகத் திகழ்ந்த இடம் பக்தாத் நகரம் மட்­டுமே. 1166ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தனது 91ஆவது வயதில் ஒரு மாலை வேளையில் அவர் மர­ணத்தைத் தழு­வினார். பக்­தாத்தின் றெஸாபா பகு­தியில் உள்ள (டைக்ரீஸ் நதியின் கிழக்குக் கரை) அவ­ரது கல்விக் கூட­மான பாபுல் ஷேக் மத்­ர­ஸாவில் அவ­ரது ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

அவ­ரது வாழ்­நாளில் சுமார் 13 ஆண்­டு­க­ளாக அவர் மாய­மாக மறைந்து இருந்­த­தாக இலட்சக் கணக்­கான மக்­களால் நம்­பப்­ப­டு­கின்­றது. இந்தக் காலப்­ப­கு­தியில் தான் அவர் கூர­கல அல்­லது ஜெய்­லா­னியில் (இலங்­கையின் பலாங்­கொ­டையில் இருந்து 15 மைல்­க­ளுக்கு அப்பால்) தியா­னத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இது கடல் மட்­டத்தில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான அடிகள் உய­ரத்தில் உள்ள ஒரு மலைப்­பாங்­கான அடர்த்­தி­யான காட்டுப் பிர­தே­ச­மாகும்.

1960களில் அந்தப் பகு­திக்கு விஜயம் செய்த முக்­கிய பத்­தி­ரி­கை­யா­ள­ரான எம்.எம்.தௌபீக் எழு­தி­யுள்ள ஒரு கட்­டு­ரையில் குதுப் முஹி­யத்தீன் அவர்கள் பாவா ஆதம் (அலை) மலைக்கு (இன்­றைய சிவ­னொ­ளி­பாத மலை) விஜயம் செய்த பின் தியானம் செய்­வ­தற்­காக இந்தப் பகு­தியில் தஞ்சம் புகுந்­துள்ளார். மரிக்கார் அவர்­களின் மூத்த புதல்­வரும் பலாங்­கொடை இஸ்­லா­மியக் கழ­கத்தின் தலை­வ­ரு­மாக இருந்த எம்.எல்.எம்.அபு­சாலி இது­பற்றிக் குறிப்­பி­டு­கையில் மலைப்­பாங்­கான இந்தப் பகு­தியில் ஒரு குகை உள்­ளது. இதன் நிலக்கீழ் தளம் 400 யார் நீள­மா­னது. அதன் பிறகு ஒரு திடீர் வீழ்ச்சி காணப்­ப­டு­கின்­றது. அதைப் பற்றிப் பேசு­வது கூட கடி­ன­மா­னது. இந்தக் குகை பற்றி பல கதைகள் நில­வு­கின்­றன. அங்கே வெள­வால்கள் தாரா­ள­மாக உள்­ளன. பாம்­பு­களும் இருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது. இந்தக் குகைக்குள் இருந்து யாரும் இன்னும் வெளியே வந்து இதன் உண்மை நிலையைக் கூறி­யது இல்லை. ஆனால் இந்த வழி­யா­னது கற்­பாறையின் அடியில் முடி­வ­டை­கின்­றது என்­பதில் சந்­தேகம் இல்லை. இது பின்­தென்ன மலைத்­தொ­ட­ருக்கு ஆயி­ரக்­க­ணக்­கான அடிகள் கீழே உள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

தப்தர் ஜெய்­லானி மலைக்­குகை பள்­ளி­வா­சலின் தோற்றம்
அபு­சாலி 1977 முதல் 1994 வரை பலாங்­கொடை ஆச­னத்தை பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் செய்­தவர். இந்தப் பிர­தே­சத்தின் அர­சியல் செல்­வாக்கு மிக்க றத்­வத்தை குடும்­பத்தைச் சேர்ந்த மல்­லிகா றத்­வத்­தையை தோல்­வி­யுறச் செய்து பெரும்­பா­லான சிங்­கள மக்­களின் ஆத­ர­வோடு தெரிவு செய்­யப்­பட்­ட­வரே அபு­சாலி. தப்தர் ஜெய்­லானி மலைக்­குகை பள்­ளி­வா­சலின் வர­லாறு பற்றி அவர் கூறு­கையில் மகான் குதுப் முஹி­யத்தீன் கூர­க­லையில் இந்தப் பகு­தியில் தியானம் செய்­துள்ளார். இந்தப் பகு­திக்­கான அவரின் விஜயம், அது ஒரு புனிதப் பிர­தே­ச­மாக இந்தப் பகு­தியில் ஏற்­ப­டுத்­திய தாக்கம் என்­பன பற்றி பல கதைகள் உள்­ளன. கி.மு 300ஆம் ஆண்­ட­ளவில் அர­பிகள் மத்­தியில் இலங்கை நன்கு அறி­யப்­பட்ட ஒரு நாடாக இருந்­துள்­ளது என்­பது உண்­மை­யெனில் பாவா ஆதம் மலையும் மத்­திய கிழக்கில் இருந்து பய­ணங்­களை மேற்­கொள்ளும் அர­பிகள் மத்­தியில் அந்தக் காலத்­தி­லேயே அறி­யப்­பட்­டி­ருந்­தது என்­பதும் உண்­மை­யே­யாகும். அன்­றி­லி­ருந்தே அர­பி­களின் பல ஆக்­கங்­களில் இது பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று மேலும் கூறி உள்ளார்.

முஸ்­லிம்­களின் நம்­பிக்­கைப்­படி உல­கிற்கு முத­லா­வ­தாக அனுப்­பப்­பட்ட மனிதன் ஆதம் ஆவார். அவர் தான் முத­லா­வது முஸ்லிம் ஆவார். இறை­வனின் முத­லா­வது இறை தூதரும் அவரே. சஹீஹுல் புஹாரி (ஹதீஸ் கிரந்தம்) யில் உள்ள சில ஹதீஸ்­களின் படியும் (முஹம்­மது நபியின் பாரம்­ப­ரியம் மற்றும் கூற்­றுகள்) குர்­ஆ­னுக்­கு­ரிய விளக்க உரை­யான தப்ஸீர் பைஸவி மற்றும் தப்ஸீர் கஸின் என்­ப­ன­வற்றின் படியும் ஆதம் செரண்டிப் எனும் பூமியில் “நூத்” எனும் மலையில் இறக்­கப்­பட்டார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செரண்டிப் என்ற பூமிதான் இலங்கை என்­பது இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

ஆதம் மலையின் புனி­தத்­துவம் பற்றி பல குறிப்­புக்கள் உள்­ளன. சேர்.டயிள்யூ ஒஸ்லி என்­பவர் தனது பிர­யாண அனு­ப­வங்கள் பற்றி எழுதி உள்ள ‘பெர்ஹான் கெட்­டேயா’ என்ற ஒரு கையெ­ழுத்துக் குறிப்பில் ஆதம் சொர்க்­கத்தில் இருந்து பூமிக்கு இறக்­கப்­பட்ட கொண்­டாட்­டத்­துக்­கு­ரிய மலை தான் செரண்டிப் எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது என்று தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றேனும் ஆதம் மலைக்கு மொரோக்­கோவில் இருந்து விஜயம் செய்த மிகப் பிர­ப­ல­மான அரபு பய­ணி­யாக இப்னு பதூதா காணப்­ப­டு­கின்றார். இவர் 1344இல் இங்கு விஜயம் செய்­துள்ளார். தன்­னு­டைய ஆக்­கத்தில் ஆதம் மலைக்கு செல்லும் வழியில் பிர­ப­ல­மான பல முஸ்லிம் வழி­பாட்டுத் தளங்­களைத் தான் கண்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார். மலை உச்­சிக்கு செல்லும் வழி­களில் அந்த நாட்­களில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் வழிப்­போக்­கர்­க­ளுக்கும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தங்­கு­மி­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இங்கு ஒரு முஸ்லிம் மகான் வாழ்ந்­த­மைக்­கான தட­யங்கள் உள்­ளன என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
வேன்­செண்டன் என்­பவர் தனது சோனகர் என்ற நூலில் இந்தப் பகு­திக்கு காதர் அல்­லது கித்ர் என்ற பெய­ருள்ள ஒரு முஸ்லிம் வருகை தந்­துள்ளார். அவ­ரது வரு­கையால் தான் இந்த இடம் புனி­த­ம­டைந்­துள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

முதலில் போர்த்­து­­க்கே­யர்­களும் பின்னர் டச்­சுக் ­கா­ரர்­களும்
இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்த பின் தப்தர்
ஜெய்­லானி பெரும்­பாலும் கைவி­டப்­பட்ட ஒரு பிர­தே­ச­மா­னது. முஸ்லிம் வர்த்­த­கர்கள் ஆதம் மலைக்கு செல்லப் பயன்­ப­டுத்­திய இரத்­தி­ன­புரி கூர­கல பாதையைக் கைவிட்­டமை இதற்கு முக்­கிய காரணம். அந்த வகையில் 1850 வரை தப்தர் ஜெய்­லானி என்ற பெயரில் மட்­டுமே இந்தப் பகுதி அறி­யப்­பட்டு வந்­தது.

1344இல் ஆதம் மலைக்­கான இப்னு பதூ­தாவின் பயணம் பற்­றிய ஒரு தேச வரை­ப­டத்தில் கூர­கல ஊடான வழி காட்­டப்­பட்­டுள்­ளது. இதை டெனிஸ் பெர்­ணான்டோ என்­பவர் மீள் பதிப்பு செய்­துள்­ள­தாக அபு­சாலி எழு­தி­யுள்ள நூலிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அந்தக் காலத்தில் மிகக் கடு­மை­யான பய­ணங்­களை மேற்­கொண்டு அர­பி­களும் ஏனைய முஸ்­லிம்­களும் இந்தப் பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்ய இவை தான் கார­ணங்­க­ளாக உள்­ளன. இந்த ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் தான் கூர­கல ஊடான வழியைப் பின்­பற்றி குதுப் முஹி­யத்­தீனும் ஆதம் மலைக்கு சென்­றுள்ளார் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

தமிழ்­நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர ஆய்­வு­களின் பின் ஐக்­கிய இராச்­சி­யத்தின் ஹாவார்ட் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளரும் கல்­வி­மா­னு­மா­கிய சுசான் ஸ்கொம்பெர்க் என்­பவர் அபு­சா­லி­யி­யிடம் தெரி­வித்­துள்ள தக­வலில் இலங்­கையில் ஆதம் மலை மற்றும் தப்தர் ஜெய்­லானி ஆகிய இடங்­க­ளுக்கு விஜயம் செய்த பின் மகான் குதுப் முஹி­யத்தீன் தென் இந்­தி­யாவின் கீழ்க்­க­ரையில் 40 தினங்­களை தியா­னத்தில் கழித்­துள்ளார்.
கூர­கல தப்தர் ஜெய்­லானி மலைக் குகைக்கு அவர் மேற்­கொண்ட வர­லாற்று ரீதி­யான விஜயம் பெரும்­பாலும் இவ­ரது இந்­திய உப கண்­டத்­துக்­கான விஜ­யத்­தோடு தொடர்­பு­பட்­டுள்­ளது. ஆதம் மலைக்கு அவர் விஜயம் செய்த பின் கூர­க­லயின் முனையில் அவர் தியானம் இருக்கும் நோக்கில் எவ்­வாறு தஞ்சம் அடைந்தார் என்­பது பற்றி பல்­வேறு வகை­யான கதைகள் பல நூற்­றாண்­டு­க­ளாக இருந்து வந்­துள்­ளன.

பலாங்­கொடை பீட பூமியின் முனையில் காணப்­படும் இரண்டு கற்­பாறை வடி­வங்கள் தான் கூர­க­லையும், ஹிட்­டு­வங்­க­லையும் ஆகும், இவை தான் பொது­வாக தப்தர் ஜெய்­லானி என அழைக்­கப்­ப­டு­கின்­றன. இரத்­தி­ன­பு­ரிக்கும் ஆதம் மலைக்கும் செல்லும் பண்­டைய வீதியின் மலைத் தொட­ராக இது அமைந்­துள்­ளது. இங்­குள்ள கல்­வெட்­டுக்­களில் அரபு மொழி வடி­வமும் எழுத்­துக்­களும் காணப்­ப­டு­கின்­றன. இங்­குள்ள கல்­ல­றை­களும் புராணக் கதை­களும் குதுப் முஹி­யத்தீன் தனது தியான வாழ்வில் ஒரு பகு­தியை கூர­கல ஜெய்­லா­னியில் கழித்­துள்ளார் என்­பதை உறு­தி­யாக நம்ப வைக்­கின்­றன.

சதுரா சங்­காரம் என்ற நூலில் இவ­ரது விஜயம் பற்றி விரி­வான விட­யங்கள் பல சொல்­லப்­பட்­டுள்­ளன. முதலில் அவர் ஆதம் மலைக்கு ஏறி நபி ஆத­முக்கு தனது கௌர­வத்தை செலுத்தி உள்ளார். பின்னர் அவர் தப்தர் ஜெய்­லா­னிக்கு விஜயம் செய்து அங்கு 12 ஆண்­டுகள் நோன்பு நோற்றல் மற்றும் தியானம் என்­ப­ன­வற்றில் ஈடு­பட்­டுள்ளார் என்று அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­பு­ரியின் அர­சாங்க அதி­ப­ராக இருந்த ஆர்.எம்.தாய்னி 1914இல் தனது உத்­தி­யோ­கபூர்வ டய­ரியில் “குறிப்­பிட்ட இந்த மலை முஹம்­ம­தி­யர்கள் மத்­தியில் தஸ்தூர் அல்­லது தக்மா என்ற பெயரில் அழைக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை நான் அறிவேன். குதுப் முஹி­யத்தீன் சுவ­னத்தை நோக்­கிய பாதையில் வந்­துள்ளார். ஒருநாள் அவர் இந்தக் கற்­பாறையில் தனது கையை வைத்த போது அது திறந்து கொண்­டது. அதன் துவாரம் வழி­யாக அவர் உள்ளே சென்றார். பின்னர் அந்த கற்­பாறை மூடிக் கொண்­டது. அதன் பிறகு அவரை யாரும் காண­வில்லை. இவ்­வாறு தான் அந்த மலைப் பகு­திக்கு செல்லும் யாத்­தி­ரி­கர்கள் தமது கை அடை­யா­ளத்தை அதில் பதித்து வரு­கின்­றனர்” என்று எழுதி உள்ளார்.

குதுப் முஹி­யத்­தீ­னுக்கு கூர­கல­யுடன் உள்ள தொடர்­புகள் பற்­றிய ஏனைய ஆதா­ரங்­களில் 1922இல் கல்­லறை கண்டு பிடிக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் ஒன்றை கட்­டு­வ­தற்­காக புவி மேட்டுப் பகு­தியில் இருந்து பத்து அடிகள் பள்­ளத்­துக்கு தோண்­டப்­பட்ட போது ‘முஹி­யத்­தீனின் சீடர்’ என்ற வாசகம் பொறிக்­கப்­பட்ட கி.பி. 1322 காலப்­ப­கு­திக்­கு­ரிய கற்­பாறை காணப்­பட்­டது. இது இலங்­கையில் போர்த்­துக்­கே­யரின் வரு­கைக்கு நீண்ட நாட்­க­ளுக்கு முன் மரணம் அடைந்த அவ­ரது சீடர் ஒரு­வரின் அடக்­கஸ்­த­ல­மாகும். போர்த்­துக்­கே­யரின் வருகை உடன்தான் இலங்­கையில் அரா­பி­யர்­களின் இலா­ப­க­ர­மான வர்த்­த­கத்­துக்கும், கூர­கல வீதியின் பயன்­பாட்­டுக்கும் முடிவு கட்­டப்­பட்­டது.

கி.பி.1322இல், குதுப் முஹி­யத்தீன் மரணம் அடைந்து 1543 வரு­டங்­களின் பின் ஒரு கல்­ல­றையில் அவர் பற்­றிய எழுத்­துக்­களைப் பதிப்­ப­தாயின் கூர­க­லக்கும் அந்த மகா­னுக்கும் இடையில் நிச்­ச­ய­மாக தொடர்­புகள் இருந்­தி­ருக்க வேண்டும்.

1922இல் ஹிட்­டு­வன்­கல மலையின் கீழ் ஒரு சிறிய பள்­ளி­வாசல் கட்­டப்­பட்­டது. இந்­தப்­பள்­ளி­வா­ச­லுக்கு கூரை தேவைப்­ப­ட­வில்லை. காரணம் இந்தக் கற்­பாறை ஒரு நாகத்தின் வடிவில் அடர்த்­தி­யாக அமைந்து தேவை­யான நிழ­லையும் மழையில் இருந்து பாது­காப்­பையும் வழங்கக் கூடி­ய­தாக அமைந்­தி­ருந்­தது. அங்­கி­ருந்து முஸ்­லிம்கள் தொழு­கைக்­காக நோக்கும் புனித மக்­காவில் உள்ள கஃபாவின் திசையை நோக்­கி­ய­தாக அர­பியில் எழு­தப்­பட்ட பல வச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. அந்த கற்­பா­றைக்குள் தொழு­கைக்­கான திசையை உறுதி செய்யும் வகையில் இவை அமைந்­துள்­ளன.

தர்வேஷ் முஹி­யத்தீன் என்ற வாசகம் பொறிக்­கப்­பட்ட 715ஆம் ஆண்டு
காலப்­ப­கு­தியின் கல்­வெட்டு
அபு­சாலி எழு­தி­யுள்ள நூலின் படி சிலர் 1960 களில் கூர­கல பௌத்த துற­வி­களும் தியா­னத்தில் ஈடு­பட்ட ஒரு இடம் என்று பௌத்­தர்கள் சிலர் உரிமை கோரத் தொடங்­கினர். இதற்­கான ஆதா­ரங்கள் அவர்­க­ளிடம் இல்­லாத போதிலும் கூட இந்த உரிமை கோர­லோடு முரண்­ப­டாமல் முஸ்­லிம்கள் முன்­வைத்த ஏனைய கருத்­துக்­க­ளையும் ஓரம் கட்ட முடி­யாது. மத்­திய கிழக்­கு­ட­னான வர்த்­தகத் தொடர்பு ஆதம் மலை­யுடன் பல தொடர்­பு­களைக் கொண்­டுள்­ளது. பாதை­யு­டனும் இது தொடர்­பு­பட்­டுள்­ளது. அரபு எழுத்­துக்கள், கல்­வெட்­டுக்கள், கல்­லறை என்­பன வர­லாற்­றோடு தொடர்­பு­டைய உண்­மைகள். வர­லாற்றின் ஆரம்ப காலம் முதலே இலங்­கைக்கும் மத்­திய கிழக்­குக்கும் இடை­யி­லான உற­வு­களை இவை பறை­சாற்றி நிற்­கின்­றன.

1901 மற்றும் 1928ல் மற்றும் அதற்கு முந்­திய காலங்­களில் அச்­சி­டப்­பட்ட தேச வரை­ப­டங்கள் கூர­க­லயை ‘முஹம்­ம­திய வழி­பாட்­டிடம்’ என்று அடை­யாளப் படுத்தி உள்­ளன. ஆனால் சுதந்­தி­ரத்­துக்குப் பின் ஒரு மைலுக்கு ஒரு அங்­குலம் என்ற ரீதியில் திருத்தி அமைக்­கப்­பட்ட தேச வரை­ப­டத்தில் இந்த அடை­யாளம் 1971இல் நீக்­கப்­பட்­டுள்­ளது. 1971இல் மீள­மைக்­கப்­பட்ட இந்த தேச வரை­ப­டத்தில் குறிப்­பிட்ட இடம் இரண்டாம் நூற்­றாண்­டுக்கு சொந்­த­மான ஒரு பௌத்த மடா­லயம் என்று அடை­யாளம் இடப்­பட்­டுள்­ளது. (1972இல் தம்­மிடம் உள்ள ஒரே ஆதா­ர­மாக தொல்­பொருள் திணைக்­க­ளத்தால் காட்ட முடிந்­தது இங்கு அவர்­களால் வைக்­கப்­பட்ட ஒரெ­யொரு அறி­வித்தல் பலகை மட்­டுமே).
முஸ்­லிம்கள் தமக்கு முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­திய ஒரு இடத்தில் இருந்து அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்த, இலங்கை சுதந்­திரம் அடைந்­தது முதல் இன­வாத பிரி­வினர் திட்­ட­மிட்டு வந்­துள்­ளனர் என்­பதை இது மிகத் தெளி­வாக சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

முதலில் போர்த்­து­க்­கே­யர்­களும் பின்னர் டச்­சுக்­கா­ரர்­களும் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்த பின் தப்தர் ஜெய்­லானி பெரும்­பாலும் கைவி­டப்­பட்ட ஒரு பிர­தே­ச­மா­னது. முஸ்லிம் வர்த்­த­கர்கள் ஆதம் மலைக்கு செல்லப் பயன்­ப­டுத்­திய இரத்­தி­ன­புரி கூர­கல பாதையைக் கைவிட்­டமை இதற்கு முக்­கிய காரணம். அந்த வகையில் 1850 வரை தப்தர் ஜெய்­லானி என்ற பெயரில் மட்­டுமே இந்தப் பகுதி அறி­யப்­பட்டு வந்­தது.

சமய ரீதி­யாக முஸ்­லிம்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மான இந்த தப்தர் ஜெய்­லானி பற்றி இரத்­தி­ன­புரி கச்­சே­ரியில் உள்ள அரச அதி­பர்­களின் டய­ரி­க­ளிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எச். மூயார்ட்ஸ், 13 ஜன­வரி 1857ல், எச்.வேஸ் 20 மார்ச் 1887ல், ஆர்.பி.ஹெல்லிங்ஸ் 12 பெப்­ர­வரி 1910ல், ஜி.குக்ஸன் 12 ஜன­வரி 1911இல், ஆர்.என்.தாய்னே 26 மார்ச் 1914இல், ஜி.எச். கொலின்ஸ் 1922 மற்றும் 1929இல், என்.ஜே. லடிங்டன் 1935இல் தத்­த­மது டய­ரி­களில் இது பற்றிக் குறிப்­புக்­களை எழுதி உள்­ளனர்.

தப்தர் ஜெய்­லா­னியை காப்­பாற்றும் பொறுப்பை முழு­மை­யாக அந்தப் பள்­ளி­வா­சலின் பணிப்­பாளர் சபை­யி­னரே சுமந்­துள்­ளனர். வக்பு சட்டம் அமு­லுக்கு வந்த போது பள்­ளி­வா­சலும் சந்­நி­தா­ன­மும் அந்த சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டன. மேலும் இந்த சட்­டத்தின் நிய­தி­க­ளுக்கு இசை­வாக பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் இடம்­பெற்று வந்­தது.
1940களில் காணித் தீர்வு அதி­கா­ரிகள் பலாங்­கொடைப் பிர­தே­சத்தில் காணித் தீர்­வு­களைத் தொடங்­கினர். அப்­போது பலாங்­கொ­டையில் பள்­ளி­வாசல் அமைந்­துள்ள இடத்தைச் சுற்றி தன்­ஜன்­தென்ன என்ற இடத்தில் இரண்டு துண்டு காணி­க­ளுக்கு முஸ்­லிம்கள் உரிமை கோரினர். இது சம்­பந்­த­மான சமர்ப்­ப­ணங்கள் இடம்­பெற்ற பின் காணித் தீர்வு அதி­கா­ரிகள் நான்கு ஏக்கர் காணியை முஸ்­லிம்­க­ளுக்கு ஒதுக்க இணங்­கினர். அன்­றைய நில அள­வை­யாளர் கொகு­லன்­தர என்­ப­வ­ருக்கு இது சம்­பந்­த­மான உத்­த­ரவு வழங்­கப்­பட்­டது. 1953ல் இங்கு நில அளவை இடம்­பெற்­றது.

இவ்­வா­றுதான் முஸ்­லிம்­களின் உரிமை கோரலை அன்­றைய அரசு ஏற்றுக் கொண்­டது. 1958 பெப்­ர­வரி 18ல் அர­சாங்க அதிபர் தப்தர் ஜெய்­லா­னியின் வரு­டாந்த கொண்­டாட்­டத்தை யாத்­தி­ரிகள் சட்­டத்தின் கீழ் கொண்டு வரு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அறிவித்தனர். எவ்­வா­றேனும் அதன் பிறகு அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்­டது. ஏற்­க­னவே வழங்­கு­வ­தாக ஒத்துக் கொண்ட நான்கு ஏக்கர் காணியை முன்­னு­ரிமை குத்­தகை அடிப்­ப­டையில் வழங்­கு­வது என அறி­விக்­கப்­பட்­டது. இதற்­கான கார­ணங்கள் எதுவும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இத­னி­டையே இந்த விட­யத்தில் அக்­கறை கொண்ட சில சக்­திகள் மீண்டும் கூர­கல பகுதி பௌத்த சமய முக்­கி­யத்­துவம் மிக்­கது என உரிமை கோரினர். தொல்­பொருள் திணைக்­களம் தப்தர் ஜெய்­லா­னியில் ஒரு புதிய பௌத்த கோபு­ரத்தை கட்டத் தொடங்­கி­யது. கலா­சார அமைச்சின் செய­லா­ள­ராக நிஸ்­ஸங்க விஜே­ரத்ன பதவி வகித்தபோது இது இடம்­பெற்­றது. 1971இல் இந்த பௌத்த கோபுரம் இரண்­டடி உய­ரத்­துக்கு கட்­டப்­பட்­டது. அதன் பின் அவர்கள் இது 2000 ஆண்­டுகள் பழ­மை­யா­னது என உரிமை கோரத் தொடங்­கினர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.