மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?

0 645

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் நெருக்­க­டி­களின் மத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் காணிப் பிரச்­சினை தொடர்பில் இவ்­வா­ரமும் கவனம் செலுத்­து­கிறோம்.

பனம்­ப­லான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­யின்­படி
கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் 11 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளுடன் 240 சதுர கிலோ­மீற்றர் அதா­வது (59,280 ஏக்கர்) நிலப்­ப­ரப்புக் கொண்­ட­தாக உரு­வாக்­கப்­பட்­டது.
அதேவேளை அத­னோடு அரு­கி­ல­மைந்த பகுதி: கோற­ளைப்­பற்று தெற்கு – கிரான் பிர­தேச செய­லகம் எனவும் அது 18 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளுடன் 686 சதுர கிலோ­மீற்றர் (அதா­வது 169,442 ஏக்கர்) நிலப்­ப­ரப்பும் கொண்­ட­மைந்­த­தாக உரு­வாக்­கப்­பட்­டது.
இந்த புதிய கோற­ளைப்­பற்று தெற்கு –- கிரான் பிர­தேச செய­லாளர் பிரிவு உரு­வா­கும்­போது கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி எனும் முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரி­வி­லி­ருந்து 5 கிராம அலு­வலர் பிரி­வு­களும் சுமார் 155 சதுர கிலோ­மீற்றர் (38,285 ஏக்கர்) எடுக்­கப்­ப­டு­கி­றது.

அதே­நேரம் கோற­ளைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரி­வி­லி­ருந்து 13 கிராம அலு­வலர் பிரி­வு­களும் 686 சதுர கிலோ­மீற்றர் (169,442 ஏக்கர்) நிலப்­ப­ரப்பு தாரை வார்த்துக் கொடுக்­கப்­பட்டு 2002 இல் கோற­ளைப்­பற்று தெற்கு – கிரான் பிர­தேச செய­லாளர் பிரிவு உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­திற்கு கோற­ளைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரி­வி­லி­ருந்து வாழைச்­சேனை 206, வாழைச்­சேனை 206பி, வாழைச்­சேனை 206டி, பிறைந்­து­ரைச்­சேனை 206ஏ, பிறைந்­து­ரைச்­சேனை 206சி, மாவ­டிச்­சேனை 208ஏ, செம்­மண்­ணோடை 208டி ஆகிய 7 கிராம அலு­வலர் பிரி­வுகள் இணைப்புச் செய்­யப்­ப­டு­கின்­றன.

கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச செய­ல­கத்தின் கீழ் இருந்த தியா­வட்­டவான் 210சி எனும் கிராம அலு­வலர் பிரி­வையும் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­துடன் இணைப்­ப­தாக பனம்­ப­லான ஆணைக்­குழு சிபார்சு செய்­தது.

அதே­வேளை கோற­ளைப்­பற்று வடக்கு எனும் வாகரை தமிழ் பிர­தேச செய­லகப் பிரி­வி­லி­ருந்து புணாணை கிழக்கு 211பி எனும் 128 சது­கி­லோ­மீற்றர் (31616 ஏக்கர்) பரப்­ப­ளவு கொண்ட கிராம அலு­வலர் பிரி­வையும் புதி­தாக உரு­வாக்­கு­வ­தற்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட ரிதீ­தென்ன 211எச் மற்றும் கார­முனை 211ஜி-2 எனும் 104 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவு (25688 ஏக்கர்) கொண்ட கிராம அலு­வலர் பிரி­வு­க­ளையும் சேர்த்து கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது. கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகப் பிரிவின் மொத்த சனத்­தொகை –24,647.

னம்­ப­லான ஆணைக்­கு­ழு­வினால் நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட 08 பிர­தேச செய­ல­கங்­களில் 07 பிர­தேச செய­ல­கங்கள் அந்த ஆணைக்­கு­ழுவின் சிபா­ரிசு மற்றும் அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்தில் கிடைக்­கப்­பெற்ற அங்­கீ­கா­ரத்தின் அடிப்­ப­டையில் நிலப்­ப­ரப்பு மற்றும் கிராம அலு­வலர் பிரி­வு­க­ளுடன் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு இன்­ற­ளவும் இயங்கி வரு­கின்­றன.
ஆனால், கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் மாத்­திரம் பனம்­ப­லான ஆணைக்­குழு மற்றும் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­திற்கு ஏற்ப வழங்­கப்­பட்ட 240 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவு மற்றும் கிராம அலு­வலர் பிரி­வு­களும் இது­வ­ரையில் நில அளவை செய்­யப்­ப­டா­மலும், எல்லை நிர்­ணயம் செய்­யப்­ப­டா­மலும் உள்­ளது.

மேற்­படி கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் அது தன்­ன­கத்தே கொண்­டுள்ள 24647 சனத்­தொ­கை­யுடன் 11 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளையும் 240 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ள­வையும் கொண்­ட­தாக உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென பனம்­ப­லான ஆணைக்­குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது.

அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்
பனம்­ப­லான ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சுக்­க­மைய, 2000.07.13ஆம் திகதி அமைச்­ச­ரவைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்­திற்கு அமை­வாக 2002.05.24ஆம் திகதி கோற­ளைப்­பற்று மத்தி மற்றும் கோற­ளைப்­பற்று தெற்கு – கிரான் ஆகிய பிர­தேச செய­ல­கங்கள் திறந்து வைக்­கப்­பட்­டன.

வர்த்­த­மானி அறி­வித்தல் விடுக்­கப்­ப­டா­மை­யினால் தோன்­றி­யுள்ள நிரு­வாக
முரண்­பா­டுகள்
கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­திற்­கென பரிந்­து­ரைக்­கப்­பட்ட 11 கிராம அலு­வலர் பிரி­வு­களில் 08 கிராம அலு­வலர் பிரி­வு­களை மாத்­திரம் இணைப்புச் செய்து 2002.05.24ஆம் திகதி இப்­பி­ர­தேச செய­லகம் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்த 8 கிராம அலு­வலர் பிரி­வு­களும் சுமார் 12 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ள­வினை மாத்­தி­ரமே கொண்­ட­மைந்­துள்­ளன.

கோற­ளைப்­பற்று வடக்கு – வாகரை பிர­தேச செய­ல­கத்தின் அதி­காரப் பரப்­பி­லி­ருந்து இணைப்புச் செய்­யப்­ப­ட­வேண்­டிய 3 கிராம அலு­வலர் பிரி­வு­களும் இது­வ­ரை­யிலும் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­துடன் இணைப்புச் செய்­யப்­ப­ட­வில்லை.
அதே­வேளை, பனம்­ப­லான ஆணைக்­கு­ழு­வினால் பரிந்­துரை செய்­யப்­பட்ட புதிய கிராம அலு­வலர் பிரி­வு­க­ளான புணானை கிழக்கு 211பி, ரிதி­தென்ன 211எச், கார­முனை ஜி-2 ஆகிய கிராம அலு­வலர் பிரி­வுகள் நில அளவை செய்­யப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் விடுக்­கப்­ப­ட­வில்லை.

இருப்­பினும், புணாணை கிழக்கு 211பி கிராம அலு­வலர் பிரிவின் ஒரு பகுதி தற்­கா­லி­மாக, நிலத் தொடர்­பற்ற வகையில் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­துடன் இணைக்­கப்­பட்டு நிரு­வ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை, வர்த்­த­மானி மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்ட கிராம அலு­வலர் பிரிவு எல்­லைகள் யுத்த காலத்தில் சட்ட ரீதி­யற்ற முறை­யிலும் நில அளவைத் திணைக்­க­ளத்தின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வரை­ப­டத்­திற்கு முர­ணா­கவும் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கோரிக்­கைகள்
வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு அமைய இந்தக் கிரா­மங்­களின் எல்­லைகள் அமைதல் வேண்டும்.

வாழைச்­சே­னையைக் குறுக்­க­றுக்கும் மாதுறு ஓயாவின் கிளை ஆறு, வாழைச்­சேனை மீன்­பி­டித்­துறை முகத்­தி­லி­ருந்து தியா­வட்­டவான் வரை­யு­மான நீர் வளம் என்­பன சட்­ட­ரீ­தி­யாக கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்தின் கீழ் வர்த்­த­மானி அறி­வித்தல் விடுக்­கப்­படல் வேண்டும்.

ஏற்­கெ­னவே பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் மூலம் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­தினை வர்த்­த­மானி அறி­வித்தல் விடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும் அவை மாவட்ட நிரு­வா­கத்­தினால் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன.

இறு­தி­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் 2012ம் ஆண்டில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணயக் குழுவின் அறிக்­கை­யிலும் பனம்­ப­லான ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சினை முழு­மை­யாக ஏற்று அர­சாங்­கத்­திடம் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போ­திலும், இவ்­வி­தந்­து­ரைகள் இன்­று­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

வர்த்­த­மானி அறி­வித்தல் விடுக்­கப்­ப­டா­மையால் தோன்­றி­யுள்ள பிரச்­சி­னைகள்
நிரு­வாக இல­கு­ப­டுத்தல் கொள்­கையில் உரு­வாக்­கப்­பட்ட கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் தியா­வட்­டவான் கிரா­மத்தில் அமைந்­துள்­ளது.

இக்­கி­ரா­மத்­திற்கு அரு­கி­லுள்ள கேணி­நகர், ஆலங்­குளம், வட்­டவான், நாவ­லடி ஆகிய கிரா­மங்­களில் வாழும் பொது­மக்கள் சுமார் ஒரு கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்து தமக்­கான சேவை­களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்­பி­ருந்தும் அவர்கள் சுமார் 40 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து வாக­ரையில் அமைந்­துள்ள கோற­ளைப்­பற்று வடக்கு பிர­தேச செய­ல­கத்தில் தமக்­கான சேவை­களைப் பெற்றுக் கொள்ள நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

தமது பிர­தேச செய­லக நிரு­வாக கரு­மங்­க­ளுக்­காக சுமார் 01 கிலோ­மீற்றர் தூர­மு­டைய கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­திற்குச் செல்ல முடி­யாது, சுமார் 40 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள வாகரைப் பிர­தேச செய­ல­கத்­துக்குச் சென்று சேவை­களைப் பெற­வேண்­டி­யி­ருப்­பது மிகுந்த கஸ்­டத்­தையும், அதிக செல­வி­னத்­தையும், மன உளைச்­ச­லையும் நேர விர­யத்­தையும் பொது­மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதே­வேளை, ரிதி­தென்ன கிரா­மத்­தி­லி­ருந்து கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் சுமார் 22 கிலோ மீற்றர் தூர இடை­வெ­ளி­யி­லேயே அமைந்­துள்­ளது.

ரிதி­தென்ன முஸ்லிம் கிரா­ம­வாசி ஒருவர் காணி தொடர்­பான சேவை­யொன்றைப் பெற அரு­கி­லுள்ள கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­தினைக் கடந்து, சுமார் 70 கிலோ மீற்றர் பயணம் செய்து வாக­ரை­யி­லுள்ள தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்­திற்குச் சென்று சேவை­யினைப் பெற்றுக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் உள்­ளது.

இதன்­மூலம் தமது அடிப்­படை உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வ­தா­கவும் இப்­பி­ர­தேச மக்கள் பல தட­வை­களில் அதி­கா­ரி­க­ளி­டத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். ஆனால் பொது மக்­களின் எந்­த­வித சிர­மத்­தையும் மாவட்ட செய­லக நிரு­வாகம் கண்டு கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்தின் 12 சதுர கிலோ­மீற்றர் பரப்­புக்குள் வசிக்­கின்ற சுமார் 35,000 மக்கள், அடர்த்­தி­யான குடி­யி­ருப்­புக்கள் கார­ண­மாக மிகுந்த இட­நெ­ருக்­கடி மற்றும் பாரிய சுற்­றாடல், சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர்.

நாளாந்தம் சேரும் குப்பை கூழங்­களை புதைப்­ப­தற்குக் கூட போதிய இட­வ­ச­தி­யில்­லாமல் அவர்கள் அவஸ்­தை­யு­று­கின்­றனர்.

குடிநீர் மாச­டைந்து வரு­கின்­றது. தொற்­று­நோய்கள் பாரிய அச்­சு­றுத்­த­லாக உள்­ளன.
அத்­துடன் பொது வச­திகள், பொழு­து­போக்கு மையங்கள் போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்த இட வச­தி­யின்­மை­யாலும் பிரதேச மக்கள் – குறிப்பாக இளந்தலைமுறையினர் உடல், உள ரீதியாக ஆரோக்கியமற்ற நிலையிலும் மன அழுத்தத்துடனும் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் அபிவிருத்திக்கான நிலப்பற்றாக்குறை மற்றும் இட வசதிப் பற்றாக்குறையால் வீடு, காணிகளின் விலைகளும் கட்டுப்பாடற்று அதிகரித்துச் செல்வதும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

எனவே அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்­தின்­படி கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம், அதற்­கு­ரித்­தான 240 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ள­வுடன் சட்­ட­பூர்­வ­மாக இயங்­கு­வ­தற்கும் நில அளவை செய்து வர்த்­த­மானி அறி­வித்தல் விடுக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இன நல்­லி­ணக்கம், சமூக உரி­மைகள், சுமு­க­மான நிரு­வாகம், சிவில் உரிமை என்­ப­ன­வற்றைப் பேணு­வ­தற்கும் அப்­பி­ர­தேச மக்­களின் கோரிக்­கையை பரி­சீ­லித்து, பிர­தேச மக்­க­ளுக்குச் சாத­க­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என முஹைதீன் ஜும்­ஆப்­பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபை உரிய இடங்­க­ளுக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.