பள்ளிகளில் கூட்டு அமல்களுக்கு தடை

0 508

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சுகா­தார அமைச்சு மற்றும் புத்­த­சா­சன, மத­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பங்கள், கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­வா­கவே பள்­ளி­வா­சல்­களில் கூட்­டுத்­தொ­ழு­கைகள், கூட்­டாக குர்ஆன் ஓதுதல், நிக்காஹ் வைப­வங்கள் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பாக அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மீறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் விப­ரிக்­கையில் ‘இந்தக் கட்­டுப்­பா­டுகள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, பன்­ச­லை­க­ளுக்கும், கோயில்­க­ளுக்கும், ஆல­யங்­க­ளுக்கும் அமு­லாகும்’. சிலர் இக்­கட்­டுப்­பா­டுகள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மாத்­திரம் தான் என பிர­சாரம் செய்­வதில் எந்த உண்­மை­யு­மில்லை. சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள கொவிட் 19 வழி­காட்­டல்கள் அடங்­கிய PA/DDGPHS 11/3/ COVID/ 2020 Sub 6/4 எனும் இலக்க 30.09.2021 ஆம் திக­திய சுற்று நிரு­பத்தில் 26 ஆம் பிரிவில் இவ்­வி­பரம் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டை­யிலே புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு பள்­ளி­வா­சல்­களில் ஒரே நேரத்தில் 25 பேர் கூட்­டாக அல்­லாது தனித்து சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றி தொழ முடி­யும்­என சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் மறு அறி­வித்தல் விடுக்­கப்­படும் வரை பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை, ஜமா அத்­தாக ஐவேளை தொழுகை, குர்ஆன் மஜ்லிஸ்,நிக்காஹ் மஜ்லிஸ் மற்றும் ஜனாஸா தொழு­கைகள் இடம் பெற­மு­டி­யாது.

ஏற்­க­னவே பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வழி­காட்­டல்­களும் அமுலில் இருக்கும். அதா­வது பள்­ளி­வா­சல்­களில் வுழு­செய்யும் பகுதி மூடப்­பட்­டி­ருக்­க­வேண்டும். தொழு­கைக்­காக வரு­ப­வர்கள் தொழுகை விரிப்பு எடுத்­து­வரல் வேண்டும். ஒரு மீற்றர் சமூக இடை­வெளி பேணப்­ப­ட­வேண்டும். மாஸ்க் அணிந்­தி­ருக்க வேண்டும்.
வக்பு சபையின் உத்­த­ர­வுக்­க­மைய இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கும் சுற்று நிரு­ப­மொன்­றினை அனுப்பி வைத்துள்ளது. சுற்று நிருபத்தை நிர்வாகங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

சமூகத்தையும், நாட்டையும், நாட்டு மக்களையும் கொவிட் 19 இலிருந்து பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.