மீண்டும் ஒரு தாக்­குதல் ?

0 7,788
  • பொய்த் தக­வல்­களால் மக்­களைக் குழப்பும் உளவுப் பிரிவு

  • ஞான­சார தேரரின் கூற்றை மெய்ப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­ற­னரா?

 

எம்.எப்.எம்.பஸீர்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தனியார் தொலைக்­காட்சி ஒன்றில் இடம்­பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்டு, இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலை ஒத்த மற்­றொரு தாக்­குதல் இடம்­பெறப் போவ­தாக கடந்த 13 ஆம் திகதி கூறி­யி­ருந்தார். அது தொடர்பில் தன்­னிடம் அனைத்து ஆதா­ரங்­களும் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த கூற்­றினை தொடர்ந்து இலங்­கையில் உளவுத் தகவல் பரி­மாற்ற கட்­ட­மைப்பின் வங்­கு­ரோத்து நிலையை உணர்த்தும் வித­மாக இரு வேறு சம்­ப­வங்கள் சமூக வலைத் தளங்கள் ஊடா­கவும் பிர­தான ஊட­கங்கள் ஊடா­கவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. ஒரு வட்ஸ் அப் குழு தகவல் பரி­மாற்ற விவ­காரம் மற்றும் போப்­பிட்­டிய தேவா­ல­யத்­துக்கு கடற்­படை குழு­வொன்று சென்று தெரி­வித்த விட­யங்­களே அவை.

ஞான­சார தேரரின் தொலைக்­காட்சி நேர்­காணல் தகவல் முதல், கடற்­படை குழுவின் எச்­ச­ரிக்கை வரை அனைத்து விட­யங்­க­ளையும் ஒரு சேர ஒன்­றி­ணைத்து ஆராயும் போது, பின்­ன­ணியில் ஏதோ ஒன்று நடக்­கி­றதா எனும் சந்­தேகம் எழு­கி­றது.

வட்ஸ் அப் பர­ப­ரப்பும் பொலி­சாரின் விளக்­கமும்:
கடந்த 25, 26 ஆம் திக­தி­களில் சமூக வலைத் தளங்­களில் பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் உள்ள உளவுப் பிரி­வொன்றின் கடி­தத்தை மையப்­ப­டுத்தி பர­ப­ரப்பு விட­யங்கள் பகி­ரப்­பட்­டன.

‘இன்டர் ஸ்கூல்’ எனும் பெயரில் வட்ஸ் அப் குழு­வொன்று செயற்­ப­டு­வ­தா­கவும், அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு சொந்­த­மா­னது எனவும், மேல் மாகாண உளவுப் பிரி­வினால் அறி­விக்­கப்­பட்ட விடயம் அடங்­கிய அறிக்­கை­யொன்றே இவ்­வாறு சமூக வலைத்­த­ளங்­களில் பரவி பர­ப­ரப்பு நிலயை ஏற்­பட்­டுத்­தி­யி­ருந்­தது.

மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புஷ்­ப­கு­மா­ர­வினால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு அனுப்­பப்­பட்ட கடி­தமே இவ்­வாறு சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு கசிந்­துள்­ளது.
அக் கடி­தத்­தி­லேயே, ‘ இன்டர் ஸ்கூல்’ எனும் பெய­ரி­லான ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் வட்ஸ் அப் குழு­வொன்று தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும், அந்த குழுவில் இணையும் எவரும் மீள அதி­லி­ருந்து விலக முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்டு விஷேட விசா­ர­ணை­களும் கோரப்­பட்­டி­ருந்­தன.

இந்த உளவுத் தகவல் கடந்த செப்­டம்பர் 23 ஆம் திகதி வியா­ழ­னன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­துடன் 24 ஆம் திகதி வெள்­ளி­யன்று அவ­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக அக்­க­டி­தத்தில் இடப்­பட்­டுள்ள குறிப்­புகள் ஊடாக தெளி­வா­கி­றது.

எவ்­வா­றா­யினும் குறித்த உளவுப் பிரிவின் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் போலி­யா­னவை என தேசிய உளவுச் சேவை (எஸ். ஐ.எஸ்.) பாது­காப்பு அமைச்­சுக்கும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கும் அறி­வித்­துள்­ளது. குறித்த கடி­தத்தில் உள்ள வட்ஸ் அப் குழு தொடர்­பி­லான தகவல் 2017 ஆம் ஆண்டு முதல் உலா வரும் விடயம் எனவும், அதனை பொர­ளையில் உள்ள மேல் மாகாண உளவுப் பிரிவு மீள கடி­த­மாக அனுப்­பி­யுள்­ளதால், அக்­க­டிதம் சமூக வலைத் தளங்­க­ளுக்கு கசிந்­துள்­ளதன் பின்­ன­ணியில் வீண் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக தேசிய உளவுத் துறை சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி பிற்­பகல் பொலிஸ் தலை­மை­யகம் விஷேட அறிக்கை ஒன்­றினை இது தொடர்பில் வெளி­யிட்­டது. அவ்­வ­றிக்­கையின் பிர­காரம், சமூக வலைத் தளங்­களில் பகி­ரப்­படும் அறிக்கை மேல் மாகாண உளவுப் பிரி­வி­னரால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டது தான் என உறுதி செய்­துள்ள பொலிஸ் தலை­மை­யகம், அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள வட்ஸ் அப் குழு தொடர்­பி­லான விடயம் உறுதி செய்­யப்­பட்ட உண்மை தகவல் அல்ல என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அத்­த­கைய விடயம் ஒன்­றினை சமூக வலைத் தளத்தில் பகிர்­வது தண்­டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள பொலிஸ் தலை­மை­யகம், இலங்கை பொலிசார் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய எந்த தக­வ­லாக இருப்­பினும் அதனை பெற்று ஆராய்ந்து அவ­சியம் ஏற்­படின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உரிய தரப்­பி­ன­ருக்கு அறி­விப்பர் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­த­கைய அறிக்கை ஒன்­றினை பகி­ரங்­க­மாக சமூக ஊட­கங்­களில் பகிர்­வது அரச இர­க­சி­யங்கள் குறித்த சட்­டத்தின் கீழும் குற்­ற­மாகும் என்றும் பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் மத்­தியில் இர­க­சி­ய­மாக பகி­ரப்­பட்ட இக் கடிதம் எவ்­வாறு சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு கசி­ய­வி­டப்­பட்­டது என்­பது குறித்தும் பொலிசார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போபிட்­டிய தேவா­ல­யத்­துக்கு சென்ற கடற்­படை குழு கூறி­ய­தென்ன?
ஜா – எல – போபிட்­டிய, சென். நிக்­கலொஸ் தேவா­லயம் மீது குண்டுத் தாக்­கு­த­லொன்று இடம்­பெறப் போவ­தாக கடந்த 28ஆம் திகதி செவ்­வா­யன்று கடற்­ப­டையின் விஷேட குழு­வினர் சென்று அங்கு சேவை­யாற்றும் ஒரு­வ­ரிடம் குறிப்­பிட்டு எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு கூறி­யுள்­ளனர். இதனை அந்த தேவா­லய அருட் தந்தை ஜயந்த நிமல் வெளிப்­ப­டுத்­திய நிலையில் பர­ப­ரப்பு நிலை ஏற்­பட்­டது.

குறித்த தினம் முற்­பகல் 10.05 மணிக்கு வெலி­சறை கடற்­படை முகா­மி­லி­ருந்து, கெப் ஒன்றில் சென்­றுள்ள கடற்­படை குழு ஒன்று, அங்கு அருட் தந்தை இருக்­காத நிலையில், தாக்­குதல் ஒன்று நடாத்­தப்­படப் போவ­தா­கவும் மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் தேவா­ல­யத்தின் பணியில் இருந்த பெண் ஒரு­வ­ரிடம் கூறி­விட்டுச் சென்­றுள்­ளனர்.
பின்னர் அருட் தந்தை ஜயந்த நிமல் தேவா­ல­யத்­துக்கு வந்து இது தொடர்பில் பேராயர் இல்­லத்­துக்கும் அறி­வித்து, விடயம் தொடர்பில் தேடிப் பார்த்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து மீண்டும் மாலை வேளை உஸ்­வெட்­ட­கொய்­யாவ முகா­மி­லி­ருந்து கடற்­படை குழு­வொன்று குறித்த தேவா­ல­யத்­துக்குச் சென்­றுள்­ள­தாக அறிய முடி­கி­றது. அந்த குழு காலையில் வெலி­சறை கடற்­படை முகா­மி­லி­ருந்து வந்த குழு­வினர் தெரி­வித்த விட­யத்தை, திருத்தம் செய்ய வந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். காலையில் கடற்­படை குழு­வினர் தெரி­வித்த விட­யங்கள் தவ­று­த­லாக இடம்­பெற்­றுள்­ள­தாக அவர்கள் தெரி­வித்து சென்­ற­தாக அருட் தந்தை ஜயந்த நிமல் தெரி­வித்­துள்ளார்.

கடற்­படை ஊடகப் பேச்­சா­ளரின் விளக்கம் :
இது தொடர்பில் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் இந்­திக டி சில்­வா­விடம் வின­விய போது, தனக்கு அது தொடர்பில் எதுவும் தெரி­யாது என பதி­ல­ளித்தார்.

பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சரின் விளக்கம்:
இது தொடர்பில் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­விடம் தனியார் தொலைக்­காட்­சி­யொன்று விளக்கம் கோரி­யுள்­ளது. அதற்கு கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரிடம் கதைத்த பின்னர் பதி­ல­ளித்­துள்ள அமைச்சர் சரத் வீர­சே­கர, குறித்த தெளி­வு­ப­டுத்தல் சம்­பவம் பாது­காப்பு கட்­ட­மைப்பின் ஒரு அங்கம் என குறிப்­பிட்­டுள்ளார்.
எவ்­வா­றா­யினும் காலையில் சென்ற குழு, அவ­சி­ய­மான அள­வுக்கும் மேல­தி­க­மாக விட­யங்­களை கூறி­யுள்­ள­தா­கவும் மாலையில் சென்ற குழு அதனை திருத்தி போது­மான விட­யங்­களை மட்டும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் சரத் வீர­சே­கர குறிப்­பிட்­டுள்ளார்.

பாது­பாப்பு அமைச்சு அறிக்கை :
இத­னி­டையே பாது­காப்பு அமைச்சின் ஊடகப் பிரிவும் நேற்று இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் ‘‘ இலங்­கையில் தேவா­ல­யங்கள் மீது குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என பகி­ரப்­படும் தக­வல்கள் இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பொது மக்கள் அச்­ச­ம­டைய வேண்­டி­ய­தில்லை என பாது­காப்புச் செய­லாளர் வேண்­டி­யுள்ளார்’’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விளை­யாட்­டாகிப் போகும் உளவுத் தக­வல்கள்?:
உண்­மையில் உளவுத் தகவல் எனும் ரீதியில் பர­ப­ரப்­பாக்கும் தக­வல்­களை மக்­க­ளி­டையே பரவச் செய்து, பின்னர் அது அப்­படி இல்லை , இப்­படி என விளக்கம் அளிப்­பதன் ஊடாக பாது­கப்பு தரப்­பினர் எதனை எதிர்ப்­பார்க்­கின்­றனர் என தெரி­ய­வில்லை. எல்­லா­வற்­றுக்கும் மேல­தி­க­மாக ஞான­சார தேரரின் கருத்­தினை தொடர்ந்து, இவ்­வாறு மக்­களை அச்­ச­ம­டையச் செய்ய வைக்கும் விட­யங்கள் பொது வெளிக்கு வரு­வது, பின்­னணி தொடர்­பிலும் சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கி­றது.தேரரின் கூற்றை மெய்ப்­ப­டுத்­து­வ­தற்கு உளவுத் துறை­யினர் முற்­ப­டு­கின்­ற­னரா என்ற கேள்­வி­யையும் பலர் எழுப்­பு­கின்­றனர்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து, தேசிய பாது­காப்பை உறுதி செய்­வதன் அவ­சி­யத்தை மையப்­ப­டுத்தி, தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ பத­விக்கு கொண்­டு­வ­ரப்­பட்டார்.

அவர் அவ்­வாறு பத­வி­யேற்­றதன் பின்­ன­ணியில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் அர­சியல் தேவைக்­காக அரங்­கேற்­றப்­பட்­டதா எனும் சந்­தேகம் இன்னும் பொது வெளியில் உள்­ளது. இத­னா­லேயே அவ்­வப்­போது பாரா­ளு­மன்­றத்­திலும் அது தொடர்­பி­லான குரல்கள் ஒலிப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அவ்­வாறு கருத்து தெரி­வித்த பலரும் சி.ஐ.டி. விச­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­மையும் மறுப்­ப­தற்­கில்லை.

இவ்­வா­றான நிலையில், தற்­போது நாட்டின் நிலை­மையை ஆராயும் போது, ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் மக்­களின் செல்­வாக்கை தொடர்ந்து இழந்து வரு­வதை வெளிப்­ப­டை­யா­கவே காண­மு­டி­கி­றது. வாழ்க்கைச் சுமை கார­ண­மாக அன்­றாடம் மக்கள் வீதி­க­ளி­லேயே அர­சாங்­கத்தை விமர்­சிக்கும் அள­வுக்கு அர­சாங்கம் மீதான எதிர்ப்­புகள் வெளிக் கிளம்ப ஆரம்­பித்­து­விட்­டன.

இவ்­வா­றான நிலையில், வழமை போல எல்லா விட­யங்­க­ளையும் மறைக்க, அல்­லது மறக்கச் செய்ய இன­வாதம் அல்­லது அடிப்­ப­டை­வாதம் எனும் ஆயு­தத்தை மீள கையி­லெ­டுக்க அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்­துடன் முயற்­சிகள் இடம்­பெ­று­கி­றதா எனவும் சந்­தேகம் இல்­லா­ம­லில்லை.

எனவே தற்­போ­தைய சூழலில், ஏதேனும் தாக்­கு­தல்கள் அல்­லது வேறு அசம்­பா­வி­தங்கள் இடம்­பெறப் போவ­தாக தக­வல்கள், சான்­றுகள் இருப்பின் அதனை உளவுப் பிரி­வுகள் வினைத் திற­னாக கையாண்டு, பாது­காப்பு தரப்­புடன் இணைந்து அதனை தடுக்­கவும் சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
ஜனா­தி­ப­தியால் பொது மக்கள் பாது­காப்பு கருதி, நாடு முழு­வதும் ஆயுதம் தரித்த முப்­ப­டை­யி­னரும் அழைக்­கப்­பட்டு அவர்­க­ளது சேவையும் தற்­போது பொது அமைதி தொடர்பில் பெறப்­பட்­டி­ருக்க கூடிய சூழலில் அவ்­வாறு ஒன்று சேர்ந்து செயற்­ப­டு­வது ஒன்றும் சவா­லான விட­ய­மல்ல.

அதனை விடுத்து, பகுப்­பாய்­வி­னூ­டாக உறுதி செய்ய முன்னர், அல்­லது விசா­ர­ணைக்கு முன்னர் உளவுத் தகவல் எனும் பெயரில் தக­வல்­களை சமூ­கங்­க­ளி­டையே பரவச் செய்ய வழி­வ­குத்து, உளவுச் சேவைகள் தமது வங்­கு­ரோத்து நிலையை வெளிப்­ப­டுத்தக் கூடாது.
இந் நாட்­களில் தேசிய உளவுச் சேவையை பூர­ண­மாக மறு­சீ­ர­மைப்­புக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக நாம் அறி­கிறோம். அதன்­படி அரச உளவுச் சேவையின் உள்­ளக கட்­ட­மைப்பில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பாது­காப்பு தியுள்ளதாக நாம் அறிகிறோம். அதன்படி அரச உளவுச் சேவையின் உள்ளக கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய உளவுச் சேவையின் பிரதானியாக அதன் பணிப்பாளர் செயற்படுவதுடன் அந்த பதவியை பணிப்பாளர் நாயகம் என தரமுயர்த்துவது தொடர்பிலும் அவரின் கீழ் 3 பணிப்பாளர்களை நியமிக்கவும் திட்­ட­மி­டப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
தற்போதைய தேசிய உளவுச் சேவையின் கட்டமைப்பின் பிரகாரம், பொலிசாருக்கு அதில் அதிக இட ஒதுக்கீடு காணப்படுகின்ற போதும், புதிய வியூகத்தின் அடிப்படையில் அதில் இராணுவத்தினர் அதிகமாக தேசிய உளவுச் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு, பிரதான பதவிகளும் இராணுவத்தினரிடையே பகிரப்படும் வண்ணம் மாற்றங்கள் நிகழலாம் என தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறான நிலையில், நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக ஆட்சிக்கு வந்தவர்கள், மீண்டுமொரு தாக்குதலுக்கோ, அசம்பாவிதத்துக்கோ, இனவாத, மதவாத மோதல்களுக்கோ வழி அமைத்துவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.