உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களை நான் பாது­காத்தேன்

பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித்

0 675

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் சில­ரினால் மாத்­திரம் நடத்­தப்­ப­ட­வில்லை. இதன் பின்­னணி பாரி­ய­தாகும். இந்தப் பாரிய பின்­னணி என்ன என்­பதை நாம் அறிந்து கொள்­ள­வேண்டும். அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக அவர்­களைப் பயன்­ப­டுத்­தி­யது யார் என்­பதை நாம் அறிந்து கொள்­ள­வேண்டும். இந்த உண்­மையை அறிந்து கொள்ளும் வரை நாங்கள் திருப்­தி­யுற மாட்டோம்.’ என பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தெரி­வித்தார்.

இலங்­கையின் நீதிக்­கான ஒன்­றியம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்­கை­யர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக தெளி­வூட்டும் வகையில் ஏற்­பாடு செய்­தி­ருந்த கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யிலே பேராயர் இவ்­வாறு தெரி­வித்தார். சூம் தொழி­நுட்­ப­மூ­டாக கடந்த 16 ஆம் திகதி இக்­க­லந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.பேராயர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்கு நீதி பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான எமது போராட்­டத்­துக்கு சர்­வ­தேச சமூகம் ஒத்­து­ழைக்க வேண்டும். தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? உண்­மையில் என்ன நடந்­தது. யார் அதனைச் செய்­தார்கள்? என்­பதை அறிந்து கொள்ள உத­வ­வேண்டும். தங்­க­ளது அர­சியல் இலக்கை அடைந்து கொள்­வ­தற்­கா­கவே இத்­தாக்­குதல் நடத்தப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி, ஜனா­தி­பதி தேர்தல் மேடை­களில் பல்­வேறு பிர­சா­ரங்­களை மேற்­கொண்டார். தான்­ப­த­விக்கு வந்­ததும் உயிர்த்த ஞாயிறு ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தா­கவும் அனைத்து பரிந்­து­ரை­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று கூறினார். பொது மக்­க­ளிடம் உறுதி மொழி­களை வழங்­கினார்.

ஆனால் அவர் பத­விக்கு வந்து,ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டதும் உட­ன­டி­யாக அமைச்­சர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அர­சியல் தீர்­மா­ன­மொன்­றினை எடுத்தார். அது சுயா­தீ­ன­மான தீர்­மா­ன­மல்ல,ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள எந்த பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, எவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆணைக்­குழு அறிக்­கையின் பிர­திகள் அவ­ருக்குக் கிடைக்­கப்­பெற்று இரு தினங்­களின் பின்பு ஜனா­தி­பதி என்னைத் தொடர்பு கொண்டார். ‘அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அனைத்து விட­யங்­க­ளையும், பரிந்­து­ரை­க­ளையும் அமுல்­ப­டுத்­த­மு­டி­யாது. அர­சாங்கம் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தாத. அவ்­வாறு அமுல்­ப­டுத்­தினால் நான் மக்கள் மத்­தியில் செல்­வாக்­கி­ழந்­து­வி­டு­வேன்’­என்று தெரி­வித்தார்.
இன்று நேரம் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது. அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள சந்­தே­கத்­துக்­கி­ட­மான விட­யங்கள் தொடர்பில் சட்­டமா அதிபர் உளவு முக­வர்­களை விசா­ரணை நடத்­து­மாறு கேட்­க­வேண்­டு­மென ஆணைக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளது.ஆனால் இந்தப் பரிந்­துரை இது­வரை அமு­லா­க­வில்லை. தற்­போ­தைய அர­சாங்­கமும் தலை­மைத்­து­வமும் இவ்­வி­ட­யத்தில் அக்­க­றை­யின்றி இருக்­கி­றது.

நாம் எவ­ரையும் பழி­வாங்­க­வி­ரும்­ப­வில்லை. இந்த தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­ற­போது, அதன்­பின்பு இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மோச­மான வன்­மு­றைகள் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பி­ருந்­தது. நாம் இதனைத் தடுத்தோம். முஸ்­லிம்­களைத் தாக்க வேண்டாம் பொறு­மை­யாக இருங்கள் என்று எமது மக்­களை வேண்­டினேன். தொடர்ச்­சி­யாக இந்த வேண்­டு­கோளை முன்­வைத்து முஸ்­லிம்­களைப் பாது­காத்தேன்.
தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தாம­தி­யாது நீதி வழங்­கப்­பட வேண்டும். தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்த சூத்­த­ர­தா­ரிகள் இனம் காணப்­படும் வரை எம்மால் திருப்­தி­ய­டைய முடி­யாது’ என்று கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.