“ஜெய்லானிக்கு முஸ்லிம்கள் தாராளமாக வரலாம்!”

0 750

ஏ.ஆர்.ஏ.பரீல்

“நான் புனித குர்­ஆனைப் படித்­தி­ருக்­கிறேன். சிங்­கள பெளத்­தர்­க­ளி­னது மாத்­தி­ர­மல்ல ஏனைய சம­யங்­களின் கலா­சா­ரங்­க­ளையும் மர­பு­ரி­மை­க­ளையும் மதிக்­கிறேன். தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை எனது சொந்த செலவில் புனர் நிர்­மாணம் செய்து தரு­வ­தற்கும் தயா­ராக இருக்­கிறேன்”. என நெல்­லி­ய­கல, வத்­துரே கும்­புர தம்­ம­ர­தன தேரர் தன்னைச் சந்­தித்த தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வா­கி­க­ளிடம் தெரி­வித்தார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபையின் தலைவர் என்.இப்­திகார் அஸீஸ் தலை­மையில் நிர்­வாக சபை­யினர் அண்­மையில் ஜெய்­லா­னியில் நெல்­லி­ய­கல,வத்­துரே கும்­புர தம்­ம­ர­தன தேரரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். அக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் எவ­ருக்கும் தமது சம­யத்­தைப்­பின்­பற்­று­வ­தற்கு பூரண சுதந்­திரம் உள்­ளது. கூர­க­லயில் முஸ்­லிம்கள் தமது சமய கட­மை­களை முன்பு போல் நிறை வேற்­று­வ­தற்கு எவ்­வித தடையும் இல்லை. எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்­லாது உங்­க­ளது சமய கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நாம் அனு­ம­தி­ய­ளித்­துள்ளோம். பள்­ளி­வாசல் மற்றும் பள்­ளி­வா­சலின் உள்ளே அமைந்­துள்ள ஸியாரம் என்­ப­வற்­றுக்கு எம்மால் எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.

கூர­கல பெளத்­தர்­க­ளி­னதும் புனித பூமி­யாகும். சிவ­னொ­ளிபா­த­மலை, மற்றும் கதிர்­காமம் புனித தலங்கள் போன்று கூர­க­லை­யையும் நாம­னை­வரும் சமய நல்­லி­ணக்­கத்­துக்­கான இட­மாகக் கரு­துவோம். இங்கு நாம் அமைத்­துள்ள வாகன தரிப்­பிடம் மற்றும் கட்­ட­மைப்பு வச­தி­களை முஸ்­லிம்­களும் பயன்­ப­டுத்­தலாம்.

என்னைப் பற்றி சமூக வலைத்­த­லங்­களில் தவ­றாக பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வ­னல்ல. இது பற்றி நீங்கள் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என்றார்.
இதேவேளை ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் எதிர்­கா­லத்தில் நாம் எவ்­வாறு இணைந்து செயற்­பட முடியும் என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே வந்­துள்ளோம். நீங்கள் என்ன கூறு­கி­றீர்­களோ அதன்­படி செயற்­ப­டத்­த­யா­ராக உள்ளோம் என்று தெரி­வித்­தார்கள்.

புதிய நிர்­வாக சபையின் தலைவர் என்.இப்­திகார் அஸீஸ் அங்கு உரை­யாற்­று­கையில், ‘கொவிட்-19 வைரஸ் பரவல் கார­ண­மாக நாம் எமது பத­வி­களை பொறுப்பேற்­பதில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. இன்று பள்­ளி­வா­சலும் அத­னுள்ள ஓய்­வ­றையும் எம்­மிடம் உள்­ளது. அனைத்­தையும் முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­த­மு­டியும் என நெல்­லி­கல தேரர் தெரி­வித்­துள்ளார்.

கூரகல, தப்தர் ஜெய்லானியின்
புதிய நிர்வாக சபை
  • என்.இப்திகார் அஸீஸ் – தலைவர்
  • அம்ஜாத் சாஹிர் மெளலானா – செயலாளர்
  • நகீப் மெளலானா – உதவித் தலைவர்
  • ரொசானா அபுசாலி – உதவித் தலைவி
  • என்.நிஸ்தார் சாலி
  • எ.என்.ஜே.எம்.ஜவுபர்
  • என்.ஐ.சரீப்தீன் – பொருளாளர்
  • என்.ஜே.மலிக் ஷா
  • டி.எ.எம்..மொஹிதீன்
  • எ.சி.எம்.பாஹிர்
  • எம்.பி.எம்.அபூபக்கர்

இன்று இங்கு பாதை கட்­ட­மைப்பு வச­திகள் தேர­ரினால் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன. பாரிய வாகன தரிப்­பி­டமும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் வழ­மை­போன்று தமது சமய நட­வ­டிக்­கை­களை இங்கு தொடர முடியும். முஸ்­லிம்கள் நாம் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் எமது கட­மை­களை முன்­னெ­டுப்போம்’ என்றார்.

நிர்­வாக சபை உறுப்­பினர் ஜெமால்தீன் மொஹமட் ஜவுபர் உரை­யாற்­று­கையில் ‘ இலங்­கையில் முஸ்­லிம்கள் சுமார் 1200 வரு­டங்­க­ளுக்கும் மேலாக பெரும்­பான்மை இனத்­துடன் நட்­பு­ற­வுடன் வாழ்ந்து வரு­கி­றார்கள். எமது நாட்­டுக்கு வருகை தந்த ஆன்­மிக தலை­வர்­களை கண்­ணி­யப்­ப­டுத்தும் இடங்கள் உள்­ளன. அவற்றில் ஜெய்­லா­னியும் ஒன்று. கூர­கல முஸ்­லிம்­களின் பூர்­வீக இட­மென்­றாலும் இங்கு பெளத்­தர்­க­ளுக்கும் பூர்­வீகம் இருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.

இங்கு முஸ்­லிம்­க­ளுக்கு சில பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக சிலர் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்று நாம் நெல்­லி­ய­கல தேர­ருடன் கதைத்தோம். அவர் உண்­மையில் தங்­க­மான மனிதர் என்­பது அவ­ருடன் கதைத்­த­தி­லி­ருந்து தெரிய வந்­தது.

அவர் எமக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார். ரபியுல் அவ்­வலில் இங்கு கொடி­யேற்றம். நவம்­பரில் பெரும் கந்­தூரி வைபவம் நடை­பெறும். நாம் இன, மத, கொள்கை வேறு­பா­டு­க­ளின்றி இவ்­வி­ட­யத்தில் ஒன்­றி­ணைவோம்.

இங்கு பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக சமூக ஊட­கங்கள் பிர­சாரம் செய்­கின்­றன. இங்கு எவ்­வித பிரச்­சி­னை­களும் இல்லை என்­பதை பேச்சு வார்த்­தையின் பின்பு நாம் உறு­திப்­ப­டுத்திக் கொண்­டுள்ளோம். கூர­க­லயில் பெளத்­தத்­திற்கு முதலிடம் வழங்கி சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இதே­வேளை ஜெய்­லானி பள்­ளி­வாசல் எல்­லைக்குள் பள்ளி வாச­லி­லி­ருந்தும் 100 மீற்றர் தூரத்தில் அமைந்­தி­ருக்கும் தொல்­பொருள் சின்­னங்­க­ளான இரு ஸியா­ரங்கள் இனந்­தெ­ரி­யா­தோரால் மண்­ணினால் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளன. இந்த ஸி­யா­ரங்கள் பல தசாப்­தங்கள் பழமை வாய்ந்­த­தாகும் என்­றாலும் இந்த ­ஸி­யா­ரங்கள் தொடர்பில் நெல்­லி­ய­கல தேரர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.