கம்பளை, கஹட்டபிடிய சம்பவம் இன ரீதியிலான முரண்பாடல்ல

இரு குழுக்களுக்கிடையிலான தகராறே

0 477

(உடு­நு­வர நிருபர்)
கம்­பளை, கஹட்­ட­பி­டிய சம்­பவம் இரு குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட தக­ரா­றாகும். இது இன­ரீ­தி­யான சம்­ப­வ­மல்ல என்று கம்­பளை நக­ர­ச­பையின் உப தலைவர் எச்.எல்.எம். புர்கான் தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் இரு இளைஞர் குழுக்­க­ளி­டையில் சில தினங்­க­ளுக்கு முன்பு ஏற்­பட்ட முரண்­பாட்டைத் தொடர்ந்து இடம்­பெற்ற சம்­ப­வ­மாகும். இதில் இன முறு­கல்கள் எது­மில்லை என்றும் அவர் உறு­திப்­ப­டுத்­தினார்.

கம்­பளை போத்­த­ல­பிட்­டிய பகு­தியில் சில தினங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய இரு இளைஞர் குழுக்­க­ளுக்கு இடையில் வாய்த்­தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்­வாய்­க்­கி­ழமை மாலை கம்­பளை இலம்­காம்­வத்தை சந்­தியில் உண­வ­க­மொன்­றுக்கு உண­வ­ருந்த வந்த இளை­ஞர்­க­ளுக்கும் போத்­த­ல­பிட்­டிய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இளை­ஞர்­க­ளுக்கும் இடையில் மீண்டும் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து இரவு 11 மணி­ய­ளவில் மது­போ­தையில் அங்கு வந்த மற்­று­மொரு குழு­வி­ன­ருக்கும் இடையில் மோதல் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­ப­வத்தில் வீடொன்று அடித்து நொறுக்­கப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­க­ர­வண்டி மற்றும் உண­வ­கத்­திற்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்டு இளைஞர் குழுக்கள் கலைத்து விரட்­டப்­பட்­டுள்­ளனர். சம்­ப­வத்தில் காய­ம­டைந்த எட்டுப் பேர் கம்­பளை போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். மேலும் மூவர் தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய கம்பளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.