200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்

0 631

உலகின் மிகப்­பெ­ரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலை­ஞர்கள் உரு­வாக்கி வரு­கின்­றனர்.

புகழ்­பெற்ற பாகிஸ்­தா­னிய கலை­ஞ­ரான ஷாஹித் ரஸ்ஸாம் தலை­மையில் சுமார் 200 கலை­ஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர். உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிர­தியைத் தயா­ரிக்கும் இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு பூர்த்­தி­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தானின் கராச்சி நக­ரி­லுள்ள கலை­க­ளுக்­கான கவுன்சில் அலு­வ­ல­கத்தில் இந்தப் பணி நடந்து வரு­கி­றது. குர்­ஆனின் எழுத்­துக்கள் அலு­மி­னி­யத்தில் வெட்டப்­பட்டு, அதன் மேல் தங்க முலாம் பூசப்­பட்டு பரந்த துணியில் பொறிக்­கப்­ப­டு­கி­றது.

இந்த அரிய கலைப்­ப­டைப்பு 8.5 அடி நீளமும் 6.5 அடி அக­லமும் கொண்­டது. இந்த பாரிய குர்ஆன் மொத்­த­மாக 550 பக்­கங்­களைக் கொண்­டி­ருக்கும். சுமார் 200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலு­மி­னியம், மற்றும் 600 ரோல் துணி என்­பன மூலம் குர்­ஆ­னி­லுள்ள 77430 வார்த்­தை­களை இது உள்­ள­டக்­கி­யி­ருக்கும். அது மட்­டு­மன்றி, பல்­வேறு வகை­யி­லான விலை­ம­திப்­பற்ற மாணிக்க கற்­களும் இந்த குர்­ஆனின் வடி­வ­மைப்பை மெரு­கூட்ட பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இத்­தா­லியில் தற்­போது கையா­ளப்­படும் விசேட தொழில்­நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­படும் இந்தக் குர்ஆன் சுமார் 1000 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அழி­யா­தி­ருக்கும் என ரஸ்ஸாம் கூறு­கிறார்.

இந்த திட்­டத்­திற்­காக தினமும் சரா­ச­ரி­யாக 10 மணித்­தி­யா­லங்கள் தாம் வேலை செய்து வரு­வ­தாக அவர் குறிப்­பி­டு­கிறார்.

2017 இல் ஆப்­கா­னிஸ்­தானில் தயா­ரிக்­கப்­பட்ட குர்­ஆனே இது­வரை உலகின் மிகப் பெரிய குர்ஆன் என கரு­தப்­பட்டு வந்­தது. அது 6.5 நீளமும் மற்றும் 4.5 அடி அக­லமும் கொண்­ட­தாகும். இக் குர்ஆன் பிரதி தற்­போது ரஷ்­யாவின் கசான் நகரில் உள்ள குல் ஷெரீப் பள்­ளி­வா­சலில் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.

வழக்­க­மாக குர்­ஆனின் பிர­திகள் மரம், காகிதம், விலங்­கு­களின் தோல்கள் மற்றும் துணி போன்ற பொருட்­களைப் பயன்­ப­டுத்­தியே தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், அலு­மி­னியம் தக­டு­களால் குர்­ஆனின் ஒவ்­வொரு எழுத்தும் வெட்­டப்­பட்டு தயா­ரிக்­கப்­ப­டு­வது 1,400 ஆண்­டு­க­ளுக்கும் மேலான இஸ்­லா­மிய வர­லாற்றில் இதுவே முதல் முறை­யாகும் என ரஸ்ஸான் குறிப்­பி­டு­கிறார்.

“இந்த திட்டம் மிகவும் சவா­லா­னது, ஏனெனில் இது குர்­ஆனின் புனி­தத்­தோடு தொடர்­பு­டை­யது, ஒரு சிறிய தவறு நடந்­தாலும் அது அனைத்து முயற்­சி­க­ளையும் பாழாக்­கி­விடும்” என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

இந்த திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டுள்ள ‘சூரா அர் ரஹ்மான்’ ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் மிகப் பிர­மாண்­ட­மாக ஆரம்­ப­மா­கி­யுள்ள ‘டுபாய் எக்ஸ்போ 2020’ கண்­காட்­சியில் எதிர்­வரும் நவம்பர் மாதம் முதல் பொது மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

துருக்­கிய, அரபு மற்றும் ஈரா­னிய கலை வடி­வ­மைப்­பு­களை ஆழ­மாகக் கற்ற பின்னர் தமது குழு இந்தக் குர்­ஆன் பிரதியைத் தயா­ரிப்­ப­தற்­கென தங்கள் சொந்த வடி­வ­மைப்பை உரு­வாக்­கி­ய­தாக ரஸ்ஸாம் கூறினார்.

தனது சொந்த நிதியைப் பயன்­ப­டுத்­தியே திட்­டத்தை தொடங்­கி­ய­தாக கூறும் கலைஞர் ஷாஹித் ரஸ்ஸாம், பாகிஸ்தான் அர­சாங்­கத்­தி­னதோ அல்­லது வேறு எந்த நிறு­வ­னத்­தி­னதோ நிதி உத­விகள் தமக்கு கிடைக்­க­வில்லை என்றும் குறிப்­பி­டு­கிறார். இருப்­பினும், இந்தத்திட்டத்தில் பங்கேற்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் தன்னை அணுகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தனது இந்தப் பணி இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக மட்­டு­மன்றி இஸ்­லா­மிய கலை மற்றும் கலாசா­ரத்­தின்பால் பல்­வேறு மதங்­களைச் சேர்ந்­த­வர்­களை ஈர்க்கும் நோக்கம் கொண்­டது என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.