பொரளை தேவாலய குண்டு விவகாரம்: மாறுபட்ட வாக்குமூலங்கள் அளிக்கும் பிரதான சந்தேக நபர்

ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

0 450

(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை -ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில், அக்­குண்டை அங்கு கொண்டு சென்று வைத்­தவர் என நம்­பப்­படும்  நபர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவ­ரது வாக்கு மூலத்­துக்கு அமைய ஓய்­வு­பெற்ற வைத்­தியர் ஒருவர் கைது செய்­யப்பட்­டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இரவு 7.30 மணி­ய­ளவில், இந்த விவ­கா­ரத்தில் இர­க­சிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் கொழும்பு தெற்கு வல­யத்தின் குற்ற விசா­ரணைப் பிரி­வினர் பிலி­யந்­த­லையில் வைத்து அவரை கைது செய்­துள்­ளனர்.

இந் நிலையில் அவ­ரையும், ஏற்­க­னவே எம்­பி­லி­பிட்­டிய – பனா­முர பகு­தியில் வைத்து கைது செய்த பிர­தான சந்­தேக நப­ரான கட­வத்­தையைச் சேர்ந்த 65 வயது நப­ரையும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசா­ரித்து வரு­வ­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

அதன்­படி, இந்த விவ­கா­ரத்தில் தற்­போ­தைக்கு மொத்­த­மாக 5 சந்­தேக நபர்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அறிய முடி­கி­றது. இதில் மூவர் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­பிலும், ஏனைய இரு­வரும் கொழும்பு தெற்கு வலய குற்ற விசா­ரணைப் பிரிவு அதி­கா­ரி­களின் பொறுப்­பிலும் வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்பட்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

எம்­பி­லி­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பனா­முர பகு­தியில் அன்ன தான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தக­வ­லுக்கு அமைய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் இந்த சிறப்புக் குழு பிர­தான சந்­தேக நபரை கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்­த­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். கம்­பஹா – கட­வத்தை – மங்­கட வீதி பகு­தியைச் சேர்ந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

அவ­ரிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், முதலில் முஸ்லிம் ஒருவர் குண்டை வைக்க தனக்கு 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்­த­தாக கூறி­யுள்ள நிலையில், பின்னர் எம்­பி­லி­பிட்­டிய மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றி ஓய்­வு­பெற்ற வைத்­தியர் ஹேரத்தின் ஆலோ­ச­னையில் அச்­செ­யற்­பாட்டை முன்­னெ­டுத்­த­தாக கூறி­யுள்ளார்.
இந் நிலை­யி­லேயே பிர­பல சமூக செயற்­பாட்­டா­ளரும் அர­சி­யல்­வா­தி­யு­மான ஓசல ஹேரத்தின் தந்­தை­யான குறித்த வைத்­தியர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். எவ்­வா­றா­யினும் தன்­மீ­தான குற்­றச்­சாட்டை குறித்த வைத்­தியர் மறுத்­துள்ளார்.

இந் நிலையில், பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலம் அளித்­துள்ள, கட­வத்தை பகு­தியைச் சேர்ந்த சந்­தேக நபர், தானே நார­ஹேன்­பிட்டி தனியார் வைத்­தி­ய­சாலை மல­சல கூடத்தில் வைக்­கப்­பட்ட குண்­டி­னையும் கொண்டு சென்­ற­தாக கூறி­யுள்­ள­தா­கவும் அது தொடர்­பிலும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.
எவ்­வா­றா­யினும் அந்த சந்­தேக நபர் பொலிஸ் விசா­ர­ணை­களை திசை திருப்ப இவ்­வாறு திரிபுபடுத்தி விட­யங்­களை கூறு­கின்­றாரா என்ற சந்­தே­கமும் உள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, கைது செய்­யப்­பட்ட வைத்­தி­யரின் வீட்­டி­லி­ருந்து 4 கைத்­துப்­பாக்­கிகள், ஒரு ரிவோல்வர், வாயு ரைபிள், 2 வாள்கள், ஒரு ரம்போ கத்தி என்­ப­னவும் மீட்­கப்ப்ட்­ட­தாக பொலிஸார் நேற்று தெரி­வித்­தி­ருந்­தனர். இந் நிலையில் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர்கள் அறி­வித்­துள்­ளனர்.

இத­னி­டையே, வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைக்­கப்பட்ட விவ­கா­ரத்தில், கைது செய்­யப்­பட்­டுள்ள ஓய்­வு­பெற்ற வைத்­தி­யரின் வீட்­டி­லி­ருந்து ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்த போதும், அவை விளை­யாட்டு துப்­பாக்­கிகள் என கைது செய்­யப்­பட்­ட­வரின் மகனும் பிர­பல சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான ஓசல ஹேரத் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கிரிஸ்மால் வர்­ண­கு­ல­சூ­ரிய, கலா­நிதி அஜந்தா பெரேரா உடன் இணைந்து ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினை நடாத்தி கருத்து வெளி­யிடும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

‘எனது தந்­தையை தேவா­லய குண்டு விவ­கா­ரத்தில் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­துள்­ளனர். இது அடிப்­ப­டை­யற்ற செயற்­பாடு. தற்­போது அவரை எங்கு தடுத்து வைத்­துள்­ளனர் என்­பது கூட தெரி­யாது. சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு கூட அவரைப் பார்க்க அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று ஊடகங்களில், எனது தந்தையின் வீட்டிலிருந்து ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அது தவறு.
அவை ஆயுதங்களே இல்லை. அவை எனது அறையிலிருந்தே எடுக்கப்பட்டன. அவை விளையாட்டுப் பொருட்கள். விளையாட்டு துப்பாக்கிகள். அவற்றை வைத்து ஊடகங்கள் ஊடாக தவறான கருத்தினை சமூக மயப்படுத்த முனைகின்றனர். இதன்பின்னணியில் வேறு நோக்கங்கள் உள்ளன. ‘ என தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.