ஜெய்லானி கொடியேற்றத்தில் நெல்லிகல தேரரும் பங்கேற்பு

0 633

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூர­கல – தப்தர் ஜெய்­லானி பிர­தே­சமும், பள்­ளி­வா­சலும் கதிர்­காமம் மற்றும் சிவ­னொளிபாத­ மலை புனித ஸ்தலங்கள் போன்று இன நல்­லு­ற­வினை வளர்க்கும் மைய­மாக மாற வேண்டும். ஜெய்­லானி வரு­டாந்த கொடி­யேற்று நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்­தமை தொடர்பில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்’ என நெல்லிகல வத்துரே கும்புர தம்மரதன தேரர் தெரிவித்தார்.

தம்­ம­ர­தன தேரர் கடந்த 5 ஆம் திகதி ஜெய்­லானி பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற கொடி ஏற்றும் வைப­வத்தில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்து கொண்டார்.

கொடி­யேற்றும் வைபவம் கடந்த 6 ஆம் திகதி நடை­பெற இருந்­தாலும் அன்­றைய தினம் கூர­கல பன்­ச­லையில் ‘கட்­டின பிங்கம’ ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­ததால் பள்­ளி­வா­சலின் நிகழ்வு கடந்த 5 ஆம் திக­திக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது.

அங்கு நெல்­லி­கல தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘ஜெய்­லா­னியில் முஸ்­லிம்­களின் மதக்­கி­ரி­யை­க­ளுக்கு எவ்­வித தடை­யு­மில்லை எதிர்­வரும் வரு­டங்­களில் கொடி ஏற்றும் வைபவத்தை மேலும் சிறப்பாக ஒன்றிணைந்து முன்னெடுப்போம்’ என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.