உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: சந்தேக நபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணம்

0 363

(எம்.எப்.எம்.பஸீர், பாறூக் சிஹான்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொரளை பொலிஸார், கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று (5) அறி­வித்­தனர்.

இலக்கம் 506/ பீ, பள்ளி ஒழுங்கை வீதி, கல்­மு­னையைச் சேர்ந்த 1123 எனும் சந்தேக நபர் இலக்­கத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 42 வய­தான சாலி மொஹம்­மது நளீம் என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹஷீ­முடன் தொடர்­பு­களைப் பேணி­ய­மையை மையப்­ப­டுத்தி குறித்த சந்­தேக நபர் கடந்த 2019 மே 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அது முதல் தடுப்புக் காவலின் கீழ் வைத்து விசா­ரிக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர், கடந்த 2021 ஏப்ரல் 6 ஆம் திகதி, கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் 21463 /8/19 எனும் வழக்கு கோவையின் கீழ் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

இந் நிலை­யி­லேயே இந்த சந்­தேக நபர் கடந்த 2021 நவம்பர் 23 ஆம் திகதி சுக­யீனம் கார­ண­மாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். பின்னர் கடந்த 2021 டிசம்பர் 5 ஆம் திகதி மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக சந்­தேக நபர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, அங்கு அவ­ருக்கு தீவிர சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

குறித்த சந்­தேக நபர், சிறு­நீ­ரகம் சார் பிரச்­சி­னைக்­கா­கவே சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது சார்ந்த நோய் நிலைமையே மரணத்துக்கு காரணம் எனவும் சிறைச்சாலையின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.