பயங்கரவாத தடை சட்டம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது

இஸ்லாமிய நிலையம் பீரிசுக்கு கடிதம்

0 387

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பல உள்­ள­டக்­கங்­களை நோக்­கு­மி­டத்து அவை சட்­டத்தில் மிகக் கொடி­யவை என இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்­சட்டம் இந்­நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­துக்கும், உரி­மை­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக அமைந்­துள்­ள­தா­கவும் இலங்கை இஸ்­லா­மிய நிலையம் சுட்டிக் காட்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் இலங்கை இஸ்­லா­மிய நிலை­யத்தின் தலைவர் எம்.ஹுசைன் மொஹமட் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸுக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். இக்­க­டி­தத்­திலே ஹுசைன் மொஹமட் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

வடக்­கிலும் கிழக்­கிலும் பயங்­க­ர­வாதம் எங்கும் பர­வி­யி­ருந்த கால­கட்­டத்தில் முதன் முதல் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அமுலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த கால கட்­டத்தில் பயங்­க­ர­வாத சட்­டத்தின் அமு­லாக்கம் தேவை­யா­னது என அப்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­தது. ஆயு­தப்­போ­ராட்டக் காலத்தில் அமு­லுக்கு வந்த இந்த சட்டம் மக்கள் மத்­தியில் சந்­தே­கத்­தையும் பீதி­யையும் தோற்­று­வித்­தது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தவ­றாகக் கையா­ளப்­பட்­டுள்­ளது. சிவில் சமூக பிர­ஜை­களை மாத்­தி­ர­மல்ல எதிர்­கட்சி அர­சியல் கட்­சி­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளையும் நசுக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக சில சம்­ப­வங்கள் இடம் பெற்­றுள்­ளன. பல்­வேறு சமூ­கங்­களைச் சேர்ந்த நபர்கள் நியா­ய­மா­ன­தென வாதாட முடி­யாத சட்ட உடன்­பா­டு­க­ளுக்கு மாறாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் அவர்­களின் உரி­மை­க­ளுக்கு மாறாக கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

அர­சாங்கம், பாது­காப்பு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பலரை விடு­தலை செய்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­ய­கத்தின் அழுத்­தங்­களை அடுத்தே அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் அர­சாங்கம் முன்­மொ­ழிந்­துள்ள திருத்­தங்கள் இச்­சட்­டத்தின் கொடூ­ரத்­தன்­மையை நீக்­கு­வ­தாக அமை­ய­வில்லை.
அதனால் அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ரத்­துச்­செய்ய வேண்­டு­மென இலங்கை இஸ்­லா­மிய நிலையம் கோரிக்கை விடுக்­கி­றது. அத்­தோடு நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்­து­மாறும் இஸ்­லா­மிய நிலையம் வேண்டிக்கொள்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வதால் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை உருவாகாது. மக்கள் இனவேறுபாடுகளின்றி பழங்கால அரசர் காலம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.