667 நாட்களின் பின்னர் குடும்பத்துடன் இணைந்தார் ஹிஜாஸ்

கடவுச் சீட்டு புத்தளம் மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது ஹிஜாஸின் சகோ­த­ரரும் சகோ­த­ரியும் பிணை­யா­ளர்­க­ளாக ஏற்பு

0 362

(புத்­தளம் நீதி­மன்­றி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 667 நாட்­களின் பின்னர் நேற்று பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான மேனகா விஜே­சுந்­தர, நீல் இத்­த­வல ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட CA/ Pu;C/APN/10/22 எனும் சீராய்வு மனுவின் உத்­த­ர­வாக அவ­ருக்கு பிணை­ய­ளிக்­கு­மாறு கடந்த 7 ஆம் திகதி அறி­வித்­தனர்.

அந்த உத்­த­ரவை நேற்று புத்­தளம் மேல் நீதி­மன்றில் பி.ப. 2.35 மணிக்கு பிர­தி­வா­தி­யான ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு தெளி­வு­ப­டுத்­திய, இந்த விவ­கா­ரத்தை விசா­ரிக்க என நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிலாபம் மேல் நீதி­மன்ற நீதி­பதி குமாரி அபே­ரத்ன, அவரை பிணையில் செல்ல அனு­ம­தித்தார்.

அதன்­படி, ஒரு இலட்;சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் ஹிஜாஸை விடு­விக்க, மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய நீதி­பதி குமாரி அபே­ரத்ன கட்­ட­ளை­யிட்டார்.

அதன்­படி ஹிஜாஸின் சகோ­த­ரரும் சகோ­த­ரியும் பிணை­யா­ளர்­க­ளாக நீதி­மன்றால் திறந்த நீதி­மன்றில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டனர்.

இத­னை­விட, பிணை நிபந்­த­னை­க­ளாக, இது­வரை ஹிஜாஸ் தனது கடவுச் சீட்டை புத்­தளம் மேல் நீதி­மன்றில் சமர்ப்­பித்­தி­ருக்­காத நிலையில் அது திறந்த மன்றில் நேற்று உட­ன­டி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அத்­துடன் தனது நிரந்­தர வதி­வி­டத்தை அவர் உரிய கிராம சேவ­கரின் உறு­திப்­ப­டுத்­த­லுடன் மேல் நீதி­மன்­றுக்கு பிணை நிபந்­த­னை­யாக முன் வைத்தார். ஒவ்­வொரு மாதமும் 2 ஆம் 4 ஆம் ஞாயிற்றுக் கிழ­மை­களில் மு.ப.9.00 மணிக்கும் பி.ப. 3.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் புத்­தளம் சிரஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் கையெ­ழுத்­தி­டு­வது போது­மா­னது எனவும் எந்த நிலை­மை­யிலும், வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் அல்­லது சாட்­சி­யா­ளர்­களில் தலை­யீ­டுகள் செய்யக் கூடாது எனவும் நிபந்­த­னைகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி மேனக விஜே­சுந்­த­ரவின் ஒப்­பு­த­லுடன் நீதி­பதி நீல் இத்­த­வல அறி­வித்த பிணை உத்­த­ரவின் பிர­காரம், நேற்று 10 ஆம் திகதி புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணையில் உள்ள வழக்கு முன் கூட்டி விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டது. இதற்­காக ஹிஜாஸ் தரப்பால் நகர்த்தல் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது ஹிஜா­சுக்­காக நீதி­மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, ஹபீல் பாரிஸ், கனேஷ் யொகன், நிரான் அங்­கிடெல் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர். சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி கிஹான் குண­சே­கர ஆஜ­ரானார். இந் நிலை­யி­லேயே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய பிணை நிபந்­த­னைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

முன்­ன­தாக தனக்கு பிணை­ய­ளிக்க முடி­யாது என புத்­தளம் மேல் நீதி­மன்றம் கடந்த 2022 ஜன­வரி மாதம் 28 ஆம் திகதி வழங்­கிய உத்­த­ரவை திருத்தி தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட சீராய்வு மனுவின் உத்­த­ரவு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

ஏற்­க­னவே கடந்த 2021 நவம்பர் 19 ஆம் திகதி ஹிஜா­ஸுக்கு பிணை­ய­ளிக்க மறுத்த புத்­தளம் மேல் நீதி­மன்றின் தீர்­மா­னத்­துக்கு எதி­ரான CA/Pu;­C/APN 128/2021 எனும் சீராய்வு மனு கடந்த 2022 ஜன­வரி 21ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்த போது, ஹிஜா­ஸுக்கு பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் ஆட்­சே­பனை தெரி­விக்கப் போவ­தில்லை எனவும் கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­களை தொடர்ந்து, அவ்­வ­ழக்கின் பிர­தி­வாதி (ஹிஜாஸ்) சார்பில் பிணைக் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அவ்­வ­ழக்கில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்­வா­வினால் அறி­விக்­கப்­பட்­டது.
எனினும் கடந்த 2022 ஜன­வரி 28 ஆம் திகதி, புத்­தளம் மேல் நீதி­மன்றம் ஹிஜாஸ் சார்பில் முன் வைக்­கப்­பட்ட பிணைக் கோரிக்­கையை, மீண்டும் நிரா­க­ரித்து உத்­த­ர­விட்­டது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ், மேல் நீதி­மன்­றத்­துக்கு பிணை வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­மில்­லை­யென்ற நிலைப்­பாட்டில் இதற்கு முன்னர் கடந்த 2021 நவம்பர் மாதம் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால், அதே நிலைப்­பாட்டில் பிணையை மீள நிரா­க­ரிப்­ப­தாக நீதி­பதி குமாரி அபே­ரத்ன அறி­வித்­தி­ருந்தார். இந் நிலை­யி­லேயே கடந்த 2022 ஜன­வரி 31 ஆம் திகதி CA/ Pu;C/APN/10/22 ஆம் இலக்க சீராய்வு மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இம்­மனு தொடர்பில் மனு­தா­ர­ரான ஹிஜா­ஸுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்­வாவும் நிரான் அங்­கி­டெல்லும் ஆஜ­ரா­ன­துடன், பிர­தி­வாதி சட்ட மா அதி­ப­ருக்­காக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொஹந்த அபே­சூ­ரி­யவும் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி கிரி­ஹா­க­மவும் ஆஜ­ரா­கினர். இந்த மனு தொடர்­பி­லான வதங்கள் கடந்த 2022 பெப்­ர­வரி 2 ஆம் திகதி நடந்த நிலை­யி­லேயே, 7 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் உத்­த­ரவு அறி­விக்­கப்­பட்­டது.

இந்த சீராய்வு மனு பரி­சீ­லிக்­கப்­பட்ட போது சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜ­ராகி பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பிணை­ய­ளிக்கும் அதி­காரம் மேல் நீதி­மன்­றுக்கு இல்லை எனவும் அதற்­கான அதி­காரம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கே உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்டி மேல் நீதி­மன்ற நீதி­ப­தியால் பிணை கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் தனது சேவை பெறு­நரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்ள நிலையில், அவரை பிணையில் விடு­வித்து உத்­த­ர­வி­டு­மாறு கோரு­வ­தாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா வாதிட்­டி­ருந்தார்.
இதன்­போது மனுவின் பிர­தி­வா­தி­யான சட்ட மா அதி­ப­ருக்­காக மன்றில் ஆஜ­ரா­கிய மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய, ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிக்க சட்ட மா அதி­ப­ருக்கு எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை என குறிப்­பிட்­டி­ருந்­த­துடன், குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 404 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் அதற்­கான எந்த தடையும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு இல்லை என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந் நிலையில் கடந்த 7 ஆம் திகதி தனது 8 பக்க தீர்ப்பை அறி­வித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், பிணை வழங்­கு­வது தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு உள்ள அதி­கா­ரத்தை குற்­ற­வியல் நடை முறைச் சட்டக் கோவையின் 404 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் உறுதி செய்­தது. இதற்­காக உயர் நீதி­மன்றால் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட சிங்­க­ராயர் எதிர் சட்ட மா அதிபர் மற்றும் பென்வெல் எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்குத் தீர்ப்­புக்­களை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழி­காட்­டல்­க­ளாக பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந் நிலையில், அர­சி­ய­ல­மைப்பின் 145 ஆவது உறுப்­புரை பிர­காரம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பரந்­து­பட்ட அதி­கா­ரத்தை விளக்கி, அதன் பிர­காரம் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வை பிணையில் விடு­விக்க நீதி­ப­திகள் உத்­த­ர­விட்­டுள்­ளனர். இது தொடர்பில் தீர்ப்பறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளதுடன், பிணையில் விடுவிக்கும் தீர்மானத்தை எடுப்பதற்காக, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுமார் 2 வருடங்களாக தடுப்பில் உள்ளமை, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கூட வழங்க முடியுமான தண்டனை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சட்ட மா அதிபர் பிணையளிக்க ஆட்சேபனை தெரிவிக்காமை மற்றும் வழக்கை விசாரிக்கும் மேல் நீதிமன்றுக்கு பிணையளிக்க அதிகாரம் இல்லாமை ஆகிய காரணிகளையும் பகுப்பாய்வு செய்து, ஹிஜாஸுக்கு பிணையளிக்க தீர்மானித்ததாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.