ஓட்டமாவடி மஜ்மா நகரில் 3379 உடல்கள் நல்லடக்கம்

0 445

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் ஜனவரி 25 ஆம் திகதி வரை 3379 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மையவாடியில் இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான நாட்களில் மாத்­திரம் 76 உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.
மஜ்மா நகர் மைய­வா­டியில் தற்­போது நாளொன்­றிற்கு 4 முதல் 5 வரை­யான உடல்கள் நல்­ல­டக்­கத்­திற்­காக கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

மஜ்மா நகர் மைய­வா­டிக்குச் சென்று மர­ணித்­த­வர்­க­ளுக்கு பிரார்த்­தனை செய்ய உற­வி­னர்­க­ளுக்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை­யினால் அனு­மதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.