ராஜபக்சாக்கள் மட்டும்தான் நாட்டை ஆள வேண்டுமா?

0 401

மூலம்: மனு வர்ண
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு வந்­த­போது அவரை வர­வேற்­ப­தற்­காக விமான நிலை­யத்­திற்குச் சென்­றி­ருந்­தவர் அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவே. பொது­வாக வெளி­நாட்டு அமைச்­ச­ரொ­ருவர் வருகை தரும்­போது அவரை வர­வேற்கும் (Protocol Minister) உப­சார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது அதே துறையைச் சேர்ந்த அமைச்­ச­ராவார். ஆயினும் ஏதோ ஒரு கார­ணத்­திற்­கா­கவே வெளி­நாட்டு அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல் பீரிஸ் விமான நிலை­யத்­துக்கு செல்­ல­வில்லை என்­ப­துடன் சீன அமைச்­சரை கவ­னித்துக் கொள்ளும் பணியில் தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவே ஈடு­பட்­டி­ருந்­தா­ரே­யன்றி அதற்­கு­ரி­ய­வ­ரான அமைச்சர் ஜி.எல் பீரி­ஸல்ல. அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இப்­ப­ணியில் பங்­கு­பற்­றா­து­விடின் அதற்­கான அடுத்த இடம் வழங்­கப்­பட்டு இருக்க வேண்­டி­யது வேறு ஒரு சிரேஷ்ட அமைச்­ச­ருக்­காகும். சீனா இரா­ஜ­தந்­திர ரீதியில் பலம் பொருந்­திய பெரிய ஒரு நாடு என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. அதன்­படி தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார போன்ற ஒரு­வ­ருக்கு இப்­பொ­றுப்பு வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். விமல் வீர­வன்ச போன்­ற­தொரு சிரேஷ்ட அமைச்­சரும் இதற்குப் பொருத்­த­மா­ன­வரே. ஆனால் அப்­ப­டி­யெ­து­வு­மின்றி நாமல் ராஜ­பக்­சவே பொறுப்­புக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான காரணம் என்ன? இந்த அரசில் ராஜ­பக்­சாக்­களின் பலம் அந்த அள­வுக்கு வியா­பித்­தி­ருப்­ப­தாகும்.

உயர்­மட்ட ராஜ­தந்­தி­ரி­யொ­ரு­வ­ருக்­காக மிகவும் கனிஷ்ட நிலை அமைச்சர் ஒருவர் விருந்­து­ப­சார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது சாதா­ரண வழக்கில் இரா­ஜ­தந்­திர உற­வு­களைக் கூட பாதிக்கும் ஒரு விட­ய­மாக அமைய முடியும். ஆனால் இங்கு அத்­த­கைய ஏதும் நடை­பெ­றா­த­தற்குக் காரணம் சீனா­வுக்கும் ராஜ­பக்ச அர­சுக்கும் இடை­யி­லுள்ள விசேட பரஸ்­பர உற­வு­க­ளா­கவே இருக்க முடியும். அமைச்சர் நாமலின் கனிஷ்ட நிலை ராஜ­பக்ச குடும்­பத்தின் ஒளிக் கீற்றால் மூடப்­ப­டு­வ­தாகும்.

இந்த விட­யத்­துக்கு அப்பால் மஹிந்த ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாக சீனா­வுக்குச் சென்­றி­ருந்த போதெல்லாம் தனது குழுவில் நாமல் ராஜ­பக்­சவை இணைத்­துக்­கொண்­டி­ருந்­தமை கடந்த காலத்தை மீட்டும் எவ­ருக்கும் தெரியும். நாம­லுக்கு வழங்­கப்­படும் அமைச்­சுக்­களும் எதிர்­கா­லத்தில் அர­சி­யலில் அதி­கா­ரத்தின் போது அவ­சியம் தேவைப்­படும் இளைஞர் யுவ­தி­களை ஒன்று திரட்டும் விதத்­தி­லான அமைச்­சு­க­ளாகும். இதனை விட ஜனா­தி­பதி சித்­தப்பா, நாமலை எத்­தனை செய­ல­ணி­களில், குழுக்­களில் அங்­கத்­த­வ­ராகச் சேர்ந்­துள்ளார்? அவ­ருக்கு கிடைக்கும் இந்த சிறப்பு மொட்டு கட்­சியின் ஏனைய சிரேஷ்ட அமைச்­சர்­க­ளுக்கு கூட கிடைப்­ப­தில்­லையே ஏன்?

அர­சாங்­கத்­துக்குள் ஏழு ராஜ­பக்­சாக்கள் இருக்­கின்­றனர். ஜனா­தி­பதி தவிர்ந்து இன்னும் நால்வர் பலம் வாய்ந்த அமைச்­சர்கள். ஒருவர் இரா­ஜாங்க அமைச்சர் மற்­றொ­ருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்; மொத்த வரவு செலவுத் திட்ட ஒதுக்­கீட்டின் 30 வீதம் ராஜ­பக்ச குடும்­பத்தின் அமைச்­சு­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டு­கி­றது. இதனைப் புதி­தாக விளக்க வேண்­டிய தேவை இருக்­காது.

ராஜ­பக்ச குடும்பம் இந்த நாட்டின் மானி­ய­மு­றையின் தற்­கால அடை­யா­ள­மாகும். தொடர்ந்தும் குடும்ப ஆட்­சியைத் தொடர வேண்­டுமா? என்று கேட்க வேண்­டி­யது இலங்கை மக்­க­ளிடம் மட்­டு­மன்றி மொட்­டுக்குள் இணைந்­துள்ள ராஜ­பக்ச அல்­லாத சிறிய பெரிய அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் தான்.

பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச உடல்­ரீ­தி­யாக இப்­போது மிகவும் நலிந்த நிலையில் காணப்­ப­டு­கின்றார். அவரைத் தொலைக் காட்­சியில் காணும் எவ­ருக்கும் அது விளங்கும். உண்­மையில் அவர் இப்­போது சகல பொறுப்­பு­களில் இருந்தும் விலகி வீட்டில் ஓய்வை அனு­ப­விக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் பிர­த­ம­ரா­கவே இருக்­கிறார். தொடர்ந்தும் தனது பத­வியை விட தயா­ரில்லை என்­பதை அவர் அண்­மையில் அறி­வித்­தி­ருந்தார். இதனை ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, சிறி­மாவோ அம்­மை­யாரை பிர­த­ம­ராக வைத்­தி­ருந்­த­துடன் ஒப்­பி­டலாம். மிகவும் நலி­வ­டைந்து சக்­கர நாற்­கா­லியில் நட­மாடும் நிலை­யிலும் அவரைப் பிர­தமர் பத­வியில் வைத்­தி­ருந்­தமை தொடர்பில் அன்று விமர்­ச­னங்கள் எழுந்­தன. மஹிந்த ராஜ­பக்­சவும் அவ்­வாறு விமர்­சித்­த­வர்தான். அன்று விமர்­சித்­தவர் இன்று அதே நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளார்.

சில­வேளை அவரின் ஓய்வு காலம் நாமல் ராஜ­பக்­சவின் அர­சியல் நிலையை ஸ்தீரப்­ப­டுத்­து­வ­துடன் இணைந்த ஒன்­றாக இருக்­கலாம். கடந்த வருட இறு­தியில் மஹிந்த ராஜ­பக்ச பிர­தமர் பத­வியில் இருந்து விலகப் போகிறார் என்று ஊட­கங்­களில் செய்­திகள் வந்­த­போது அந்த இடத்தை நிரப்­பு­ப­வ­ராக யாரு­டைய பெயர் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது? பசில் ராஜ­பக்ச அமெ­ரிக்­காவில் விடு­மு­றையைக் கழித்துக் கொண்­டி­ருந்த நிலையில் அவர் இலங்கை வந்­த­வுடன் பிர­தமர் பத­வியில் சத்­தியப் பிர­மாணம் செய்ய இருப்­ப­தாக செய்­திகள் வந்­தன. கேள்வி என்­ன­வென்றால் மஹிந்த பதவி விலகும் போது அடுத்த தகு­தி­யு­டை­ய­வ­ராக இருப்­பது ராஜ­பக்ச குடும்­பத்தின் அங்­கத்­தவர் ஒருவர் மட்­டும்­தானா என்­ப­தாகும். பசிலின் பெய­ருக்குப் பதி­லாக தினேஷ் குண­வர்­த­னவின் பெயர் ஏன் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை? எது எவ்­வா­றா­யினும் தினேஷ் குண­வர்­தன நீண்­ட­காலம் பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு மூத்த அர­சி­யல்­வா­தி­யாவார். ஒரு கட்­சியின் தலை­வ­ரா­கவும் உள்ளார். அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சம காலத்­தவர். இலங்­கையின் ஒரு பிர­பல அர­சியல் குடும்­பத்தின் அங்­கத்­த­வ­ரு­மாவார்.

தினேஷ் பிர­தமர் பத­விக்கு தகுதி இல்­லை­யெனில் ஜீ.எல் பீரிஸ், நிமல் சிறி­பால டி சில்வா, ஜனக பண்­டார தென்­னகோன், பந்­துல குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார அல்­லது மஹிந்த யாப்பா அபே­வர்­தன போன்ற எவர் பற்­றியும் பிர­தமர் பதவி குறித்து பேசப்­ப­டா­தது ஏன்? அந்தப் பரம்­ப­ரை­யி­னரில் தகு­தி­யா­னவர் இல்­லை­யெனில் விமல் வீர­வன்ச, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ, பிர­சன்ன ரண­துங்க போன்ற ஒரு­வரின் பெய­ரா­வது முன் வைக்­கப்­ப­டா­தது ஏன்?

காரணம் தெளி­வா­னது. மொட்டு அர­சாங்­கத்தின் எந்த ஒரு உயர் பத­விக்கும் ராஜ­பக்ச அல்­லா­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்று கொள்கை வகுத்­தி­ருப்­ப­தாகும். இந்த விட­யத்தை ஒப்­பு­விக்கும் விசேட சந்­தர்ப்­பமும், வெட்­கங்­கெட்ட சந்­தர்ப்­ப­மு­மாக அமைந்­தது 2019 கோட்­டா­பய ராஜ­பக்­சவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்­பான இறுதித் தீர்­மானம் வெளி­வ­ரு­வ­தற்கு நாட்கள் எண்­ணப்­பட்டுக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­ப­மாகும்.

கோட்­டா­பய வேட்­பு­மனு தொடர்­பி­லான கட்டுப் பணத்தை செலுத்­தி­யி­ருந்த நிலை­யிலும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் அவ­ரு­டைய அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை தொடர்பில் ஏதா­வது பிரச்­சினை வரும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. அப்­போது மாற்று வேட்­பா­ள­ராக வேட்பு மனுத்­தாக்கல் செய்யும் நோக்கில் கட்டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தவர் யார்? சமல் ராஜ­பக்­ச­வே­யாவார். சமலின் பெயர் அந்த இடத்­திற்கு வரக் காரணம் பசில் அப்­போது இரட்­டைக்­கு­டி­யு­ரிமை கொண்­ட­வ­ராக இருந்­த­மை­யாகும் (20ஆவது திருத்­தத்­துக்கு முன்னர்) ராஜ­பக்­சாக்கள் தவிர்ந்த வேறு எவரும் அதற்கு தகுதி பெற­வில்லை. இதனை ராஜ­பக்­சாக்­க­ளல்­லா­த­வர்கள் தங்­களை அவ­மா­னப்­ப­டுத்தும் செய­லாக எடுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அப்­படி எடுக்­க­வில்லை.

இது­போன்று அமைச்சுப் பத­விகள் மற்­றைய பிர­தான பத­விகள் ராஜ­பக்­சாக்­க­ளுக்­கி­டையே சுற்றிச் சுழ­லு­வ­துடன் அவர்கள் விரும்­பாத அல்­லது அவர்­களால் தாங்க முடி­யாத சுமையாய் உள்­ளவை மட்டும் ஏனை­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

மொட்டுக் கட்­சியில் உள்ள ராஜ­பக்­சாக்­க­ளல்­லாத ஏனைய மூத்த அர­சி­யல்­வா­திகள் எவ்­வித அனு­ப­வமும் தகை­மையும் இல்­லா­த­வர்­களா? அவர்­களின் தகு­தி­யீனம் ராஜ­பக்­சாக்­க­ளல்­லா­தி­ருப்­பதா? இவ்­வி­த­மான ஒரு கொள்கை கோத்­தா­பயவின் கொள்­கை­யுடன் மோது­வதை அவ­தா­னிக்­கலாம். முறைமை மாற்றம் (system Change) செய்­வ­தற்­காக அதி­கா­ரத்தைக் கேட்ட கோட்­டா­பய தான் ஒரு­போதும் உற­வி­னர்­க­ளுக்கு பத­வி­களைத் தாரை வார்ப்­ப­வ­ராக இருக்­க­மாட்டேன் என்றார். தனது அரசில் அதனை வேறு யாரும் செய்ய அனு­ம­திப்­ப­து­மில்லை என்றும் கூறினார். அரச நிறு­வ­னங்­க­ளுக்கும் ஏனைய பத­வி­க­ளுக்கும் நேர­டி­யாக ஜனா­தி­ப­தியின் கீழ் உள்ள ஒரு நிபு­ணத்­து­வக்­குழு மூலம் தகை­மை­யா­ன­வர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் முறை அறி­முகம் செய்­யப்­படும் என்றும் கூறினார்.

ஆனால் தொடர்ந்­தது என்ன? கோட்­டா­பய ராஜ­பக்­சவும் பழைய சேற்றுக் குழி­யி­லேயே மூழ்­கி­யமை தான். தனது குடும்பப் பாசம் அவரை அவ்­வாறு செய்ய வைத்­துள்­ளது.
தற்­போது பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள மூத்த ராஜ­ப­க்ஷக்­க­ளுக்குப் பின்னர் அர­சி­யலை முன்­கொண்டு செல்லும் இரண்டாம் நிலை தலை­வர்­களும் இனங்­கா­ணப்­பட்­டு­விட்­டனர். நாமல் ராஜ­பக்ச, சசீந்­தர ராஜ­பக்ச இரு­வரும் அமைச்சர் அந்­தஸ்தில் உள்­ளனர். குடும்­பத்தின் புதிய அங்­கத்­தவர் நிபுண ரண­வக்க மாத்­தறை மாவட்­டத்தில் ராஜ­பக்­சாக்­களின் செல்­வாக்கில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்ளார். மாத்­தறை மாவட்ட பட்­டி­யலில் எப்­போதும் முத­லிடம் பெறும் டளஸ் அழ­கப்­பெ­ரும நான்­கா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்டார். டலஸ், காஞ்­சன விஜ­ய­சே­கர போன்ற அம்­மா­வட்ட அர­சியல் தலை­வர்­களின் ஆத­ர­வா­ளர்­க­ளிடம் கேட்டால் தமது குடும்­பத்தின் வாரிசை முத­லிடம் பெறச் செய்ய ராஜ­பக்­சக்கள் செய்த பணி­களை எடுத்துக் கூறுவர். நிபுண ரண­வக்க ஒரு கனிஷ்ட உறுப்­பினர் என்­பதால் மட்­டுமே இன்னும் அமைச்சுப் பொறுப்புப் பெறாமல் இருக்­கிறார். ஆயினும் கோட்­டா­பய அவ­ருக்கு மாத்­தறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத் தலைவர் பத­வியை வழங்­கி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­காத ராஜ­பக்­ச­களும் அதி­கார சங்­கி­லியின் வளை­யங்­க­ளா­கவே உள்­ளனர். யோசித்த ராஜ­பக்ச பிர­த­மரின் அலு­வ­லக ஆளணித் தலைமை அதி­கா­ரி­யாக உள்ளார். குரு­நாகல் மாவட்­டத்தில் மகிந்­தவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி சகல அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளையும் செய்­பவர் கடைக்­குட்டி ரோஹித்த ராஜ­பக்ச ஆவார். எந்த ஒரு தேர்­த­லிலும் அவர் தந்­தையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி குரு­நாகல் மாவட்­டத்­தி­லி­ருந்து வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அதன்­படி ராஜ­பக்ச தயார் நிலை­யி­லேயே உள்­ளது.

2015 இல் ராஜ­பக்­சாக்­களின் குடும்ப அர­சி­யலை விமர்­சித்துக் கொண்டு ஆட்­சி­பீடம் ஏறிய மைத்­தி­ரி­பால சிறி­சேன டெலிகொம் தலை­வ­ராக தனது தம்­பியை நிய­மித்தார். சிறி­சே­னவின் மகள் சது­ரிக்கா அரசு பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டா­விட்­டாலும் அவ­ரது கணவர் ஆரம்­பித்த ‘நெட் சிரி’ விளம்­பர நிறு­வ­னத்­திற்கு அர­சாங்­கத்தின் பூரண அனு­ச­ர­ணையைப் பெற்­றுக்­கொ­டுத்தார். அனைத்து அரசு நிறு­வ­னங்­க­ளி­னதும் விளம்­ப­ரங்கள் அந்த கம்­பெ­னிக்கே கிடைத்­தன. ஜனா­தி­ப­தியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அரச வைப­வங்­களில் கூட பங்­கு­பற்றும் அள­வுக்கு சது­ரிக்கா செல்­வாக்கு பெற்­றி­ருந்தார். பொலன்­ன­று­வையில் உள்ள அவ­ரது ‘திதஸ் அரண’ ஹோட்­ட­லுக்கு அவ­ரது பெய­ரி­லேயே மது­பான விற்­பனை அனு­ம­திப்­பத்­திரம் பெறப்­பட்­டது. மைத்­தி­ரி­பால சிறி­சேன பெண்கள் மது வியா­பா­ரத்தில் ஈடு­படக் கூடா­தென்று வேறு கூறி வந்தார்.

ஆனாலும் ராஜ­பக்ச குடும்­பத்­துக்­கான பங்­கீட்­டுடன் ஒப்­பி­டும்­போது சிறி­சே­னவின் பங்­கீடு மிகவும் அற்­ப­மா­னதும் புறக்­க­ணிக்க கூடி­ய­து­மாகும்.

ராஜ­பக்ச மானிய முறை ஆட்சி 2005 இல் ஆரம்­ப­மா­னது. அது அவர் முதற் தடவை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டது முத­லாகும். பத­விக்கு வந்து இரண்டு நாட்­களில் அமெ­ரிக்கப் பிர­ஜை­யான கோட்­டா­ப­யவை அழைத்து இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கி குடும்ப ஆட்சி வாரி­சு­ரி­மையை ஆரம்­பித்து வைத்தார்.

இன்று இலங்கை ஜன­நா­யகத் தன்­மைக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மற்ற ஒரு நிலையில் இருப்­ப­தற்­கான சில கார­ணங்­களை முன்­வைக்­கலாம்.

முத­லா­வது, ஓர் அர­சாங்­கத்தில் அவ­சியம் இருக்க வேண்­டிய சட்ட ஆட்­சிக்கு அப்­பாற்­பட்ட ஒரு குடும்ப ஆட்சி இருப்­ப­தாகும். பிரான்ஸ் அறிஞர் மொண்­டஸ்­கி­யூவின் கருத்து இங்கு குறிப்­பிட வேண்­டி­ய­தொன்­றாகும் “நாட்டின் சட்­ட­மி­யற்றும், நிறை­வேற்று நிர்­வா­கிக்கும், நீதி வழங்கும் அதி­காரம் தனி ஒரு­வ­ரி­டமோ (ஒரு குடும்­பத்­தி­டமோ) ஒரு குழு­வி­டமோ மையப்­ப­டுத்­தப்­படின் அனைத்து விட­யங்­களும் நாச­மாகி போகும்” அவரின் கூற்று இலங்கை விட­யத்தில் இன்று ஒப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இரண்­டா­வது விடயம் சார்­ப­ளவில் விசா­ல­மான ராஜ­பக்ச குடும்­பத்தின் ஆதிக்­கத்­தி­னரின் கீழ் முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகையில் ஊழல், மோசடி, களவு, கொள்ளை, சட்­டத்­தினால் குற்­ற­வா­ளிகள் பாது­காக்­கப்­படல் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய ஒரு நாடாக இலங்கை மாறி­யுள்­ளது. இந்த பாதிப்பு உச்ச நிலையை அடைந்­தி­ருப்­பது ராஜ­பக்ச குடும்­பத்தின் அதிக எண்­ணிக்­கை­யி­னரும் மற்றும் இரண்­டா­வது பரம்­ப­ரை­யி­னரும் பத­வி­களில் நீடித்­துள்ள நிலை­மையின் கார­ணத்­தி­னா­லாகும். இதற்­கான காரணம் அரச பொறி­மு­றையில் ராஜ­பக்­சக்­களின் கரங்­களை நுழைப்­பது இல­கு­வா­யுள்­ளதே.

மூன்­றா­வது, ராஜ­பக்­சக்கள் தம் இஷ்­டப்­படி முன்­னெ­டுக்கும் தொடர்ந்தும் விரி­வ­டைந்து செல்­வ­து­மான சிங்­கள பௌத்த தேசி­ய­வாத கொள்கை நாடு­பூ­ரா­கவும் தடை­யின்றிப் பர­வி­யுள்­ள­மை­யாகும். இதனால் இன்று சிங்­க­ள-­பௌத்த பெரும்­பான்மை பலத்தை ஏற்­றுக்­கொள்ளும், அதனைப் பாது­காக்கும் கொள்­கையில் மொட்டுக் கட்­சி­யல்­லாத இட­து­சாரிப் பின்­ன­ணி­யி­லுள்ள மற்றும் வல­து­சாரிப் பின்­ன­ணி­யுள்ள கட்­சி­களும் பிரித்­தெ­டுக்க முடி­யா­த­படி ஒட்டிக் கொண்­டுள்­ளமை தெரி­கி­றது. ராஜ­பக்­சவின் அர­சி­யலை முடி­வுக்குக் கொண்டு வந்­தாலும் அவர்­களால் இந்த நாட்டில் விதைக்­கப்­பட்­டுள்ள இன­வாதக் கருத்­தி­யல்பைத் தோற்­க­டிப்­பது இல­கு­வா­ன­தாக இல்லை. குறைந்­த­பட்சம் இன்னும் ஓரிரு தசாப்­தங்­க­ளுக்கு அதனை இல­குவில் அகற்ற முடி­யாது.

மஹிந்த ராஜ­பக்ச மொத்த ராஜ­ப­க்ஷாக்­க­ளுக்­கி­டையில் ஜொலிக்கும் ஒரு நட்­சத்­தி­ர­மாக இருப்­ப­துடன் ராஜ­பக்­சாக்­க­ளையும் அது­வல்­லா­த­வர்­க­ளையும் ஒன்­றாக இணைக்கும் ஒரு மாலை போன்றும் உள்ளார். இப்­போது அவரின் அர­சியல் பயணம் தீர்க்­க­மான ஒரு கட்­டத்­துக்கு வந்­துள்­ளது. முப்­ப­தாண்டு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்து பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டைப் பாது­காத்த தலைவர் என்ற வகையில் அவ­ருக்கு அனை­வரும் நிபந்­த­னை­யின்றி கௌரவம் வழங்­கி­யது எனின் அந்த கௌர­வத்­துக்கு நிக­ராக ஒரு நாடு செலுத்­தக்­கூ­டிய அதிக கூடிய விலையை அள­வுக்கு அதி­க­மா­கவே செலுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நன்றி செலுத்தும் வகையில் அள­வில்லா ஊழல் நிறைந்த ராஜ­பக்ச குடும்­பத்­தினர் விதித்த நிபந்­த­னை­களைச் சகித்துக் கொண்­டி­ருக்க வேண்­டிய நிலை இந்த நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்­ளது.

ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரில் மக்­க­ளுக்கு சேவை செய்த விட­யத்தில் அடுத்த இடம் கோத்­த­பா­ய­வுக்கு வழங்­கப்­பட வேண்டும். வேறு யாரும் அந்தப் பட்­டி­யலில் வர­மு­டி­யாது ஆனால் இப்­போது கோட்­டா­பய ராஜ­பக்ச தனது இய­லா­மையை ஒப்­பு­வித்த நிலை­யி­லேயே உள்ளார். 2024 உடன் அவ­ரு­டைய ஆட்­சியும் முடி­வுக்கு வந்­து­விடும். வயோ­திப ஓய்வு நிலையை கழிக்க அவர் அமெ­ரிக்­காவை தேர்ந்­தெ­டுப்பார். எனவே அதன் பின்னர் தூக்கி வைத்துக் கொண்­டாட எந்த ராஜ­பக்­சக்­களும் இல்லை. எனவே ராஜ­பக்­சக்கள் அல்­லாத அர­சியல் தலை­மைகள் இந்­நாட்டில் இனங்­கா­ணப்­பட வேண்டும். அந்தப் பொறுப்பு முழு­மை­யாக மக்­களைச் சார்ந்­தது என்­றாலும் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியும் அத­னுடன் இணைந்­துள்ள கட்­சி­களும் இந்த விட­யத்தில் வகை கூற வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். மஹிந்த ராஜ­பக்ச அர­சி­யலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தினேஷ் குண­வர்­தன போன்ற ஒரு பிர­தமர் அல்­லது வாசு­தேவ நாண­யக்­கார போன்­றோரை முன் நிறுத்­து­வ­தற்கு மொட்டு கட்­சி­யினர் முயற்­சிக்க வேண்­டி­யுள்­ளது. அந்தப் பரம்­ப­ரையில் உள்ள பேரா­சி­ரியர் ஜி.எல் பீரிஸ், நிமல் சிறி­பால டி சில்வா, ஜனக பண்­டார தென்­னகோன், பந்­துல குண­வர்­தன, மஹிந்த யாப்பா அபே­வர்­தன போன்றோர் மொட்டு அர­சி­யலின் தலைமைத்துவத்திற்குத் தீண்டத் தகாதவர்களா? அடுத்த பரம்பரையினரான விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறக் கூடாதா? நாமல் ராஜபக்ச, சசிந்திர ராஜபக்ச, நிபுண ரணவக்க போன்றவர்களுக்கு தங்களது அரசியல் அர்ப்பணிப்புகளாலன்றி ராஜபக்சாக்கள் என்பதற்காக மட்டும் கட்சியில் முதன்மை கிடைக்காது என்பதை எடுத்துச் சொல்வதற்கு மொட்டு அரசியல் தலைமைக்கு ஏன் முடியாது?

விமர்­ச­னங்கள் பல இருந்­தாலும் விமல் வீர­வன்ச, டலஸ் அழ­கப்­பெ­ரும, உதய கம்­மன்­பில போன்றோர் தங்­களின் முயற்­சியால் மற்றும் அர்ப்­ப­ணிப்பால் அர­சியல் செய்­த­வர்கள். பசில், சமல், நாமல், சசீந்­தர போன்­றோ­ருடன் ஒப்­பி­டும்­போது முன்­னை­ய­வர்கள் நீண்ட தூரம் முன்­னே­றி­யுள்­ளார்கள் என்­பதே உண்மை. ஆயினும் ராஜ­பக்ச வம்ச வழி­பாடு கார­ண­மாக வீர­வன்ச போன்­றோ­ருக்கு மொட்டு அர­சி­யலில் முன் ஆச­னங்கள் கிடைக்க வாய்ப்­பில்லை. இந்த நிலையை தொடர்ந்தும் சகித்துக் கொண்­டி­ருக்க வேண்­டுமா? அல்­லது ராஜ­பக்ஷ அதி­கார வாதத்தை உடைத்து மொட்டு அர­சி­யலின் எதிர்­கா­லத்தை தம் கைக­ளுக்கு எடுத்துக் கொள்­வதா? என்ற கேள்­வியை விமல், டளஸ் போன்­றோ­ரிடம் கேட்க வேண்­டிய காலம் உத­ய­மா­கி­யுள்­ளது.

இன்­றைய இலங்கை அர­சி­யலில் இரண்டு பொதுப் பண்­புகள் காணப்­ப­டு­கின்­றன. ஒன்று எழு­பது வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கையை மீட்­டெ­டுப்­ப­தாகும். இரண்­டா­வது இல­வச கல்­வி­யி­லி­ருந்து பயன்­பெற்று அடி­மட்­டத்­தி­லி­ருந்து அர­சியல் செய்து முன் நோக்கி வந்­து­கொண்­டி­ருக்கும் இளை­ஞர்­க­ளான புதிய அர­சியல் தலை­வர்­க­ளுக்குப் பொறுப்­பு­களை வழங்­கு­வ­தாகும். இந்த இரு சவால்கள் குறித்தும் இந்த சந்தர்ப்பத்தில் மொட்டு கட்சியும் அதன் இணை தரப்பினரும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.