மட்டு. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை : 2009 இல் அமீர் அலி பாராளுமன்றில் பேசியது என்ன?

0 465

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணி­யில்லாப் பிரச்­சி­னையைப் பற்­றியும் காணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்ள பிரச்­சி­னை­களைப் பற்­றியும் இதற்கு முன்­னரும் அக்­க­றை­யுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்­துள்­ளார்கள்.

கிழக்கு மாகாண காணிகள் தொடர்­பாக தமிழர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற குழுத் தலைவர் ஆர். சம்­பந்தன் 2009.10.23 அன்று நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த பிரே­ர­ணை­யின்­போது அப்­போ­தைய இடர் நிவா­ரண சேவைகள் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீ­ரலி கிழக்கில் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணிப் பிரச்­சி­னைகள் சம்­பந்­த­மாக விரி­வாகப் பேசினார்.
அமீ­ர­லியின் நாடா­ளு­மன்ற உரை இந்த வாரம் நோக்­குவோம்.

“இன்று இந்த சபை­யிலே நான் மிகவும் கௌர­வ­மாக மதிக்­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகா­ணத்தில் அரச காணி­க­ளிலே சட்ட விரோ­த­மாகக் குடி­யே­றி­யி­ருக்­கின்­ற­வர்­களை வெளி­யேற்­று­வது சம்­பந்­த­மாக அத­னோடு சேர்ந்த பல கேள்­வி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக ஒத்­தி­வைப்புப் பிரே­ர­ணையில் இங்கு அவரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிகழ்­விலே நாங்கள் பேசிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

அந்தக் கேள்­வி­க­ளுக்கு பதில் கொடுப்­ப­தற்கு முன்­பாக கடந்த கால ஆரம்ப விட­யங்கள் பிரச்­சி­னைகள் சம்­பந்­த­மா­கவும் சற்று நான் பேச வேண்­டிய தேவைப்­பாடு இருக்­கின்­றது.
கௌரவ சம்­பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகா­ணத்­திலே அரச காணி­களில் சட்­ட­வி­ரோ­த­மாகக் குடி­யே­றி­யி­ருக்­கின்­ற­வர்கள் வெளி­யேற வேண்டும் என்­கின்ற பிரே­ர­ணை­யிலே மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே சட்­ட­பூர்­வ­மான ஆதா­ரங்­க­ளோடு இருக்­கின்­ற­வர்­க­ளுக்­கு­ரிய காணி உட­ன­டி­யாக வழங்­கப்­பட வேண்டும் அல்­லது அதற்குத் தடை­யாக இருக்­கின்­ற­வர்கள் அதை உட­ன­டி­யாக செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி­யி­ருப்­பா­ரென்றால் நான் சந்­தோ­ச­டைந்­தி­ருப்பேன்.

கடந்த காலங்­க­ளிலே என்­னு­டைய பாரா­ளு­மன்றப் பேச்­சுக்­க­ளிலே நான் தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றேன், விஷே­ட­மாக கிழக்கு மாகா­ணத்­திலே இந்தப் பிரச்­சினை நீறு­பூத்த நெருப்­பாக ஒவ்­வொரு பிர­தே­சங்­க­ளிலும் அந்­தந்தக் கால கட்­டங்­க­ளிலே இருப்­பதை நாங்கள் கண்டு கொண்டோம்.

விஷே­ட­மாக தமிழ் முஸ்லிம் எல்லைக் கிரா­மங்­க­ளிலே இந்தப் பிரச்­சினை பூதா­கா­ர­மாக நீண்­ட­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது. இதை நாம் ஏன் இன்னும் முடி­வுக்குக் கொண்டு வராமல் தக்­க­வைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதில் எனக்கு ஒப்­புதல் கிடை­யாது.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தி­யிலே பல தடவை என்­னு­டைய பாரா­ளு­மன்ற உரை­யிலே நான் தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றேன். நாங்கள் சமூக ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்குப் பேச­வந்த அர­சியல் தலை­வர்கள்.

எங்­க­ளுக்­குள்ளே ஒரு உடன்­பாடு கண்டு கொள்­ளாத நிலையில் அல்­லது அந்தப் பிராந்­தி­யத்­திலே இருக்­கின்ற நிலம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னை­களைத் தீர்­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு ஏதா­வ­தொரு முயற்சி எடுக்­காத வரையில் நிச்­ச­ய­மாக இனங்­க­ளுக்­கி­டை­யிலே ஒற்­று­மையைக் கொண்டு வர­மு­டி­யாது.

நாங்கள் தெளி­வாகக் கூறினோம் அந்த நாட்­க­ளிலே அந்தப் பிர­தே­சங்­க­ளிலே இருந்த விடு­தலைப் புலி­க­ளினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­பொ­ழுது விஷே­ட­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அங்கு விவ­சாயச் செய்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் விவ­சா­யிகள் விவ­சாயம் செய்ய முடி­யாது பாதிக்­கப்­பட்­டார்கள்.
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்கள் செய்கை பண்­ணப்­ப­டாமல் விடு­தலைப் புலி­க­ளினால் பல­வந்­த­மாக செய்கை பண்­ணப்­பட்­டது. அந்தக் கால­கட்­டத்­திலும் கூட இந்தச் சபை­யிலும் பிர­தேச அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் இது விட­ய­மாக எல்லை ரீதி­யான ஒரு தீர்க்­க­மான முடி­வினை நாங்கள் எடுக்­க­வில்லை என்று சொன்னால் எதிர்­கா­லத்தில் இந்தப் பிர­தே­சத்தில் ஒரு நிம்­ம­தி­யான சூழ்நிலை இந்த இரு சமூ­கங்­க­ளுக்கு மத்­தி­யிலும் உரு­வா­காது என்று நான் தெளி­வா­கவும் அழுத்­த­மா­கவும் கூறி­யி­ருக்­கின்றேன்.
இவற்­றுக்­கெல்லாம் அப்­பாலும் பிராந்­தி­யத்­திலே இருக்­கின்ற அர­சியல் தலை­வர்கள் கடந்த காலத்­திலே தவ­றி­ழைத்து விட்­டார்கள்.

எதிர்­கா­லத்­திலும் அவ்­வாறு பிழை விடக் கூடாது என்­ப­துதான் என் பிரார்த்­தனை.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைப் பொறுத்த வரை­யிலே அது 2600 சதுர மைல்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. ஆனால் அங்கே மூன்­றி­லொரு பங்­கி­ன­ராக வாழ்­கின்ற முஸ்லிம் சமூகம் 26 சதுர மைல்­க­ளுக்குள் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்
சம்­பந்தன் ஐயா இந்த விட­யத்­தையும் அவ­ரது ஒத்தி வைப்புப் பிரே­ர­ணை­யிலே செரு­கி­யி­ருப்­பா­ரென்றால் அந்தப் பிராந்­தி­யத்­திலே பாதிக்­கப்­பட்ட நிலையில் வாழ்­கின்ற மக்கள் சந்­தோ­சப்­பட்­டி­ருப்­பார்கள்.

2600 சதுர மைல்­களைக் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே மூன்­றி­லொரு பங்­காக வாழ்­கின்ற முஸ்லிம் சமூகம் 26 சதுர மைல்­க­ளுக்குள் வாழ்­கின்­றார்­க­ளென்று சொன்னால் அவர்கள் எவ்­வ­ளவு கஸ்­டத்­தோடும் பிரச்­சி­னை­யோடும் வாழ்­வார்கள் என்­பதை இந்த சபை சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

கிழக்கு மாகா­ணத்­திலே முஸ்லிம் பிர­தே­சங்­களில் வாழ்­கின்ற 31 வய­திற்கும் 41 வய­திற்கும் இடைப்­பட்ட பெண்­க­ளுக்கு புற்­றுநோய் வியாதி வரு­வ­தாக ஒரு புதிய மருத்­துவ ஆய்­வொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நெருக்­க­மான சன அடர்த்தி மிக்­க­தொரு சூழலுக்குள் வாழ்­கின்ற நிலையில். ஒரு வீட்­டு­ரி­மை­யா­ளரின் கிணறு உள்ள அதே­பக்­கத்தில் அண்டை வீட்­டாரின் மல­சல கூடக் குழி இருக்­கின்­றது. இந்த அவ­லத்தை முஸ்லிம் சமூகம் விலை கொடுத்து வாங்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் குறிப்­பி­டப்­பட்ட எல்லை ரீதி­யான கோடு இன்னும் வெளிப்­ப­டை­யாக வராமல் இருக்­கின்ற ஒரு கவ­லை­யான விடயம்.

வாகரைப் பிர­தேசம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே பிர­மாண்­ட­மான நிலப்­ப­ரப்பைக் கொண்­டது. ஆனால் அங்கு வாழ்ந்த முஸ்­லிம்கள் காணி­யில்­லாமல் விரட்­டப்­பட்­டுள்­ளார்கள்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே இருக்­கின்ற ஒரு சில அதி­கா­ரி­களின் செயற்­பா­டு­க­ளாலும் அந்தப் பிராந்­தி­யத்­திலே இருக்­கின்ற புலிகள் இயக்­கத்­தி­னு­டைய எச்ச சொச்­சங்­களின் நட­வ­டிக்­கையின் அடிப்­ப­டை­யிலும் இன்னும் முஸ்லிம் பிர­தேச நிரு­வாக உரி­மைகள் முஸ்லிம் மக்­க­ளுக்குக் கொடுக்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.
கோற­ளைப்­பற்று மத்­தி­யென்று முஸ்லிம் மக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் கோற­ளைப்­பற்று தெற்கு கிரான் என்று தமிழ் மக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இரண்டு பிர­தேச செய­லகப் பிரி­வுகள் 2002.05.24ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்­டன.

அன்­றைய பிர­தேச செய­லகப் பிரிப்­போடு ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகப் பிரி­வி­லி­ருந்த பெறு­ம­தி­யான 5 கிராம அலு­வலர் பிரி­வுகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட கிரான் பிர­தேச செய­லகப் பிரி­வோடு இணைக்­கப்­பட்­டதன் விளை­வாக இப்­பொ­ழுது அந்தப் பகு­தி­யிலே வாழ்­கின்ற முஸ்லிம் மக்கள் ஒரு கிலோ­மீற்­ற­ருக்குள் இருக்­கின்ற ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­ல­கத்தை விட்டு விட்டு 13 கிலோ­மீற்­றர்­க­ளுக்­கப்பால் இருக்­கின்ற கிரான் பிர­தேச செய­ல­கத்­திற்குச் சென்று தமது அலு­வல்­க­ளுக்­காக அலைய வேண்டி நேரிட்­டுள்­ளது.
அவர்­க­ளது வயல் நிலங்கள் இன்னும் அவர்கள் வசம் ஒப்­ப­டைக்­கப்­ப­டாத ஒரு கேவ­ல­மான நிகழ்வு இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது.

வாகரைப் பிர­தே­சத்­திற்­குள்ளே பூர்­வீ­க­மாக இருக்­கின்ற முஸ்லிம் விவ­சாய சமூ­கத்தின் காணிகள் அவர்­க­ளிடம் போதி­ய­ளவு ஆவ­ணங்கள் இருந்தும் இன்னும் அவர்­க­ளுக்கு மீளக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

மது­ரங்­கேணிக் குளம் பகு­தி­யிலே என்­னு­டைய தகப்­பனின் பேரால் எனக்குச் சொந்­த­மான காணி உள்­ளது.

அங்கு ஒரு முஸ்லிம் பாட­சாலை பள்­ளி­வாசல் எல்லாம் இருந்­தன. ஆனால் அவை­யெல்­லா­வற்­றையும் அழித்­தொ­ழித்து விட்­டார்கள்.

முஸ்­லிம்­களின் பூர்­வீக இடங்­க­ளிலே தமிழ் மக்­க­ளுக்கு இப்­பொ­ழுது வீடுகள் கட்டிக் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள்.

தமிழ் மக்­க­ளுக்கு வாழ்­விடம் அமைத்துக் கொடுக்கக் கூடாது என்று நான் சொல்­ல­வில்லை.

அர­சாங்க நிதி­ய­ளிப்பின் மூலம் இடம்­பெறும் இந்த மீள் குடி­யேற்ற வேலைத் திட்­டங்­களில் அங்கு முஸ்லிம் மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வ­து­பற்றி சம்­பந்தன் ஐயா அவர்கள் அவ­ரது பிரே­ர­ணையில் ஒரு வார்த்தை சேர்த்­தி­ருக்க வேண்டும்.
அந்தப் பிர­தே­சத்­திலே 1985ஆம் ஆண்­டுக்கு முன்­பாக நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்­களின் பெயர்கள் வாக்­காளர் பட்­டி­ய­லிலே இருந்­தன. அப்­ப­டி­யி­ருந்தும் அவர்கள் அங்கு மீளத் திரும்­பு­வ­தற்கு தமிழ் சமூகம் இன்னும் அனு­ம­திக்­க­வில்லை.
இது முஸ்லிம் சமூ­கத்­திற்கு இழைக்­கப்­ப­டு­கின்ற மாபெ­ரிய துரோ­கமும் அநி­யா­ய­மு­மாகும்.

இவ்­வாறே தொடர்ந்து பேசிக்­கொண்டே செல்லக் கூடிய நிலைமை இருந்தால் நிச்­ச­ய­மாக அது விடிவைக் காண முடி­யாத ஆரோக்­கி­ய­மில்­லாத சூழலை ஏற்­ப­டுத்தும்.
முஸ்­லிம்­களின் காணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் தம் வசம் வைத்­தி­ருந்த ஆவ­ணங்­களைக் கூட கைப்­பற்றி அழித்­தொ­ழித்து விட்­டார்கள்.

இந்த மாவட்­டத்­திலே ஒரு நல்ல சூழலை உரு­வாக்க ஒத்­து­ழைப்பு வழங்­குங்கள் என்று மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தங்­கேஸ்­வரி அம்மா, கன­க­சபை ஐயா எல்­லோரும் இருக்­கத்­தக்­க­தாக இந்த சபை­யிலே பல தட­வைகள் நான் கூறி­யி­ருக்­கின்றேன்.
83ஆம் ஆண்­டுக்கு முன்பு இரண்டு சமூ­கங்­களும் எவ்­வ­ளவு ஐக்­கி­ய­மாக வாழ்ந்­தார்கள். அதே ஐக்­கி­யத்தை நாங்கள் மீண்டும் கொண்டு வர­வேண்­டு­மென்று சொல்­கின்றேன்.
அந்தப் பிராந்­தி­யத்­திலே இருக்­கின்ற இரண்டு சமூ­கங்­களும் நிம்­ம­தி­யாக வாழ­வேண்டும் என்­ப­தற்­காக அர­சி­யல்­வா­தி­களின் அர­சியல் தேவை­க­ளுக்கும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கும் அப்பால் நின்று நாங்கள் இதற்கு ஏதே­னு­மொரு வடி­வத்தில் தீர்வு கண்டு கொடுக்க வேண்டும்.

அவ்­வாறு நாம் செய்­ய­வில்­லை­யென்றால் இதே பாரா­ளு­மன்­றத்­திலே தொடர்ந்­தேர்ச்­சை­யாக சம்­பந்தன் ஐயாவும் அமீ­ர­லியும் அதன் பின்­பாக வரக்­கூ­டிய வேறு தலை­வர்­களும் இதைப்­பற்றிப் பேசிக் கொண்டு செல்­வார்­களே தவிர பிரச்­சி­னைக்கு ஒரு­போதும் முடிவு கிட்­டாது.

இந்தப் பிரச்­சி­னைக்கு மிகவும் இல­கு­வாகத் தீர்வு காணலாம். இதை கொடுங்கள் அல்­லது கொடுக்கக் கூடாது என்று அர­சாங்­கமோ அர­சாங்­கத்­தி­லுள்ள பிர­தி­நி­தி­களோ எந்­த­வித அழுத்­தமும் தெரி­விக்­க­வில்லை.
இரண்டு சமூ­கத்­திற்­கு­மி­டைப்­பட்ட பிரச்­சினை இப்­பொ­ழுது அங்கு பூதா­கா­ர­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது.

தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்­பி­டியும் விவ­சா­யத்­தையும் வாழ்­வா­தா­ர­மாகக் கொண்­ட­வர்கள்.

தமி­ழர்கள் முஸ்­லிம்கள் சிங்­க­ளவர் என்­றில்­லாமல் விவ­சா­யி­களும் மீனவர் சமூ­கமும் மற்­று­மள்­ள­வர்­களும் மேம்­பாடு அடைய வேண்டும் என்று கனவு காண்­ப­வர்­களில் நானும் ஒருவன்.

வாழைச்­சே­னை­யிலே சங்­கத்துக் கொலனி என்­கின்ற ஒரு பிர­தேசம் இருக்­கின்­றது. அங்கு 59 முஸ்லிம் குடும்­பங்கள் காலங்­கா­ல­மாக அவர்­க­ளு­டைய உறுதிக் காணி­ளோடு வாழ்ந்து வந்­தார்கள்.

ஆனால் அந்தப் பிர­தே­சத்து மக்கள் இப்­பொ­ழுது அங்கே செல்ல முடி­யா­த­வாறு தமிழ் மக்கள் அவர்­க­ளது காணி­களை ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றார்கள்.
பிர­தேச மக்கள் நிம்­ம­தி­யாக வாழ­வேண்டும் என்­ப­தற்­காக நான் உங்­க­ளிடம் இதை மன்­றாட்­ட­மாகக் கேட்டுக் கொள்­கின்றேன்.

பிர­தே­சத்­திலே இருக்­கின்ற அர­சி­யல்­வா­திகள் அதன் தலை­வர்கள் இந்த விட­யம்­பற்றி எதிர்­கா­லத்­திலே நீங்கள் அவர அவ­ச­ர­மாக ஒரு தீர்வைத் நீங்­களே தேடித் தர­வேண்டும்.
பாதிக்­கப்­பட்ட சமூகம் யாராக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது­மாத்­தி­ர­மல்­லாமல் தமிழ் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் உரிமை எல்லாம் கிடைக்­கப்­பெற வேண்டும் என்­ப­திலும் எங்­க­ளுக்கு உடன்­பாடு அதி­க­மி­ருக்­கின்­றது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எங்­க­ளிடம் கிடை­யாது.

இரண்டு சமூ­கங்­களின் குறை­பா­டுகள் என்ன என்று அவர்கள் வாழும் எல்­லை­க­ளுக்குச் சென்று ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும். அந்த சமூகங்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
இதை சம்பந்தன் ஐயா அவர்கள் உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் செய்ய முடியுமென்று சொன்னால் இந்த அரசியல் வாழ்வில் அது ஒரு இமாலய சாதனை­யாக இருக்கும்

வாகரை கிரான் ஆகிய பிர­தே­சங்­க­ளிலே இருக்­கின்ற முஸ்லிம் மக்­க­ளு­டைய காணி வயல் பிரச்­சினை இதே­போன்று காத்­தான்­குடி ஏறாவூர் கல்­குடா பிர­தே­சங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மக்­க­ளுக்­கு­ரிய காணிப் பிரச்­சி­னைகள் ஏராளம் இருக்­கின்­றன.

மட்­டக்­க­ளப்பில் வாழும் எல்லா முஸ்லிம் பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள எல்லா முஸ்­லிம்­க­ளுக்கும் காணிப் பிரச்­சினை உள்­ளது. அதனை நியா­ய­மாகத் தீர்ப்­ப­தற்கு எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­க­ளையும் எடுக்க அர­சியல் தலை­மைகள் தவ­றி­விட்­டன.
அதன் கார­ண­மா­கத்தான் இப்­பொ­ழுதும் இனி­வரும் காலங்­க­ளிலும் நாங்கள் இதைப்­பற்றிப் பேச வேண்­டிய நிலை­யுள்­ளது.

எப்­பொ­ழுது யார் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­பது? இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்கத் தனி­யொ­ருத்­த­னாக முயற்­சிக்­கின்­ற­பொ­ழுது அங்கே இனத்­து­வேஷம் பேசப்­ப­டு­கின்­றது.
எனவே மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே பெரும்­பான்மை சமூ­க­மாக இருக்­கின்ற நீங்கள் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதன் மூலம்தான் சக­வாழ்வை உரு­வாக்க முடியும்.

(மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் வரும் வாரமும் வரும்)

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.