மூன்று சக்கர சைக்கிளையே வசிப்பிடமாக்கியுள்ள முதியவர்!

0 529

எச்.எம்.எம்.பர்ஸான்

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் முக­நூலில் ஒரு வீடியோ பகி­ரப்­பட்­டி­ருந்­தது. அது நள்­ளி­ரவில், பொலன்­ன­றுவ – மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியில், வெலி­கந்த பிர­தே­சத்தில் கொட்டும் மழைக்கு மத்­தியில் மூன்று சக்­கர சைக்­கிளில் வயோ­ப­திபர் ஒருவர் அமர்ந்­தி­ருப்­பதைக் காட்­டு­கி­றது. அந்த வீடி­யோவைப் பதிவு செய்­தவர் குறித்த வயோ­ப­தி­ப­ருடன் உரை­யா­டு­வதும் அவ­ருக்கு உதவி செய்­வதும் அதில் பதி­வா­கி­யி­ருந்­தது. தான் ஓட்­ட­மா­வடி நோக்கிச் சென்று கொண்­டி­ருப்­ப­தாக அதில் குறித்த முதி­யவர் குறிப்­பி­டு­கிறார்.

அவ­ரது பெயர் முகம்­மது ஜெலீல் ஹசன் லெப்பை. அவ­ருக்கு 74 வய­தா­கி­றது. கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் தற்­போது தள்­ளாடும் வயதில் அநா­த­ர­வாக வாழ்ந்து வரும் அந்த முதி­யவர் பற்­றிய தக­வல்­களை அறிந்து கொள்ள நாம் அவரை நேரில் சந்­தித்துப் பேசினோம்.

“என்ட சொந்த ஊரு நாவ­லப்­பிட்டி – ஹபு­கஸ்­த­லாவ. நான் ஓட்­ட­மா­வ­டிக்கு பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் வந்தேன். ஓட்­ட­மா­வ­டியில் இருக்கும் எனக்கு தெரிஞ்ச ஆள் ஒரு­வர்தான் என்னை கவ­னித்தார். அவர்தான் எனக்கு தொழில் செய்ய ஏற்­பா­டு­களை செய்து தந்தார்.

நான் இப்ப கச்சான், கடலை, கஜு போன்ற பொருட்­களை பக்கட் பண்ணி என்ட சைக்­கிளில் வித்து வாறன்.
இப்ப வியா­பா­ரமும் சரி­யான சவுப்பு, என்ட உடல் நிலையும் மிகவும் மோச­மாக போய் கொண்டு இருக்கு.

என்­னால எழும்பி நடக்க ஏலா அதால நான் என்ட சைக்­கி­ளில்தான் இருப்­பி­டத்தை அமைத்­துள்ளேன்.
அதில்தான் என்ட காலம் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது” என்று தனது துயரக் கதையை எம்­மிடம் கூறினார் அந்த முதி­யவர்.

தொடர்ந்தும் நாம் அவ­ரிடம் பேசி­ய­போது, “நான் என்ட சைக்­கிள்ல நீண்ட தூரம் பய­ணிப்பேன். பய­ணிக்கும் போது நேரம் சென்டு இருட்­டா­கினா சைக்­கிள ஒரு ஓரத்­துல நித்­தாட்டி போட்டு சைக்­கி­ளுக்­குள்ளே தூங்­கி­டுவேன்.

சில சந்­தர்ப்­பங்­களில் யானைகள் நட­மாடும் இடத்­திலும் நான் தன்­னந்­த­னி­யாக தூங்­குவேன். யானைகள் எனக்கு ஒன்டும் செய்­யாது அது அதுட பாட்­டுக்கு கடந்து செல்லும்.
அதப்­போல நான் வெளி­யூர்­க­ளுக்கு செல்லும் போது தமிழ், முஸ்லிம், சிங்­கள, கிறிஸ்­தவ மக்கள் என்னை கவ­னிப்­பார்கள். எனக்கு சாப்­பாடு தந்து சந்­தோ­சப்­ப­டுத்­து­வார்கள்.

கிரானில் ஒரு கிறிஸ்­தவப் பெண்­ணொ­ருவர் இருக்கா. நான் அங்கு சென்றால் அந்தப் பெண்­மணி எந்த சங்­க­டமும் இல்­லாமல் என்னை குளிப்­பாட்டி, சாப்­பாடு தந்து காசு தருவா. இப்­ப­டி­யான மனி­சங்க இருப்­ப­தால்தான் நான் அல்­லாஹ்ட உத­வி­யால இன்­று­வரை வாழ்ந்­து­கிட்டு இருக்கன்” என எம்­முடன் பேசினார் அந்த முதி­யவர்.

“எனக்கு இப்­போது ஓடி­யாடி தொழில் செய்ய முடி­ய­வில்லை. நான் ஒரு காலத்தில் நல்ல தொழில்­களை செய்து நாளொன்­றுக்கு நல்ல வரு­மா­னங்­களை சம்­பா­தித்தேன்.
இவ்­வாறு நான் 2019 ஏப்ரல் குண்டு வெடிப்­புக்கு பின்னர் தொழில் கார­ண­மாக வெளியூர் ஒன்­றுக்கு சென்­ற­போது என்னை இனந்­தெ­ரி­யாத நபர்கள் சிலர் தாக்­கி­னார்கள். அத­னால்தான் நான் இன்­று­வரை நடக்க முடி­யாமல் சைக்­களில் தத்­த­ளிக்­கிறேன்.”

பல்­வேறு இன்­னல்­களை அனு­ப­வித்து வரும் இந்த முதி­யவர் பத்­தி­ரிகை வாசிப்பு பழக்­க­மு­டை­ய­வ­ரா­கவும் இருந்து வரு­கிறார். தான் பன்­னி­ரண்டு வய­தி­லி­ருந்து வாசிப்பு பழக்கம் கொண்­ட­வ­ரா­கவும் தற்­போது வரை பத்­தி­ரி­கை­களை வாசித்து வரு­வ­தா­கவும் அவர் எம்­மிடம் கூறினார்.

ஆரோக்­கி­ய­மான உணவும், உடல் பரா­ம­ரிப்பும் இல்­லாமல் தற்­போது மிகவும் கஷ்­ட­மான நிலையில் வாழ்ந்து வரும் இந்த முதி­யவர் தொடர்­பாக ஓட்­ட­மா­வ­டியில் அவ­ருக்கு நன்கு அறி­மு­க­மான சிலரை அணுகி இவ­ரது நிலைமை பற்றிக் கேட்டோம்.

“ஹசன் லெப்பை எனும் இந்த நபர் கொழும்பு பகு­தியில் தொழில் செய்து வந்தார். அப்­போது நாங்கள் கொழும்பு பகு­திக்கு செல்லும் போது அவரை சந்­திப்போம்.
இவர் கொழும்பு சம்­மான்­கோட்டை பள்­ளிக்கு முன்­பாக அவ­ரது தொழிலை திறன்­பட செய்து வந்தார்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் ஓட்­ட­மா­வடி பகு­திக்கு தொழில் நிமித்தம் வந்து அவ­ரது தொழிலை சிறந்த முறையில் மேற்­கொண்டு வந்தார்.
இப்­போது அவரால் தொழில் செய்ய முடி­யாது. நடக்க முடி­யாது. அவ­ரது உடல்­நிலை நாளுக்­குநாள் மோச­ம­டைந்து செல்­கி­றது.

எங்­களால் முடிந்த உத­வி­களை அவ­ருக்கு செய்­தி­ருக்­கிறோம்.
அவர் குடும்­பங்கள் யாரு­மின்றி தனி­மை­யில்தான் இது­வரை காலமும் இங்கு வாழ்ந்து வரு­கிறார்.

ஒரு­முறை அவ­ரது குடும்­பத்­தினர் அவரை அழைத்துச் சென்­றனர். ஆனாலும் அவர் சில நாட்­க­ளுக்குப் பின்னர் மீண்டும் ஓட்­ட­மா­வ­டிக்கு வந்­து­விட்டார் என்றனர்.
இவரின் குடும்­பத்தை நாம் தொடர்­பு­கொள்ள முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அதற்­கான வாய்ப்பு எமக்கு கிடைக்­க­வில்லை.

இவரை விடி­வெள்ளி பத்­தி­ரிகை ஊடாக அடை­யா­ளப்­ப­டுத்துவதன் மூலம் குடும்­பத்­தினர் அடை­யாளம் கண்டு இவரை பரா­ம­ரிக்க முன்­வ­ர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.

உறவுகளின் பராமரிப்பில் வாழ வேண்டிய இந்த வயதானவர் அநாதரவாக மழையிலும், வெயிலிலும் யானைகள் நடமாடும் இடங்களிலும் சைக்கிளில் வாழ்ந்து வருவது கவலையடையச் செய்கிறது.

முதியவர் ஹசன் லெப்பை இறுதிக் காலத்திலாவது நிம்மதியாகவும், நல்ல பராமரிப்பிலும் வாழ்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.