அரபு நாடுகளை நாடும் இலங்கை

அமைச்சர் சரத் வீர­சே­க­ரவை அரபு நாட்டு இரா­ஜ­தந்­திரி திடீ­ரென சந்­தித்­தது ஏன் ?

0 540

இலங்கை கடு­மை­யான நிதி நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருக்கும் நிலையில் கட­னு­த­வி­க­ளையும் ஏனைய பொரு­ளா­தார நலன்­க­ளையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரபு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்க அமெ­ரிக்கா சென்­றி­ருந்த ஜனா­தி­பதி கோட்­டா­பாய ராஜ­பக்ஷ நியூ­யோர்க்கில் வைத்து குவைட் நாட்டின் பிர­தமர் ஷெய்க் சபா அல் சபா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான ஐம்­பது வரு­ட­கால நெருங்­கிய தொடர்­புகள் நட்­பு­ற­வுடன் கூடிய இரா­ஜ­தந்­திர உற­வுகள் பற்றி நினை­வூட்­டிக்­கொண்ட இரு தலை­வர்­களும், இந்த தொடர்­பு­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண்­டு­மென்று வலி­யு­றுத்­திக்­கொண்­ட­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஜனா­தி­ப­தி­யுடன் நியூயோர்க் சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பின் செய­லா­ளரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை உட்­பட பல்­த­ரப்பு அரங்கில் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­பினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஆத­ர­விற்கு வர­வேற்புத் தெரி­வித்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நாடு­களை தனி­மைப்­ப­டுத்­து­வதை எதிர்ப்­ப­தா­கவும் மாறாக தேசிய பிரச்­சி­னை­களை அந்­தந்த நாடு­களே தீர்த்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் பீரிஸ்
ஈரானில் உதய கம்மன்பில

அதே­பான்று அமைச்சர் பீரிஸ் துருக்கி வெளி­வி­வ­கார அமைச்சர் மெவ்லட் சவு­ஷோ­லு­வையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது ஐக்­கிய நாடுகள் சபை உள்­ளிட்ட சர்­வ­தேசக் கட்­ட­மைப்­புக்­களில் இலங்கை – துருக்கி ஆகிய இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு இரு­நா­டு­க­ளி­னதும் வெளி­வி­வ­கார அமைச்­சர்­க­ளுக்கு இடையில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இத­னி­டையே ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் ஈரான் ஆகிய நாடு­க­ளுக்குச் சென்­றுள்ள எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில தலை­மை­யி­லான குழு­வினர் இவ்­விரு நாடு­களின் உயர்­மட்டத் தலை­வர்­க­ளுடன் எரி­பொ­ரு­ளுக்­கான உத­வி­களைப் பெற்றுக் கொள்­வது குறித்து பல பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யுள்­ளனர். அத்­துடன் அஸர்­பைஜான் எரி­சக்தி அமைச்­ச­ரு­டனும் அமைச்சர் உதய கம்­மன்­பில பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

ஐ.அ. இராச்சிய தூதரக அதிகாரியுடன் சரத் வீரசேகர

இத­னி­டையே கொழும்­பி­லுள்ள ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தூத­ரக பொறுப்­ப­தி­காரி ஹுமைத் அல் தமீமி, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ரவை கடந்த வாரம் அவ­ரது அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இச் சந்­திப்பில் பாது­காப்பு அமைச்சின் ஆலோ­சகர் பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரட்­னவும் பங்­கு­பற்­றி­யுள்ளார். இதன்­போது இரு நாடு­க­ளி­னதும் உற­வுகள் குறித்து பேசப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற போதிலும், அண்­மையில் அல்­லாஹ்வை அவ­ம­திக்கும் வகையில் தேரர் ஒருவர் வெளி­யிட்ட வெறுப்புப் பேச்சு தொடர்பில் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அதி­காரி அமைச்சர் வீர­சே­க­ரவை சந்­தித்­தி­ருக்­கலாம் என இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன. தேரரின் கருத்தை ஆத­ரிக்கும் வகையில் சரத் வீர­சே­கர பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

மேலும் அர­சாங்­கமும் அதன் அமைச்­சர்­களும் உள்­நாட்டில் முஸ்­லிம்­களை அவ­ம­திக்கும் வகையில் நடந்து கொள்­கின்ற அதே­நேரம் முஸ்லிம் நாடு­க­ளுக்குச் செல்­லும்­போதும் அதன் இரா­ஜ­தந்­தி­ரி­களைச் சந்­திக்­கும்­போதும் முஸ்­லிம்­க­ளுடன் நெருக்­க­மான உறவைப் பேணு­வது போன்று பாசாங்கு செய்­வ­தா­கவும் அர­சியல் விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.