ஐ.நா.வில் உரை நிகழ்த்திய கண் பார்வையற்ற பாகிஸ்தான் அதிகாரி சைமா சலீம்

0 517

ஐக்­கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் இரு வாரங்­க­ளாக அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்கில் நடை­பெற்று வரு­கின்­றது. இக் கூட்டத் தொடரில் பாகிஸ்தான் சார்பில் இந்­தி­யா­வுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பாகிஸ்தான் இரா­ஜ­தந்­திரி சைமா சலீம் இன்று உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்ளார்.

இரு கண்­க­ளி­னதும் பார்­வையை இழந்த அவர், ஐ.நா. சபையில் பிரெய்ல் மொழியைப் பயன்­ப­டுத்தி உரை­யாற்­றிய முத­லா­வது கண் பார்­வை­யற்ற இரா­ஜ­தந்­திரி என்ற பெரு­மையைப் பெற்­றுள்­ளதே இதற்குக் கார­ண­மாகும்.

பிரெய்ல் மொழியில் குற்­றெ­ழுத்­துக்­களால் தயார் செய்­யப்­பட்ட உரையை, எந்­த­வித தடங்­கல்­க­ளு­மின்றி மிகத் தெளி­வாக வாசித்­தமை பாகிஸ்­தானில் மாத்­தி­ர­மன்றி உலக நாடுகள் மத்­தி­யிலும் சைமா சலீ­முக்கு பெரும் பாராட்டைத் தேடித் தந்­துள்­ளது.
“நான் மாத்­தி­ர­மன்றி முழு தேசமும் சைமாவைப் பற்றி மிகவும் பெரு­மைப்­ப­டு­கிறோம். பார்வைக் குறை­பாட்டைக் கொண்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­யாக இருந்தும் ஐ.நா.வில் ஒரு சிறந்த உரையை அவர் நிகழ்த்­தினார். திறமை உள்­ள­வர்கள் வாழ்வில் உயர பாகிஸ்தான் எப்­போ­துமே சம­மான வாய்ப்­பு­களை வழங்கும்” என அந்­நாட்டு ஜனா­தி­பதி ஆரிப் அல்வி பாராட்­டி­யுள்ளார். அதே­போன்று பாகிஸ்­தானின் அமைச்­சர்கள் பலரும் சைமாவைப் பாராட்டி டுவீட் செய்­துள்ளர். அத்­துடன் பாகிஸ்தான் மக்கள் இவரை சமூக வலைத்­த­ளங்­களில் பெரு­மை­யுடன் பாராட்டி வரு­கின்­றனர்.

ஐக்­கிய நாடுகள் சபைக்­கான பாகிஸ்­தான் வதி­விட பிர­தி­நிதி அலு­வ­ல­கத்தில் கவுன்­சி­ல­ராக கட­மை­யாற்­று­கிறார் சைமா சலீம். ஆங்­கில இலக்­கி­யத்தில் இளங்­கலை, மேற்­ப­டிப்பு முடித்த சைமா, அதே துறையில் ஆய்­வுப்­பட்­டமும் முடித்­தி­ருக்­கிறார். 2007இல் பாகிஸ்தான் மத்­திய உயர்­நிலை சேவையில் தேர்­வெ­ழுதி தேசிய ரீதி­யாக ஆறாம் இடத்தைப் பிடித்தார். ஜார்ஜ்­டவுன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் புல­மைப்­ப­ரிசில் பெற்று வெளி­வி­வ­கா­ரத்­து­றையில் மேல் படிப்­பையும் இவர் முடித்தார்.

‘ரெட்­டி­னிட்டிஸ் பிக்­மென்­டோசா’ என்ற கண் பார்வை குறை­பாடு நோயால் பாதிக்­கப்­பட்ட இவர், தனது பதி­மூன்­றா­வது வயதில் கண் பார்­வையை இழந்தார். இவ­ருக்கு உடன் பிறந்த நான்கு சகோ­தரர்கள் உள்­ளனர். அவர்­களில் இரு­வ­ருக்கு கண் பார்வை குறை­பாடு உள்­ளது. அதில் ஒரு­வ­ரான யூசுப் சலீம், நாட்­டி­லேயே முதலாவது கண் பார்வை குறைபாடுடைய நீதிபதியாக இருக்கிறார். சைமாவின் சகோதரியும் கண் பார்வை குறைபாடு மிக்கவர். அவர் லாகூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.