முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்போம்

பசிலுடனான சந்திப்பின் பின்னர் ஹரீஸ் தெரிவிப்பு

0 382

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள முக்­கி­ய­மான சவால்கள், பிரச்­சி­னைகள், அழுத்­தங்கள் என்­பன அறிக்­கை­யி­டப்­பட்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் விரைவில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்­லிம்­களின் தேசிய ரீதி­யி­லான பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­ப­தியைக் கோர­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் 20ஆவது திருத்­தத்­திற்கும் 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்­டத்தின் இரண்­டா­வது வாசிப்­புக்கும் ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­யொன்று கடந்த வாரம் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம் பெற்­றது.
இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது நிதி­ய­மைச்சர் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் சவால்­களை பட்­டி­ய­லிட்டு தரு­மாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வேண்­டி­யி­ருந்தார். இதற்­க­மை­யவே முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் மற்றும் சவால்கள் தொடர்­பான அறிக்­கை­யொன்று ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

நிதி­ய­மைச்­ச­ரு­ட­னான பேச்சு வார்த்தை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இக்­கட்­டான சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் அர­சுக்கு தாம் ஆத­ரவு வழங்கி வரு­வ­தா­கவும், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­டா­த­வி­டத்து அரசை ஆத­ரிப்­பதில் எந்தப் பலனும் இல்லை என்­பதை நிதி­ய­மைச்­ச­ருக்கு நாம் தெளி­வு­ப­டுத்­தினோம்

நிதி­ய­மைச்­சரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­னை­க­ளையும் சவால்­க­ளையும் நாம் பட்­டி­ய­லிட்­டுள்ளோம்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் சமூ­கத்­துக்கு பாதிப்­பில்­லாமல் மேற்­கொள்­ளப்­பட வேண்டும், காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்­பான ஞான­சா­ர­தே­ரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை இலக்­காகக் கொண்டு செயற்­ப­டக்­கூ­டாது.
வட­கி­ழக்கு முஸ்­லிம்­களின் காணிப்­பி­ரச்­சி­னைகள் நியா­ய­மான முறையில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்­களின் பரம்­பரை காணிகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­கள் உட்­பட ஏனைய பகு­தி­களில் பிர­தேச செய­லாளர் பிரிவு எல்லை நிர்­ண­யங்கள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
அத்­தோடு மாட­றுப்­ப­தற்­கான தடை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும். மேலும் அர­சாங்கம் முஸ்­லிம்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களில் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளும்­போது முஸ்லிம் சமூ­கத்தின் மக்கள் பிர­தி­நி­தி­களை கலந்­தா­லோ­சிக்­க வேண்டும். கலந்­தா­லோ­சிக்­காது திடீ­ரென தீர்­மா­னங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது போன்ற கோரிக்கை உட்­பட மேலும் பொது­வான கோரிக்­கை­க­ளையும் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­க­வுள்ளோம்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பினை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவே ஏற்பாடு செய்துள்ளார். விரைவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கடந்தவாரம் இடம் பெற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், நஷீர் அஹமட், ஏ.ஆர்.இஷாக், அலிசப்ரி ரஹீம்,எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.