தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் ஒத்துழைத்தால் நெருக்கடிகளை தீர்க்கலாம்

முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் அன்சார் தெரிவிப்பு

0 529

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையை அதன் நிர்­வாக சபை ஒத்­து­ழைத்தால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும். சு-மு­க­மான தீர்­வு­காண முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும்,வக்பு சபையும் தயார் நிலையில் உள்­ளன.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை ஒத்­து­ழைப்பு வழங்­கா­து­விடின் புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு புதிய நிர்­வாக சபை அழைக்­கப்­பட்டும் நிர்­வாக சபையைச் சேர்ந்த மூவர் மாத்­தி­ரமே அதில் கலந்து கொண்­டார்கள். நிர்­வாக சபையை மீண்டும் அழைத்து கலந்­து­ரை­யாடி சுமுக தீர்வு காண்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஜெய்­லானி புனித தலம் வக்பு சட்­டத்­தின்கீழ் பதிவு செய்­யப்­பட்ட சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். இந்­நி­லையில் இதனைப் பாது­காக்கும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம்,வக்பு சபை என்­ப­வற்­றுக்கு மாத்­தி­ர­மல்ல பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கும் முக்­கிய பொறுப்பு உள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை ஏகோ­பித்து இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஜெய்­லானி பள்­ளி­வா­சலும் அத­னோ­டி­ணைந்த பகு­தி­களும் முஸ்லிம்களின் தொன்மைமிகு புனித தலங்களாகும். சட்டரீதியானதாகும். அதனை அகற்றும்படி எவருக்கும் உத்தரவிட முடியாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.