பள்ளி நிர்வாகங்களின் பதவிக் காலம் நீடிப்பு

புதிய நிர்வாகங்களின் அனுமதியும் இடைநிறுத்தம்

0 390

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தற்­போது காலா­வ­தி­யா­கி­யுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை­களின் பத­விக்­காலம் வக்பு சபை­யினால் மறு அறி­வித்தல் ­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு புதிய நிர்­வாக சபை­களைத் தெரிவு செய்­வ­தற்­கான அனு­மதி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

2022.02.10 ஆம் திக­தி­யி­டப்­பட்ட MRCA/W/1/2/2022 எனும் இலக்­க­மு­டைய கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ‘இலங்கை வக்பு சபையின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அநே­க­மான பள்­ளி­வா­சல்­க­ளது நம்­பிக்­கை­யா­ளர்­களின் நிய­மனக் காலம் முடி­வ­டைந்­துள்­ள­துடன் புதிய நம்­பிக்­கை­யாளர் சபை­யினைத் தெரிவு செய்­வ­தற்­கான அனு­ம­தி­யினை வழங்­கு­மாறு பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள் /பொறுப்­பா­ளர்­க­ளினால் தொடர்ச்­சி­யாக வேண்­டுகோள் விடுக்­கப்­ப­டு­கின்­றன.

எனினும் தற்­போது நாட்டில் கொவிட் 19 கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக மத ஸ்தலங்­களில் ஒன்று கூடு­வோரின் எண்­ணிக்கை வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள துடன் பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆத் தொழுகை தவிர்ந்த வே-று எவ்­வித கூட்டு செயற்­பா­டு­க­ளுக்கோ,அல்­லது பொதுக்­கூட்­டங்­க­ளுக்கோ சுகா­தார தரப்­பி­னரால் அனு­மதி வழங்­கப்­ப­டாத கார­ணத்­தினால்,புதிய நம்­பிக்­கை­யாளர் சபை­யினைத் தெரிவு செய்­வ­தற்­கான அனு­மதி மறு­
அ­றி­வித்­தல்­வரை இலங்கை வக்பு சபை­யினால் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அனு­மதி கிடைத்­த­வுடன் நம்­பிக்­கை­யாளர் தெரிவு தொடர்­பாக தங்­க­ளுக்கு அறி­யத்­த­ரப்­படும் என்­ப­தனை அறி­யத்­த­ரு­கின்றேன்.

எனவே 1956 ஆம் ஆண்டில் 51 ஆம் இலக்க வக்பு சட்டம், 1962 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வக்பு திருத்­தச்­சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வக்பு திருத்­தச்­சட்டம் ஆகி­ய­வற்றின் சரத்து 14 (3) இன் பிர­காரம் புதிய நம்­பிக்­கை­யாளர் சபை­யினைத் தெரிவு செய்து இலங்கை வக்பு சபை­யினால் நிய­மனம் வழங்­கப்­ப­டும்­வரை தற்­போ­துள்ள நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களே பள்­ளி­வாசல் பரி­பா­ல­னத்­துக்கு பொறுப்­பு­டை­ய­வர்கள் என்­ப­தனை கவ­னத்திற் கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றீர்கள்.
இது தவிர நிதி நிருவாக மோசடி மற்றும் ஒழுக்கக் கேடான விடயங்களில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நிருவாகங்களுக்குப் பதிலாக தற்காலிகமாக ‘விசேட நம்பிக்கையாளர்கள்’ வக்பு சபையின் அனுமதியுடன் நியமிக்கப்படுவார்கள் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.