திறந்த சிறைக்குள் ஒடுங்கி வாழும் முஸ்லிம்கள்

0 545

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்­கையின் சில்­லறை வியா­பா­ரத்தின் முது­கெ­லும்­பாக இருந்து, முதலில் தலை­யிலே பொருட்­பொதி சுமந்து நடை­ந­டையாய் திரிந்தும், பின்னர் தாவ­ள­மாட்டு வண்­டி­க­ளிலும் அதன்பின் சைக்கிள் வண்­டி­க­ளிலும் ஊரூராய் அலைந்தும், கோடை வெய்­யிலிற் காய்ந்தும் மாரி மழை­யினில் நனைந்தும், பட்­ட­ணத்துப் பொருள்­களை கிரா­மங்­க­ளுக்கும், கிரா­மங்­களின் உற்­பத்­தி­களைப் பட்­ட­ணங்­க­ளுக்­கு­மாகக் கொண்­டு­சென்று விநி­யோ­கித்து, கால­வோட்­டத்தில் வீதி­யோ­ரங்­க­ளிலே கடை­களைத் திறந்து, அந்தச் சில்­லறை வியா­பா­ரத்­தின்­மூலம் நாலு காசு சம்­பா­தித்துத் தமது குடும்­பங்­களைக் காப்­பாற்­றிய சுறு­சு­றுப்பும் விடா­மு­யற்­சி­யு­முள்ள ஒரு முஸ்லிம் சமூகம், இன்று ஒடுங்­கிக்­கொண்டு, வியா­பார வாய்ப்­பு­க­ளையும் தொழில் வாய்ப்­பு­க­ளையும் ஏன் மனித உரி­மை­க­ளை­யும்­கூட இழந்து, சாணக்­கி­யமும் தூர­நோக்கும் இனப்­பற்றும் இல்­லாத முஸ்லிம் தலைவர்களை வைத்­துக்­கொண்டு நீதி கேட்டுத் தவிப்­பதேன்? முழு நாடுமே முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு திறந்த சிறைபோல் மாறி­ய­தேன்? அங்கே நட­மாடும் பிணங்­கா­ளக அவர்கள் காணப்­ப­டு­வதேன்? இவ்­வி­னாக்­க­ளுக்கு விடை காண்­ப­தாயின் ஒரு நூலே எழு­தி­வி­டலாம். ஆனால் சில குறிப்­பு­க­ளை­மட்டும் இக்­கட்­டுரை வரை­கின்­றது.

பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம்
சுதந்­திர இலங்­கையின் வர­லாற்­றிலும் அர­சி­ய­லிலும் மிகவும் துல்­லி­ய­மாக வெளிப்­படும் ஓர் அமிசம் அங்கே திட்­ட­மிட்டு வளர்க்கப்­பட்ட பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம். அதன் இலக்கு இலங்­கையை ஒரு தனிச் சிங்­கள பௌத்த நாடாக உரு­வாக்கி அங்கு வாழும் சிறு­பான்மை இனங்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக மாற்­று­வதே. இந்த இலக்­கைத்தான் மிகத்­தெ­ளி­வாக 2019ஆம் ஆண்டு ஆனி மாதம் கண்டி நகரில் நடை­பெற்ற ஒரு பகி­ரங்கக் கூட்­டத்தில் பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர், “இந்த நாடு சிங்­கள மக்­க­ளுக்கே சொந்­த­மான ஒரு நாடு; அவர்களின் தய­வி­லேதான் ஏனையோர் வாழ­லாம்”, என்று கூறி உறு­திப்­ப­டுத்­தினார். இன்­று­வரை பெரும்­பான்மை இனத்­த­வரின் எந்த ஓர் அர­சி­யல்­வா­தியோ தலை­வனோ அந்தக் கூற்றை நிரா­க­ரித்துப் பகி­ரங்­கத்தில் பேச­வில்லை, ஒரு­வ­ரைத்­த­விர. அவர்தான் காலஞ்­சென்ற மங்­கள சம­ர­வீர. ஞான­சா­ரரின் கூற்றை பகி­ரங்­க­மா­கவே அவர் நிரா­க­ரித்து இந்த நாடு எல்லா இனங்­க­ளுக்கும் சொந்தம் என்று சொன்­னதால் பௌத்த சங்­கத்­தி­ன­ரி­டை­யே­யுள்ள சில பேரி­ன­வாத பிக்­குகள் அவரை ஓர் இனத் துரோ­கி­யென்றே கூறி அவரை பௌத்த வைப­வங்­க­ளி­லி­ருந்து விலக்­கி­வைத்­தனர்.

இலங்­கையை ஒரு தனிச் சிங்­கள பௌத்த நாடாக மாற்றும் திட்டம் 1949ஆம் ஆண்டில் இந்­திய வம்­சா­வளித் தமி­ழரின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கு­வ­தற்­காக நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தா­வுடன் ஆரம்­ப­மா­னது. அந்த மசோ­தா­வுக்கு இலங்கைத் தமி­ழரின் பிர­தி­நி­திகள் சிலரும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தி­களும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை இந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் நடந்த ஓர் முரண்­ந­கைச்­சு­வை­யான சம்­ப­வ­மெனக் கூறலாம். ஏன்? அதை துரோகம் என்றே கூறலாம். பேரி­ன­வாதம் தமது இனங்­க­ளையும் வருங்­கா­லத்தில் நசுக்கும் என்­பதை அத்­த­லைவர்கள் அன்று உண­ரத்­த­வ­றி­யது அவர்களின் அறி­யா­மையா அல்­லது பெரும்­பான்மைத் தலை­மைத்­து­வத்தின் தயவை எதிர்­பார்த்தா?

இந்­தியத் தமிழர்களை அந்நி­ய­ராக்­கிய பேரி­ன­வாதம் 1950களி­லி­ருந்து இலங்கைத் தமிழர்மேல் அதன் கவ­னத்தைத் திருப்­ப­லா­யிற்று. நாடா­ளு­மன்­னறச் சட்­டங்கள், அப்­பட்­ட­மான அர­சாங்க உத்­தி­யோக ஒதுக்கல், பார­பட்­ச­மான கல்வித் திட்­டங்கள், இனக்­க­ல­வ­ரங்கள் என்­ற­வாறு பல்­வேறு வகை­களில் அந்த இனத்தை நசுக்கப் பேரி­ன­வாதம் முற்­பட்­டது. தமி­ழினம் எதிர்க்கத் தொடங்­கிற்று. சாத்­வீகப் போராட்­ட­மாக ஆரம்­பித்த அதன் எதிர்ப்பு பின்னர் நாடா­ளு­மன்ற பகிஷ்­க­ரிப்­பாக மாறி ஈற்றில் ஆயு­தப்­போ­ராட்­ட­மாக உரு­வெ­டுத்து சுமார் கால் நூற்­றாண்­டு­கா­ல­மாக நீடித்­தபின் 2009ல் அர­சாங்கப் படை­களின் வெற்­றி­யுடன் அப்போர் முடி­வுக்கு வந்­தது. ஆயினும் தமி­ழி­னத்தின் எதிர்ப்பு இன்னும் வேறு­வ­ழி­க­ளிலே தொடர்கிறது. ஆண்ட பரம்­பரை அடி­மை­யாக வாழ விரும்­புமா?

வர­லாற்றின் புதி­யதோர் அத்­தி­யாயம்
போர் முடிந்­த­வுடன் வெற்­றிக்­க­ளிப்­போடு நாட்­டு­மக்­களை நோக்கி உரை­யாற்­றிய அன்­றைய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச, இனிமேல் இலங்­கையில் சிங்­க­ளவர்களோ தமிழர்களோ முஸ்­லிம்­களோ இருக்க மாட்­டார்கள், இலங்­கையர் மட்­டுமே இருப்­ப­ரெனக் கூறி­யதும் அதனைக் கேட்டோர் ஒரு நீண்ட ஆறுதல் பெரு­மூச்சு விட்­டனர். நாடு இனி­யா­வது ஒரு புதுப்­பா­தைக்குத் திரும்­பு­மெ­னவும் அங்கே அனைத்து மக்­களும் சம­மாக மதிக்­கப்­ப­டுவர் எனவும் எண்ணி ஆனந்­த­ம­டைந்­தனர். ஆனால் அவ்­வு­ரையைக் கேட்ட பலமும் செல்­வாக்கும் நிறைந்த ஒரு பேரி­ன­வா­தக்­குழு ஜனா­தி­ப­தியின் கூற்றை ஆமோ­திக்­க­வில்லை. அவர்களின் முழு­நோக்­கமும் இலங்­கையை ஒரு பூரண சிங்­கள பௌத்த நாடாக மாற்­றி­ய­மைப்­பதே. அந்த நோக்கம் தமி­ழி­னத்தைத் தாழ்­ப­டிய வைப்­பதால் மட்டும் நிறை­வே­றாது. அக்­கு­ழு­வி­னரின் பார்­வையில் இன்­னு­மொரு சிறு­பான்மை இனத்­தையும் முடி­யு­மானால் நாட்­டை­விட்டே துரத்­தி­னா­லன்றி அந்த இலட்­சியம் நிறை­வே­றா­தெனத் தெரிந்­தது. அந்தச் சிறு­பான்­மை­யி­னரே முஸ்­லிம்கள். பேரி­ன­வா­தத்தின் பார்வை 2009லிருந்து முஸ்­லிம்­கள்மேல் திரும்­ப­லா­யிற்று. இது இலங்­கையின் வர­லாற்றில் ஒரு புதிய அத்­தி­யாயம்.

ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்­கை­ய­ரா­கவும் மற்­றைய இனங்­க­ளுடன் இணைந்­தவர்களா­கவும் வாழ்ந்து இந்த நாட்டின் மண்­ணுடன் ஒட்­டி­யு­ற­வா­டிய ஓர் இனம் போருக்குப் பின்னர் அந்நியர் என்ற அவ­லப்­பெ­ய­ருக்கு பேரி­ன­வா­தி­களால் ஆளாக்­கப்­பட்­டது முதற்­த­ட­வை­யல்ல. இந்தப் பெயரின் உண்­மை­யான தோற்றம் 19ஆம் நூற்­றாண்டின் இறு­திக்­கால்­வா­சியில் எழுந்­தது. இன்று தேசத்­த­லை­வ­ரெனப் போற்­றப்­பட்டுக் கொண்­டா­டப்­படும் அந­கா­ரிக தர்மபா­லதான் அன்று முஸ்­லிம்­களை அந்நியர் என்­ற­ழைத்து, அவர்கள் நாட்­டை­விட்டும் அரே­பி­யா­வுக்கு வெளி­யேற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் குர­லெ­ழுப்பி, 1915இல் இலங்­கையின் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக சிங்­கள முஸ்லிம் இனக்­க­ல­வ­ர­மொன்­றையும் தோற்­று­வித்தார். அவரின் குரலின் எதி­ரொ­லி­யா­கத்தான் இன்­றைய பௌத்த பேரி­ன­வாத வழித்­தோன்­றல்­களின் குரலும் கேட்­கின்­றது. 2019இல் வெடித்த அளுத்­கம கல­வரம் அந்த எதி­ரொ­லியின் விளைவே. அந்தக் கல­வ­ரத்தின் முக்­கிய கர்த்தாவாக விளங்­கி­யவர் காவி­யுடைத் துறவி ஞான­சாரர் என்­பதை உண­ரும்­போது 19ஆம் நூற்­றாண்டில் எழு­தப்­பட்ட இஸ்­லா­மோ­போ­பிய அத்­தி­யா­யத்தின் இரண்டாம் பாகுதி போருக்­குப்பின் ஆரம்­பித்­துள்­ளது என்­பதை வலி­ய­றுத்தத் தேவை­யில்லை.

அளுத்கமயைத் தொடர்ந்து அம்­பாறை, திகன, ஜிந்­தோட்டை என்­ற­வாறு அடுக்­க­டுக்­காக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் பௌத்த பேர­ன­வா­தி­களால் அவிழ்த்து விடப்­பட்­டன. பொது பல சேனாவுடன் சிங்ஹ லே, இரா­வண பலய, மஹசொன் பல­கய போன்ற சில புதிய பேரி­ன­வாத அவ­தா­ரங்­களும் இணைந்து இஸ்­லா­மோ­போ­பி­யாவை வேக­மாக வழி­ந­டத்திச் சென்­றனர். மகிந்த ராஜ­பக்ச இரண்­டா­வது முறை­யாக ஜனா­தி­ப­தி­யா­கிய காலம் தொடக்கம் நல்­லாட்சி அர­சாங்கக் காலத்­தி­னூ­டாக கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­பதி காலம்­வரை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அநீ­தி­களும் வன்­மு­றை­களும் நீடித்­தன. ஆட்­சி­யாளர்களோ அனைத்­தையும் கண்டும் காணா­த­துபோல் வாளா­வி­ருந்­தனர். சுதந்­திர இலங்­கையில் நடை­பெற்ற எந்த ஒரு இனக்­க­ல­வ­ரத்­தின்­பின்­னரும் (1983 உட்­பட) பெரும்­பான்மை இனத்தின் எந்­த­வொரு கல­கக்­கா­ர­னை­யா­வது அர­சாங்­கங்கள் நீதிக்­குமுன் நிறுத்­தி­ய­துண்டா? இல்­லவே இல்­லையே. ஆதலால் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைத்­தவர்களை அரசு தண்­டிக்­கு­மென்று எப்­படி எதிர்­பார்க்­கலாம்? எனினும் தமி­ழி­னத்­தைப்­போன்று முஸ்­லிம்கள் எதிர்த்துப் போரா­ட­வில்லை. அர­சாங்­கத்­தையே தமக்கு நீதி வழங்­கு­மாறு தொடர்ந்து வேண்­டினர். (தொடரும்)  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.