கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமானோரின் ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல அதிக கட்டணம் செலுத்தாதீர்

0 397

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 ஜனா­ஸாக்­களை பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வடி- மஜ்மா நகர் மைய­வா­டிக்கு எடுத்துச் செல்­வ­தற்­காக பெரு­ம­ளவு கட்­டணம் செலுத்த வேண்­டா­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக யாழ் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஜனா­ஸாவை கொண்டு செல்லும் பிரத்­தி­யேக வாக­னத்­துக்கு 28 ஆயிரம் ரூபாவே அற­வி­டப்­ப­டு­கி­றது.

இதே­வேளை ஜனா­ஸ­ாவுடன் பய­ணிக்கும் உற­வி­னர்­க­ளது மேல­திக வாக­னத்­துக்கு 25 ஆயிரம் ரூபாவே அற­வி­டப்­ப­டு­கி­றது. இதற்கு மேல­தி­க­மாக கட்­டணம் செலுத்­த­வேண்­டி­ய­தில்லை என கொவிட் 19 செய­ல­ணியின் ஜனா­ஸாக்­க­ளுக்­கான யாழ் இணைப்­பாளர் முஜிபுர் ரஹ்மான் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.
குறிப்­பிட்ட கட்­ட­ணத்தை விட மேல­தி­க­மாக அற­வி­டப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் அவர் கூறினார்.

கண்டி

கண்­டிப்­ப­கு­தியில் நிகழும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை குரு­நா­க­லைக்கு எடுத்துச் சென்று அங்கு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். அங்­கி­ருந்­தே ஜனா­ஸாக்கள் மொத்­த­மாக ஓட்­ட­மா­வ­டிக்கு போக்­கு­வ­ரத்து செய்­யப்­ப­டு­கின்­றன. கண்­டி­யி­லி­ருந்து குரு­நா­க­லைக்கு எடுத்துச் செல்ல ஜனாஸா வாக­னத்­துக்கு கண்டி மர்க்கஸ் 4000 ரூபாவே அற­வி­டு­கி­றது. இதற்­கான பற்­றுச்­சீட்டும் வழங்­கப்­ப­டு­கி­றது. என மத்­திய மாகாண கொவிட் 19 செய­ல­ணியின் இணைப்­பாளர் கே.ஆர். ஏ.சித்தீக் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில்;

ஜனா­ஸாவின் உற­வி­னர்கள் கண்­டி­யி­லிருந்து ஓட்­ட­மா­வடி செல்­வ­தற்கு அவர்­க­ளா­கவே வாக­னங்­களை சுமார் 20 ஆயிரம் ரூபா­வுக்குள் ஏற்­பாடு செய்து கொள்­கின்­றனர். அத்­தோடு ஜனா­ஸாக்­கான பெட்­டியை கண்டி மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­கி­றது. என்றும் கூறினார்.

தற்­போது கொவிட் ஜனாஸாக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மாதம் யாழ் பகுதியிலிருந்து ஒரேயொரு ஜனாஸாவே ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.