காதி நீதிமன்றங்களின் கதி என்னவாகும்?

0 598

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் பல தசாப்­தங்­க­ளாக நாட்டில் இயங்­கி­வரும் காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு என்ன நடக்­கப்­போ­கி­றது? காதி­நீ­தி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டப்­போ­கின்­ற­னவா? இல்­லையேல் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுடன் இக்­கட்­ட­மைப்பு திருத்­தி­ய­மைக்­கப்­படப் போகி­றதா? இது­வரை இது தொடர்பில் இறு­தி­யான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டவில்லை.

இலங்­கையில் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் ஒரே சட்­டமே அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். இனங்­க­ளுக்­கான தனியார் சட்­டங்­க­ளுக்கு சாவு மணி­ய­டிக்க வேண்டும் என கடும்­போக்கு இன­வா­தி­களும் இனவாத மதத்­த­லை­வர்­களும் அடிக்­கடி போர்க்­கொடி ஏந்­து­கி­றார்கள். மாரி காலத்து காளான்கள் போன்று அவர்­க­ளது கோஷங்கள் மெள­னித்து விடு­கின்­றன. சில காலத்தின் பின்பு மீண்டும் கள­மி­றங்­கு­கின்­றன.

முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லாமற் செய்ய வேண்டும். காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு மூடு விழா நடத்த வேண்டும் என சில வருட கால­மாக கோஷ­மெ­ழுப்பி வந்த பொது பல சேனா பெளத்த மக்­களை இன வாதத்தின் பக்கம் இழுத்துச் சென்­றது.

“பெளத்த பெண்­களை ஏமாற்றி மதம்­மாற்றி திரு­மணம் செய்து கொள்ளும் முஸ்லிம் இளை­ஞர்கள் சில காலம் அவர்­க­ளுடன் வாழ்க்கை நடத்தி விட்டு காதி­நீ­தி­மன்­றங்கள் ஊடாக இல­குவில் எது­வித நஷ்ட ஈடு­க­ளு­மின்றி விவா­க­ரத்து செய்து கொள்­கின்­றனர். அவர்­க­ளது திரு­மணப் பதிவு முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­வதால் காதி­நீ­தி­மன்­றங்­களே அவர்­க­ளுக்கு விவா­க­ரத்து வழங்­கு­கி­றது.

மதம்­மாறி இஸ்­லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆண்­களை திரு­மணம் செய்து கொள்ளும் பெண்­களை விவா­க­ரத்து (தலாக்) செய்­வ­தற்கு கணவர் காதி­நீ­தி­மன்­றங்­களில் வழக்கு தாக்கல் செய்­கின்­றார்கள். அவ்­வா­றான வழக்­கு­களில் பிர­தி­வா­தி­க­ளான மதம் மாறி திரு­மணம் செய்து கொண்ட சிங்­களப் பெண்கள் காதி­நீ­தி­மன்­றங்­களில் ஆஜ­ரா­கும்­போது, காதி­நீ­தி­ப­திகள் அவர்­களின் முகத்தில் எச்சில் துப்­பு­கி­றார்கள்” இவ்­வாறு ஊடக மாநா­டு­களில் கருத்துத் தெரி­வித்­த­வரே தற்­போது “ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

“ஒரே நாடு ஒரே சட்­டத்தை அமுல் நடத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே இந்தச் செய­லணி ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற எண்­ணக்­க­ரு­வினை நோக்­கும்­போது இலங்­கையில் ஒரே சட்­டமே அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் ஏனைய தனியார் சட்­டங்கள் இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும் என்­பதே நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

நீதி அமைச்­சரின் நிலை­ப்பாடு என்ன?
ஜனா­தி­பதியின் நெருங்­கிய நண்­ப­ரான நீதி­ய­மைச்சர் ஜனா­தி­ப­தி­யி­னது கொள்­கை­களை ஆத­ரிப்­ப­வ­ரா­கவே இருந்து வரு­கிறார். ஜனா­தி­ப­தியின் கொள்­கை­களை அவரால் நிராகரிக்க ­மு­டி­யாது. அதன் கார­ண­மா­கவே அவர் கடந்த காலங்­களில் காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு சவால்கள் ஏற்­பட்­ட­போது, காதி­நீ­தி­ப­திகள் மீது குற்­றங்கள் சுமத்­தப்­பட்­ட­போது அதனை கண்டுகொள்ளதவராகவே இருந்து வந்­துள்ளார். காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பை மாற்­றி­ய­மைக்க வேண்டும் அல்­லது இல்­லாமற் செய்­ய­வேண்டும் என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்து வந்­துள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அதில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் தனக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் குழு­வொன்­றி­னையும் நிய­மித்­தி­ருந்தார். அக்­குழு தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்து பல மாத­கா­ல­மா­கி­றது.
நீதி­ய­மைச்சர் நிய­மித்த குழுவும் காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பை மறு­சீ­ர­மைக்க வேண்டும் மாறாக இல்­லாமற் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்றே தனது சிபா­ரி-சில் தெரி­வித்­தி­ருந்­தது.

அத்­து­ர­லியே தரன தேரரின் தனி­நபர் பிரே­ரணை
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நாட்டில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தை ஒழிக்கும் தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினை இவ்­வ­ருட ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருந்தார்.

அத்­து­ர­லிய ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­று­கையில் ‘முஸ்லிம் சட்­டத்தில் திரு­ம­ணத்­தின்­போது பெண்ணின் விருப்பம் அவ­சி­ய­மில்லை. குறிப்­பாக கூறு­வ­தென்றால் திரு­மண சான்­றி­தழில் விவா­கப்­ப­திவின் போது கூட கையொப்­ப­மிட பெண்­ணுக்கு உரிமை இல்லை. எனவே முஸ்லிம் சட்­டங்­க­ளினால் பெண்­களின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. வெறு­மனே பெண்­களின் உரிமை மட்­டு­மல்­லாது சிறுவர் உரி­மை­களும் பறிக்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் தனியார் சட்­டத்தின் கீழ் 12 வய­துக்குக் கீழ் உள்ள பெண்கள் காதி­நீ­தி­ப­தியின் அனு­ம­தி­யுடனும் 12 வய­திற்கு மேற்­பட்ட பெண்கள் காதி­நீ­தி­ப­தியின் அனு­ம­தி­யில்­லா­மலும் திரு­மணம் செய்து கொடுக்க முடியும். எனவே இந்த நடை­மு­றையை மாற்­றி­ய­மைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­குமா? முஸ்லிம் சட்­டத்தின் கீழ் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­வதை அர­சாங்கம் அறிந்­துள்­ளதா? எனவே முஸ்லிம் சட்­டம்­கு­றித்து தீர்­மானம் எடுப்­பது நீதி அமைச்சா அல்­லது ஜம் இய்­யத்துல் உலமா சபையா என்­பதை அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும் என்றார்.

கடந்த 2021.02.09 ஆம் திகதி அத்­து­ர­லிய ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் நிலை­யியற் கட்­டளை 27/2 இன் கீழ் சிறப்புக் கூற்­றொன்றை முன்­நி­றுத்­தியே தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருந்தார்.

அத்­து­ர­லிய ரதன தேரரின் உரை­யை­ய­டுத்து கருத்து வெளி­யிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம், ‘எமது நாட்டில் பல தனியார் சட்­டங்கள் உள்­ளன. குறிப்­பாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்­பிலும் அதில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பா­கவும் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு அக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நீதி­ய­மைச்­ச­ருக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­படும். பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் அனை­வரும் அது தொடர்பில் ஆராய்ந்து நாட்டின் பொது­வான சட்­டத்­துக்கு சம­மான திருத்­தங்­களை மேற்­கொள்ள நாங்கள் இணக்கம் தெரி­விக்­கிறோம் என்றார்.

அமைச்­ச­ர­வையின் தீர்­மானம்
நாட்டில் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்க வேண்டும். முஸ்­லிம்­களின் பல­தார மணம் தடை செய்­யப்­ப­ட­வேண்டும். முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என அமைச்­ச­ர­வையில் ஏற்­க­னவே தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இத்­தீர்­மா­னங்கள் சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்­துக்கு மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிப்­பது உள்­ளிட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் அமைச்­ச­ர­வையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்கள் ஒரு தலைப்­பட்­ச­மா­னவை என முஸ்லிம் சமூகம் பலத்த அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தது. இது­கு­றித்து முஸ்லிம் சமூ­கத்தின் மார்க்க, சிவில் தலை­மைத்­து­வங்­க­ளின்­அ­பிப்­பி­ரா­யங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்றும் மாற்­றுக்­க­ருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான போதிய கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதே­வேளை நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் வக்­பு­ச­பையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் சட்ட திருத்த ஆலோ­சனைக் குழுவும் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னங்கள் தொடர்பில் ஏ-கோ­பித்த சம்­ம­தத்தை தெரி­விக்­க­வில்லை. இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் மத்­தி­யிலும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கருத்து வேறு­பா­டுகள் நிலவி வந்­தன. குழுவின் அங்­கத்­த­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் குழு­வி­னது முதல் மூன்று அமர்­வு­களில் மாத்­தி­ரமே பங்­கேற்­றி­ருந்தார். பின்பு குழு­வி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்து கொண்டார்.

முஸ்லிம் சமூ­கத்தின் மார்க்க, சிவில் தலை­மைத்­து­வங்­களை ஆலோ­சிக்­காது அமைச்­ச­ரவை மேற்­கொண்­டுள்ள முஸ்லிம் சமய விவ­காரம் தொடர்­பான தீர்­மா­னத்தை சட்ட ரீதி­யாக சவா­லுக்­குட்­ப­டுத்­து­வது தொடர்பில் சிவில் அமைப்­புகள் ஆராய்ந்­துள்­ளன. அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கும்­போது அதனை எதிர்த்து உயர்­நீ­தி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்­வது குறித்தும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்க
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்பில் கவலை வெளி­யிட்ட அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, இஸ்­லா­மிய மார்க்க, சிவில் நிறு­வ­னங்­களின் ஆலோ­ச­னை­களை கருத்திற் கொள்­ளாது அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்­பாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­மைக்கு அதி­ருப்தி தெரி­வித்­தது.

அத்­தோடு அமைச்­ச­ர­வையின் தீர்­மானம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் மார்க்க அடிப்­ப­டை­க­ளையும், நாட்டின் ஜன­நா­யக உரி­மை­க­ளையும் கவ­னத்­திற்­கொண்டு தீர்­மானம் எடுக்­கு­மாறும் அர­சாங்­கத்தை கோரி­யி­ருந்­தது.

நாட்டின் அனைத்து பிர­ஜை­களின் உரி­மை­க­ளையும் மதித்து எவ­ருக்கும் அநீதி இழைக்­கப்­ப­டாத வகையில் இந்­நாட்டின் பல்­லின கலா­சா­ரத்தைப் பேணக்­கூ­டிய விதத்தில் அனைத்து தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைத்த ஒரு பொறி­முறை மூலம் இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளு­மாறு உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித் நீதி­ய­மைச்­ச­ரையும் அர­சாங்­கத்­தையும் வேண்­டி­யி­ருந்தார்.

அமைச்சர் அலி­சப்­ரியின் மெளனம்
முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் கீழ் இயங்­கி­வரும் காதி­நீ­தி­மன்ற கட்டமைப்பு இல்­லாமற் செய்­யப்­ப­டு­வ­தற்கு அமைச்சர் அலி­சப்ரி ஆரம்பம் முதல் ஆத­ரவு தெரி­வித்து வந்தார் என்­பதே சமூ­கத்தின் குற்றச்சாட்டாகும். அமைச்­ச­ர­வையில் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ரா­கவும் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்­ச­ரா­கவும் அலி­சப்­ரியே பதவி வகிக்­கிறார். ஆனால் காதி­நீ­தி­மன்ற முறை­மையை ஒழிப்­பது உள்­ளிட்ட யோச­னை­களை தான் அமைச்­ச­ர­வையில் முன்­மொ­ழி­ய­வில்லை என்று தெரி­வித்­துள்ளார். அவர் இவ்­வாறு கூறு­வதை நியா­யப்­ப­டுத்த முடி­யாது. அவரே விட­யத்­துக்குப் பொறுப்­பா­னவர். அவர் கூறி­யது போன்று இடம் பெற்­றி­ருந்­தாலும் அவர் தனது அதி­கா­ரங்­க­ளுக்­காக தனது சமூ­கத்­துக்­காக அமைச்­ச­ர­வையில் வாதிட்­டி­ருக்க வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்­ட­வி­வ­காரம் தொடர்பில் தற்­போது மெளனம் காத்­து­வரும் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரியின் மெள­னத்தைக் கலைக்கும் வகையில் எமது வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இஸ்­லா­மிய நாடு­களின் தூது­வர்கள் மற்றும் உயர் ஸ்தானி­கர்­க­ளிடம் அரசின் நிலைப்­பாட்­டினை விளக்­கி­யுள்ளார். நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று உறு­தி­ய­ளித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரில் தெரி­வித்த இந்தக் கருத்து இஸ்­லா­மிய நாடு­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக மாத்­திரம் தெரி­வித்த கருத்­து­களா? என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

வெற்­றி­டங்­க­ளா­க­வுள்ள காதி­நீ­தி­மன்­றங்கள்
காதி­நீ­தி­பதி பதவி மூன்று வரு­ட­கா­லத்­துக்கே வழங்­கப்­ப­டு­கி­றது. மூன்று வரு­ட­காலம் பூர்த்­தி­யாக முன்பு புதிய நிய­ம­னங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் கோரப்­பட்டு நேர்­மு­கப்­ப­ரீட்­சை­யொன்றின் பின்பு புதிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வதே இது­வரை காலம் இடம் பெற்­று­வந்த நடை­மு­றை­யாகும். ஆனால் அண்­மைக் ­கா­ல­மாக இந்­ந­டை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை.

காதி­நீ­தி­ப­திகள் 46 பேரின் பத­விக்­காலம் டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் கால­ாவ­தி­யா­கி­றது. இவற்றில் 25 காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு புதிய நிய­மனம் வழங்­கு­வ­தற்­காக விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டும் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் நேர்­மு­கப்­ப­ரீட்சை இது­வரை நடத்­தப்­ப­ட­வில்லை.

மேலும்13 காதி­நீ­தி­ப­தி­களின் இரா­ஜி­னாமா, பதவி நீக்கம், இறப்பு கார­ண­மாக வெற்­றி­டங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு இப்­ப­கு­தி­க­ளுக்கு அண்­மையில் கட­மையில் உள்ள காதி­நீ­தி­ப­தி­களே பதில் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் பொது­மக்கள் தமது தேவை­க­ளுக்­காக தம் பிர­தே­சத்­தி­லி­ருந்தும் தூர இடங்­க­ளுக்கு பய­ணிக்க வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. இதனால் மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். காதி­நீ­தி­ப­திகள் வெற்­றிடம் கார­ண­மாக அநே­க­மான வழக்­குகள் நிலு­வையில் உள்­ளன. மொத்­தத்தில் தற்­போது காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு சீர்­கு­லைந்து போயுள்­ளது எனலாம்.

“ஒரே நாடு ஒரே சட்டம்’’ செய­ல­ணியின்
சிபா­ரி­சுக்­காக அரசு காத்­தி­ருக்­கி­றதா-?
“ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற எண்­ணக்­க­ருவை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்டு தற்­போது செயற்­பட்­டு­வரும் செய­ல­ணியின் ஆலோ­ச­னைகள் மற்றும் சிபா­ரி­சு­க­ளுக்­காக அரசு காத்­தி­ருக்­கி­றதா-? இதன் கார­ண­மா­கத்தான் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பும், காதி நீதி­பதி நிய­ம­னங்­களும் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றதா என்ற சந்­தேகம் பர­வ­லாக சமூ­கத்தின் மத்­தியில் எழுந்­துள்­ளது.

ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான “ஒரே நாடு ஒரே சட்டம்’’ ஜனா­தி­பதி செய­லணி தற்­போது பொது­மக்­க­ளி­னதும், சிவில் சமூக அமைப்­பு­க­ளி­னதும் ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் நாட­ளா­விய ரீதியில் பதிவு செய்து வரு­கி­றது. எதிர்­வரும் 2022.02.28 ஆம் திக­திக்கு முன்பு ஞான­சார தேரர் தனது செய­ல­ணியின் இறுதி அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் காதி­நீ­தி­மன்ற விவ­காரம் அந்த காலக்­கெ­டு­வரை இழுத்­த­டிக்­கப்­ப­டலாம் என சந்­தேகம் வெளி­யி­டப்­ப­டு­கி­றது.

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லா­ள­ராகப் பதவி வகித்து வரும் ஞான­சார தேரர் கடந்த வரு­டங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தையும் முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்­க­ளையும் மிகவும் கார­சா­ர­மாக விமர்­சித்து வந்­தவர். இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை இல்­லாமற் செய்ய வேண்டும் என போர்க்­கொடி ஏந்­தி­யவர். முஸ்லிம் தனியார் சட்­டத்தை மாத்­தி­ர­மல்ல முஸ்­லிம்­களின் ஷரீஆ விவ­கா­ரங்கள், ஷரீஆ வங்கி, மத்­ரஸா பாட­சா­லைகள், அர­புக்­கல்­லூ­ரிகள், ஹலால் சான்­றிதழ், இஸ்­லா­மிய கலா­சார உடை, நிக்காப் என்­ப­ன­வற்றை எல்லாம் விமர்­சித்­தவர். இவற்­றுக்­கெல்லாம் சாவு­மணி அடிக்­க­வேண்­டு­மென கிளர்ந்­தெ­ழுந்­தவர். இவ்­வா­றான ஒருவர் எமது முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தையும், காதி­நீ­தி­மன்ற முறை­மை­யையும் சவா­லுக்­குட்­ப­டுத்­துவார். இவற்­றுக்­கெ­தி­ராகவே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தையும் காதிநீதிமன்றக் கட்டமைப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அவற்றின் இருப்பினை உறுதிசெய்து கொள்வதற்காக தமது ஆலோசனைகளையும் கருத்துகளையும் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ செயலணிக்கு வழங்கவேண்டும்.

நீதியமைச்சர் முஸ்லிம்களின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும்
நீதி­ய­மைச்சர் சட்­டத்­த­ரணி அலி­சப்­ரிக்கும், “ஒரே நாடு ஒரே சட்டம்’’ செய­ல­ணியின் தலைவர் ஞான­சார தேர­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் உச்ச நிலையை எட்டியுள்­ளன. நீதி­ய­மைச்­சரை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் என ஞான­சார தேரர் ஊட­கங்கள் மூலம் பகி­ரங்க கோரிக்கை விடுத்­துள்ளார்.

காற்­சட்டை அணிந்து கொண்டு நியா­ய­மான கொள்­கை­யுடன் செயற்­படும் நபர் என்றால் இவர் பதவி விலக வேண்டும். யாரும் கூறு­வ­தைக்­கேட்டு பத­வியில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. அவர் முற்று முழு­தாகப் பொய்­ய­ராக மாறி­விட்டார். சொல்­வது ஒன்று செய்­வது வேறொன்று என்­றெல்லாம் அமைச்­ச­ருக்கு ஞான­சார தேரர் சவால் விட்­டுள்ளார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்’’ விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் நீதி­ய­மைச்­ச­ரான அலி­சப்­ரியே ஆவார். இந்­நி­லையில் ஞான­சார தேரரின் செயற்­பா­டுகள் அமைச்­ச­ரையும் விஞ்­சிய நிலை­யிலேயே அமைந்­துள்­ளது. இந்­நி­லைமை மிகவும் ஆபத்­தா­ன­தாகும். இவ்­வி­ட­யத்தில் ஜனா­தி­பதி தலை­யிட்டு ஞான­சார தேரரை கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.
ஞான­சார தேரர் தெரி­வித்து வரும் இன­வாதக் கருத்­துக்கள் அவர் இந்தச் செய­ல­ணியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மற்­றவர் என்­பதை உறுதி செய்­கி­றது.
இலங்­கையில் முஸ்­லிம்கள் பல தசாப்­தங்­க­ளாக சட்ட ரீதியில் யில் அனு­ப­வித்து வரு­கின்ற உரி­மை­களைப் பறிப்­ப­தற்கு நீதி­ய­மைச்சர் ஒரு போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.