முஸ்லிம் சமூகம் விட்டுக் கொடுப்பு சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டும்

உலமா சபையின் தலைவர்

0 436

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்­லிம்­க­ளிடம் விட்­டுக்­கொ­டுப்­பு­களும், சகிப்­புத்­தன்­மையும் இருக்க வேண்டும். எல்­லோரும் ஒற்­று­மைப்­ப­ட­வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் விட்­டுக்­கொ­டுப்­புடன் மற்­ற­வர்­களை மதித்து நடக்­க­வேண்டும்.

குர்ஆன் பிற மதங்­களை நிந்­திக்­கக்­கூ­டாது என எச்­ச­ரித்­துள்­ளது. உலமா சபை எப்­போதும் ஒரு கூட்­டான சபை­யாக எல்­லோ­ரு­டைய கருத்­தையும் உள்­வாங்கி இந்­நாட்­டுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பொருத்­த­மான சில வழி­காட்­டல்­களை முன்­வைத்­துள்­ளது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கொழும்பு சாஹிரா கல்­லூ­ரியின் கபூர் மண்­ட­பத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஊடக மாநா­டொன்­றினை நடத்­தி­யது. ஊடக மாநாட்டில் மார்க்க விவ­கா­ரங்­களில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிலைப்­பாடும் வழி­காட்­டல்­களும் (மன்ஹஜ்) அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டது.

உலமா சபையின் தலைவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘நாட்டின் உல­மாக்கள் ஒன்­று­பட்டு இந்­நாட்டின் முஸ்­லிம்கள்  ஏனைய மக்­க­ளுடன் எப்­படி ஒன்று கூடி வாழ வேண்டும் என்­ப­தற்­கான அழ­கான வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளார்கள்.
முஸ்­லிம்கள் வாழ்ந்த காலங்­களில் எப்­போ­துமே இஸ்­லா­மிய அடை­யா­ளங்­களை, அல்­லாஹ்­வு­டைய அத்­தாட்­சி­களை பாது­காக்கக் கூடி­ய­வர்­க­ளாக உல­மாக்கள் இருந்து வந்­துள்­ளார்கள். 1924 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட உலமா சபை­யினால் இந்­நாட்டு முஸ்­லிம்கள் வழி நடாத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறி­யது போன்று நாம் ஒரு சமூகம். அல்லாஹ் பல சிறப்­பு­களை எமக்கு வைத்­தி­ருக்­கிறான். நபி­களின் வழி­காட்­டல்கள் படி சமூகம் செயற்­ப­டும்­போது நல்ல ஈடேற்­றத்தை அடைய முடியும். எப்­போதும் நபி­களின் போதனை அப்­ப­டியே அமைந்­தி­ருக்­கின்­றது. ‘மன்ஹஜ் ஒவ்­வொரு வீட்­டிலும் விளங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். பிற­ம­தத்­த­வர்­க­ளிடம் இந்த விளக்­கங்கள் செல்ல வேண்டும்’ என்றார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித் உரை­யாற்­று­கையில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூகம் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. நாம் கட்­டுக்­கோப்­பான சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒன்று பட­வேண்டும். முஸ்­லிம்கள் சமூக,சமய விவ­கா­ரங்­களில் எவ்­வாறு நடந்து கொள்­ள­வேண்டும் என்­ப­தற்­காக உல­மாக்கள், புத்தி ஜீவிகள், சட்­டத்­த­ர­ணிகள் போன்றோரின் கருத்துகளை உள்வாங்கி வழிகாட்டல்கள் ஆவணமாக்கப்பட்டுள்ளன. இதுவே மன்ஹஜ் பிரகடனமாகும்.

எமக்குள் பிரச்சினைகள் உருவானால் நாம் அவற்றை எமக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.