2021 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகளுக்கான ஆளுமைமிக்க நபர்களின் பட்டியலில் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் உள்வாங்கப்பட்டுள்ளார்.
உலக வளர்ச்சி மன்றத்தின் 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாத சஞ்சிகை தனது 2021 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமைமிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ‘2021 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகளுக்கான ஆளுமை மிக்க நபர்” எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளார்.
இராஜதந்திரம் மற்றும் இரு தரப்பு உறவுகளில் மைல்கற்களை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்துக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் தமது தொழில் மற்றும் சொந்த வாழ்வில் உலக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆளுமைமிக்க நபர்கள் இத் தெரிவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli