கல்வி, சமூகப் பணிகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.அமீன்

0 333

(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஓய்­வு­பெற்ற கோட்டக் கல்விப் பணிப்­பா­ளரும் நிந்­தவூர் பிர­தே­சத்தின் ஆரம்­ப­கால ஊட­க­வி­ய­லா­ளரும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான கலா­பூ­ஷணம் ஏ.எல்.எம்.அமீன், தனது 77ஆவது வயதில் கடந்த 18ஆம் திகதி கால­மானார்.

கல்வி, கலா­சாரம், கலை, இலக்­கியம் மற்றும் ஊடகம் என அனைத்து துறை­க­ளிலும் கோலோச்சி, தனது வாழ்­நாளை சமூ­கத்­திற்­கா­கவும் பிர­தேச முன்­னேற்­றத்­திற்­கா­கவும் முழு­மை­யாக அர்ப்­ப­ணித்­தி­ருந்த இச்­செயல் வீரரின் மறை­வா­னது இப்­பி­ராந்­தி­யத்­திற்கும் சமூ­கத்­திற்கும் பேரி­ழப்­பாக கரு­தப்­ப­டு­கி­றது.

கிழக்­கி­லங்­கையின் ஊட­கத்­துறை முன்­னோ­டி­யாகத் திகழ்ந்த இவர் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் வீர­கே­சரி, தின­பதி, சிந்­தா­மணி உள்­ளிட்ட தேசிய பத்­தி­ரி­கை­களின் பிராந்­திய செய்­தி­யா­ள­ராக நீண்ட காலம் பணி­யாற்­றி­யி­ருக்­கிறார். தற்­போது போன்று நவீன தொழில்­நுட்ப வச­திகள் எவையும் இல்­லாத காலத்தில் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் பிராந்­திய நடப்பு விவ­கா­ரங்கள் மற்றும் செய்­தி­களை பத்­தி­ரி­கைகள் ஊடாக மக்கள் முன் கொண்டு செல்­வ­தற்­காக தன்னை அர்ப்­ப­ணித்­தி­ருந்த ஓர் ஊடக ஜாம்­ப­வா­னாக இவர் நோக்­கப்­ப­டு­கிறார்.

இப்­பி­ராந்­தி­யத்தில் சம காலத்­திலும் தனக்குப் பின்­னரும் ஊட­கப்­ப­ணி­யாற்றக் கூடிய எழுத்­தார்­வ­முள்ள இளை­யோரை இனம் கண்டு அவர்­களை ஊட­கத்­து­றைக்குள் கொண்டு வரு­வ­திலும் இவர் கரி­சனை செலுத்­தி­யி­ருக்­கிறார்.

சிரேஷ்ட பத்­தி­ரி­கை­யாளர் கலா­பூ­ஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் செய்தித் தொடர்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய பத்­தி­ரி­கை­யாளர் ஏ.எல்.எம்.நயீம் ஆகியோர் இவ­ரது இளைய சகோ­த­ரர்கள் என்­பதும் இவர்கள் இரு­வரும் ஊட­கத்­து­றையில் பிர­வே­சிப்­ப­தற்கு மூத்த சகோ­த­ர­ரான ஏ.எல்.எம்.அமீன் அவர்­களே கால்­கோ­ளாக இருந்­துள்ளார் என்­பதும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

கல்வி மற்றும் ஊடக சேவை­க­ளுடன் இணைந்­த­தாக சமூக சேவை­க­ளிலும் இவர் கூடிய ஈடு­பாடு காட்டி வந்­துள்ளார். நிந்­தவூர் பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் செய­லா­ள­ராக இருந்து பள்­ளி­வாசல் பரி­பா­லனம் மற்றும் ஊர் நலன் சார்ந்த விட­யங்­களில் முக்­கிய பங்­காற்­றி­யுள்ளார். அவ்­வாறே நிந்­தவூர் பிர­தேச காதி நீதி­ப­தி­யாக கட­மை­யாற்­றிய காலப்­ப­கு­தியில் குடும்பப் பிணக்­கு­களை தீர்த்து வைப்­பதில் நீதி, நேர்மை, மனி­தா­பி­மானம் என்­ப­வற்­றுக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து, சமூக மட்­டத்தில் நற்­பெயர் பெற்­றி­ருக்­கிறார்.

பிர­தேச அபி­வி­ருத்தி, முன்­னேற்றம் என்­ப­வற்றில் எப்­போதும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்த மர்ஹூம் ஏ.எல்.எம்.அமீன், நிந்­தவூர் வௌவ்­வா­லோடை பிர­தே­சத்தில் மின்­சார வச­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நிந்­த­வூரில் குடி­நீ­ருக்­கான பாரிய குழாய் நீர் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் அவ­சியம் தேவைப்­பட்ட அடிப்­படை விட­யங்­களை முன்­னின்று செய்து கொடுத்து, அவை நிறை­வே­று­வ­தற்கு பின்­பு­ல­மாக இருந்து பங்­காற்­றி­யி­ருந்தார்.

நிந்­தவூர் மற்றும் காரை­தீவு பிர­தே­சங்­க­ளுக்­கான கோட்டக் கல்விப் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய காலப்­ப­கு­தியில் இப்­பி­ர­தேச பாட­சா­லை­களின் தேவை­களைப் பூர்த்தி செய்து கொடுப்­ப­தற்­காக சிறந்த அணு­கு­மு­றை­களை கையாண்­டி­ருந்தார். இதற்­கென அமைச்­சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அதி­கா­ரி­களின் ஒத்­து­ழைப்­புக்­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக தனது இயல்­பான இன்­மு­கத்­துடன் மென்­மை­யாக அணுகி, வெல்லும் வசீ­க­ரத்தை இவர் கொண்­டி­ருந்தார்.

ஆசி­ரி­ய­ராக, அதி­ப­ராக, கல்வி அதி­கா­ரி­யாக, பொது ஸ்தாப­னங்­களின் நிர்­வா­கி­யாக கட­மை­யாற்­றிய சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் தனக்குக் கீழ் பணி­யாற்­று­ப­வர்­க­ளையும் சரி, தனது மேல­தி­கா­ரி­க­ளையும் சரி, தன்­னக்­கே­யு­ரித்­தான வசீ­க­ர­மான நற்­கு­ணங்கள் மூலமே அனை­வ­ரதும் மனங்­களை வெற்றி கொண்டு காரி­ய­மாற்றும் வல்­ல­மையைக் கொண்­டி­ருந்தார். இதனால் முரண்­பா­டுகள் அற்ற நிர்­வாக முகா­மைத்­துவம் இவ­ரிடம் காணப்­பட்­டது. இதன் மூலம் பணிகள், சேவைகள் யாவும் சீராக முன்­ந­கர்ந்­தமை இவ­ரது தலை­மைத்­துவ சிறப்­பம்­ச­மாக காணப்­பட்­டது.

இஸ்­லா­மிய ஆசி­ரியர் சங்­கத்தின் கல்­முனை மாவட்ட கிளையின் செய­லா­ள­ரா­கவும் கல்வித் திணைக்­க­ளத்தின் கல்­முனை மாவட்ட கடன் வழங்கல் சபையின் உறுப்­பி­ன­ரா­கவும், நிந்­தவூர் பல­நோக்கு கூட்­டு­றவுச் சங்­கத்தின் இயக்­குனர் சபை உறுப்­பி­ன­ரா­கவும், நிந்­தவூர் வர்த்­தகர் சங்­கத்தின் செய­லா­ள­ரா­கவும், நிந்­தவூர் பிர­தேச ஓய்­வூ­தியர் சங்­கத்தின் தலை­வ­ரா­கவும், ஓய்­வூ­தியர் நம்­பிக்கை நிதி­யத்தின் அம்­பாறை மாவட்ட செய­லா­ள­ரா­கவும் முக்­கிய பொறுப்­பு­களை வகித்­துள்ளார்.

1965ஆம் ஆண்டு நிந்­தவூர் எழுத்­தாளர் சங்­கத்தின் உப தலை­வ­ராக செயற்­பட்ட இவர், தமிழ் உல­குக்கு புகழ் சேர்க்கும் வகையில் இவ்­வூரில் தொடர்ச்­சி­யாக மூன்று தினங்கள் தமிழ் இலக்­கிய பெரு­விழா ஒன்றை அமைப்பின் நிர்­வா­கி­க­ளுடன் முன்­னின்று நடத்தி, சாதனை நிலை­நாட்­டி­யி­ருந்­தமை அவ­ரது கலை, இலக்­கிய பங்­க­ளிப்பின் பெறு­மா­னத்தை பறை­சாற்­று­கின்­றது எனலாம்.

சுமார் 60 வருட கால எழுத்து, கலை, இலக்­கிய துறை­களில் அர்ப்­ப­ணிப்பு மிக்க சேவைக்­காக கடந்த 2016ஆம் ஆண்டு கலா­சார, பண்­பாட்­ட­லு­வல்கள் அமைச்­சினால் இவர் கலா­பூ­ஷணம் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கல்வி, கலா­சாரம், சமூக சேவை, கலை, இலக்­கியம், ஊடகம் என்று அனைத்துத் துறை­க­ளிலும் கால் பதித்து, பல்­துறை ஆளு­மை­யாகத் திகழ்ந்த நிலையில் சமூ­கத்­திற்­காக உன்­னத சேவை­யாற்றி, மக்கள் மனதில் இடம்­பி­டித்­துள்ள மர்ஹூம் ஏ.எல்.எம்.அமீன் எம்மை விட்டுப் பிரிந்­தாலும் அவ­ரது மகத்­தான சேவைகள் என்றும் நினை­வு­கூ­ரப்­படும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அன்­னா­ரது ஜனாஸா பெரும் திர­ளா­னோரின் பங்­கு­பற்­று­த­லுடன் நிந்­த­வூரில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இவ­ரது மறை­வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் உட்­பட அர­சியல் பிர­மு­கர்கள், ஊடக, கலை, இலக்­கிய, சிவில் சமூக அமைப்­புகள் பலவும் அனு­தாபச் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.